Tuesday, January 26, 2016

புகழுக்குறிய பெருமானார் (ஸல்) அவர்கள்


وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ (القرآن 94:4)
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) உமது புகழை நாம் உயர்த்திவிட்டோம். (அல்குர்ஆன் 94:4)
வாழ்நாள் எல்லாம் பேதாதே வள்ளல் நபிகளின் புகழ்பாட; ஆயிரம் கவிஞர்கள் பிறந்தாலும் அவர் புகழ் பாடி முடியாது என (மர்ஹும் E.M. நாகூர் ஹனீஃபா) அவர்களது பாடலுக்க ஏற்ப உலகில் எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்தாலும் ‘’புகழுக்குறிய பெருமானார் (ஸல்)’’ அவர்களின் புகழாரத்திற்கு எல்லை இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் திருக்குர்ஆன் விரிவுரைகளிலும், நபிமொழி கிரந்தங்களிலும் குவிந்து கிடக்கின்ற மாண்புளில் சிலவற்றை மட்டும் அள்ளித்தருகிறேன். நபியின் புகழை வாசிங்கள்! நபியுல்லாஹ்வை நேசியுங்கள்!!


 عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم « أنه سأل جبريل عن هذه الآية، ورفعنا لك ذكرك قال: قال الله عز وجل: إذا ذكرت ذكرت معي » قال ابن عباس: يريد الأذان، والإقامة، والتّشهد، والخطبة على المنابر، فلو أن عبداً عبد الله وصدقه في كل شيء، ولم يشهد أن محمداً صلى الله عليه وسلم لم ينتفع من ذلك بشيء وكان كافراً، وقال قتادة: رفع الله ذكره في الدّنيا والآخرة فليس خطيب ولا متشهد ولا صاحب صلاة إلا ينادي أشهد أن لا إله إلا الله، وأن محمداً رسول الله وقال الضحاك: لا تقبل صلاة إلا به ولا تجوز خطبة إلا به. وقيل رفع ذكره بأخذ ميثاقه على النّبيين، وإلزّامهم الإيمان به، والإقرار بفضله، وقيل رفع ذكره بأن قرن اسمه باسمه فيقوله « محمد رسول الله » وفرض طاعته على الأمة بقوله: {أطيعوا الله وأطيعوا الرسول} ومن يطع الله ورسوله فقد فاز، ونحو ذلك مما جاء في القرآن وغيره من كتب الأنبياء.  (تفسير الخازن) 

அபூஸயீதுல் குத்ரீ (ரளி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) உமது புகழை நாம் உயர்த்திவிட்டோம். (அல்குர்ஆன் 94:4) என்ற வசனத்தைக்குறித்து நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் கேட்டபோது, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் (அதற்கு இப்படி பதில்) கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான்: ‘’எனது பெயரை கூறினால் உம் பெயரையை சேர்த்தே கூறுகிறேன்’’.
இப்னு அப்பாஸ் (ரளி) கூறுகிறார்கள்: பாங்கிலும், இகாமத்திலும், அத்தஹித்திலும் மற்றும் (ஜும்ஆ) குத்பாவிலும் சேர்த்தே கூறப்படுகிறது. ஓர் அடியான் அல்லாஹ்வை வணங்கி, ஒவ்வொன்றிலும் அவனை உண்மை படித்துகின்றபோதும், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் திருத்தூதர் என்று சாட்சியம் கூறவில்லையானாலும்; அவர்களைக்கொண்டு பிரயோஜனம் அடையாவில்லையானாலும் அவர் காஃபிராவார்.
கதாதா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களது புகழை இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் அல்லாஹ் உயர்த்தியுள்ளான். (ஜும்ஆவின்) கதீபுக்கோ, (கலிமாவை ஏற்று) சாட்சியம் கூறுபவருக்கோ, மற்றும் தொழுகையாளிக்கோ வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் என்று கூறாமல் இருக்க முடியாது.
ளஹ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்: தொழுகையும் (ஜும்ஆ) குத்பாவும் அவரைக்கொண்டே தவிர ஏற்றுக்கொள்ளப்படாது.

நபிமார்களிடம் உடன்படிக்கை செய்ததைக்கொண்டும், ஈமானோடு அவரை இணைத்ததைக்கொண்டும், மற்றும் அவரது சிறப்பை உறுதிபடுத்துவதைக்கொண்டும் உயர்வாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர(நயிய)து பெயரை தனது (அல்லாஹ்வின்) பெயரோடு ‘’ முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’’ (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்) என்பதை இணைக்கப்பட்டுள்ளதைக் கொண்டும், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; அவனது திருத்தூதருக்கு வழிபடுங்கள் என்றும், அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும் வழிபட்டவர் வெற்றியடைந்துவிட்டார் என்பதால் தனது நபிக்கு அவரது உம்மத்தவர்கள் வழிபடுவது (பர்ள்) கட்டாய கடமை என்பதைக்கொண்டும், மற்றும் இதுமாதிரி குர்ஆனுலும் மற்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களிலும் கூறப்பட்டுள்ளதைக்கொண்டும் அவரது புகழ் உயர்வாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. (தஃப்ஸீருல் காஜின்)

விண்ணிலும் மண்ணிலும் உயர்வானவர்
رفعنا ذكرك عند الملائكة في السماء، وفي الارض عند المؤمنين، ونرفع في الآخرة ذكرك بما نعطيك من المقام المحمود، وكرائم الدرجات. (تفسير القرطبى, تفسير اللباب فى علوم الكتاب)  
வாணுலகில் மலக்குகளிடமும், மண்ணுலகில் முஃமின்களிடம் உமது புகழை உயர்த்தியுள்ளோம். ‘’மகாமுல் மஹ்மூது (புகழுக்குறிய இடம்) உமக்கு தருவதைக்கொண்டும்; சங்கையான படித்தரங்களைக்கொண்டும் மறுமையிலும் உமது புகழை உயர்த்துவோம். (தஃப்ஸீர் குர்துபீ, தஃப்ஸீர் லுபாப் பீ உலூமில் கிதாப்)

நபிமார்களின் தலைவரும் சுவனத்தின் முதன்மையானவரும்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم أَنَا أَكْثَرُ الأَنْبِيَاءِ تَبَعًا يَوْمَ الْقِيَامَةِ وَأَنَا أَوَّلُ مَنْ يَقْرَعُ بَابَ الْجَنَّةِ. (مسلم-505)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « آتِى بَابَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ فَأَسْتَفْتِحُ فَيَقُولُ الْخَازِنُ مَنْ أَنْتَ فَأَقُولُ مُحَمَّدٌ. فَيَقُولُ بِكَ أُمِرْتُ لاَ أَفْتَحُ لأَحَدٍ قَبْلَكَ ».(مسلم-507, منسد احمد-12420)

அனஸ் பின் மாலிக் (ரளி) அறிவிக்கிறார்கள்: மறுமைநாளில் அதிகமானவர்களால் பின்பற்றப்படும் நபி நானாவேன்; சுவனத்தின் கதவை தட்டுபவரில் முதன்மையானவரும் நானாவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-505)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் சுவர்க்க வாசலுக்க வந்து கதவை திறக்கும்படி கூறுவேன். (சுவனத்தின்) காவலாளி, நீங்கள் யார்? என்று கேட்பார். அதற்கு நான் முஹம்மது (ஸல்) என்பேன். உங்களைத் தவிர வேறு யாருக்காகவும் முதலாவதாக கதவை திறக்கக்கூடாது என நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என அ(வான)வர் கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-507, முஸ்னது அஹ்மது-12420)

புகழ் கொடிக்கும்-ஷஃபாஅத்துக்கும் சொந்தக்காரர்
عن جابر بن عبد الله رضي الله عنه : قال قال رسول الله صلى الله عليه و سلم : أنا أحمد وأنا محمد وأنا الحاشر الذي أحشر الناس على قدمي وأنا الماحي الذي يمحو الله بي الكفر فإذا كان يوم القيامة لواء الحمد معي وكنت إمام المرسلين وصاحب شفاعتهم. (معجم الكبير-1750)  
ஜாபிர் அப்துல்லாஹ் (ரளி) அறிவிக்கிறார்கள்: நான் அஹ்மது ஆவேன், நான் முஹம்மது (ஸல்) ஆவேன், நான் எழுப்பக்கூடியவன் ஆவேன். அதாவது மனிதர்கள் எனக்கு கீழ்தான் எழுப்பப்படுவார்கள், நான் அழிக்கக்கூடியவன் ஆவேன். அதாவது என்னைக்கொண்டுதான் குஃப்ரை அல்லாஹ் அழிப்பான். மறுமைநாளில் ‘’லிவாவுல் ஹம்து’’ (புகழ் கொடி) என்னிடமே இருக்கும். திருத்தூதர்(ரஸுல்)களுக்கு நானே தலைவராகவும்; அவர்களது ‘’ஷஃபாஅத்’’(பரிந்துரை)க்கு சொந்தக்காராகவும் நானே இருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுல் கபீர்-1750)

ஹபீபுல்லாஹ் அண்ணலார் (ஸல்)
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : اتخذ الله إبراهيم خليلا و موسى نجيا و اتخذني حبيبا. (بيهقى فى شعب الايمان-1494)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ், இப்ராஹீம் (அலை) அவர்களை கலீலா(தோழனா)கவும், மூஸா (அலை) அவர்களை நஜீயுல்லாஹ்வா(ரகசியம் பேசியவரா)கவும், மற்றும் என்னை ஹபீபுல்லாஹ்(நேசராக)வும் ஆக்கிக்கொண்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ ஷுஃபில் ஈமான்-1494)
கலீல்: தன்னுடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப்பெற்றுக்கொள்வார்.
ஹபீப்: அல்லாஹு தஆலாவே அவருக்குத் தேவையானவற்றை வழங்குவான்.
கலீல்: இவ்வுலகிலிருந்தே வானங்கள், பூமி அதனைத்தினுடைய ஆட்சியின் காட்சிகளை காண்பார்.
ஹபீப்: வானுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அல்லாஹ்வின் மாட்சிமை மிக்க ஆட்சியின் காட்சிகளை நேரடியாகக் காண்பார். (நூல்: காவத்திமுல் ஹிகம்)

மரியாதைக்குரிய மாமனிதர்
أَبُوهُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَأَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ وَأَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ ». (مسلم-6079, ترمذى-3148, ابوداؤد-4675, ابن ماجه-4308)

அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: ஆதம் (அலை) அவர்களது பிள்ளையினருக்கு மறுமை நாளில் நானே தலைவன் ஆவேன். கப்ரிலிருந்து வெளிகுவோரில் நானே முதன்மையனவராவேன், ஷஃபாஅத் (பரிந்துரைப்போரில்) நானே முதன்மையானவராவேன் மற்றும் ஷஃபாஅத் ஏற்கப்படுவோரில் நானே முதன்மையானவராவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-6079, திர்மிதி-3148, அபூதாவுது-4675, இப்னுமாஜா-4308)

 أنا أشرف الناس حسبا ولا فخر وأكرم الناس قدرا ولا فخر. (جامع الاحاديث-5633,كنز العمال-32044)
பரம்பரையால் நான் சிறந்த மனிதர் ஆவேன். அதில் பெருமை என்பது கிடையாது; கண்ணியத்தால் நான் சங்கையான மனிதர் ஆவேன். அதில் பெருமை என்பது கிடையாது. (ஜாமிவுல் அஹாதீஸ்-5633, கன்ஜுல் உம்மால்-32044)

அர்ஷின் அருகாமை புருஷர்
 عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم فأكسى حلة من حلل الجنة ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق يقوم ذلك المقام غيري. (ترمذى-3611)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: சுவர்க்க ஆபரணங்களில் ஓர் ஆபரணம் எனக்கு அணிவிக்கப்படும். பிறகு, (அல்லாஹ்வின்) சிம்மாசனத்தின் வலப்பக்கத்தில் நான் நிற்பேன். படைப்பினங்களில் வேறு எவரும் என்னைத் தவிற அந்த இடத்தில் நிற்க மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-3611)

மற்ற நாபிமார்களைவிட ஆறு தனிச்சிறப்புகள்
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « فُضِّلْتُ عَلَى الأَنْبِيَاءِ بِسِتٍّ أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ لِىَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِىَ الأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِىَ النَّبِيُّونَ. (مسلم-1195, ترمذى-1153, ابن حبان-2313)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: ஏனைய நபிமார்களைவிட ஆறு (தனிச்)சிறப்புகள் நான் வழங்கப்பட்டுள்ளேன். 1. ஜவாமிவுல் கலிம், (குறைவான வார்த்தைகளில் நிறைவான கருத்தை பேசும் ஆற்றல்), 2. (எதிரிகள் என்னை கண்டால்) அஞ்சுமாறு இறை உதவி, 3. பூமியின் எல்லா இடங்களும் தூய்மையானதும்; மஸ்ஜிதும் (தொழும் இடமாக) ஆக்கப்பட்டிருத்தல். 4. கனீமத் (போரில் கிடைத்த பொருட்கள்) ஹலாலாக ஆக்கப்பட்டிருத்தல். 5. முழு படைப்பினத்திற்கும் பொது நபியாக இருத்தல். 6. என்னைக் கொண்டே நபித்துவம் நிறைவு செய்யப்படிருத்தல் (ஆகிய ஆறு தனிச்சிறப்புகள் அவை) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-1195, திர்மிதி-1153, இப்னு ஹிப்பான்-2313)

தவ்ராத்தில் (ஸல்) முன்னறிவிப்பு
عن عبد الله بن سلام, قال : مكتوب في التوراة صفة محمد وصفة عيسى ابن مريم يدفن معه قال فقال أبو مودود وقد بقي في البيت موضع قبر. (ترمذى-3617)
அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரளி) அறிவிக்கிறார்கள்: தவ்ராத்தில் முஹம்மது (ஸல்) அவர்களது வர்ணனையும்; ஈஸா பின் மர்யம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்படுவரார் என்ற அவர்களது வர்ணனையும் எழுதப்பட்டுள்ளது. அபூ மவ்தூது கூறுகிறார்: (நபியவர்கள் அடங்கியுள்ள ஆயிஷா (ரளி) அவர்களது) வீட்டில் ஒரு கப்ரின் இடம் உள்ளது. (திர்மிதி-3617)


எனவே, கண்ணியமிக்க கண்ணல் நபி (ஸல்) அவர்களை நமது உயிரைவிடவும் மேலாக மதித்து அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள பெருமைகளை போற்றிப் புகழ்ந்து அவர்களது உம்மத்தவர்களில் சிறந்தவர்களாக, நபியின் நெருக்கம் பெற்றவர்களாக, அவர்களது ஷஃபாஅத்தை பெற்று அவர்களோடு சுவர்க்கம் செல்பவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புறிவானாக! ஆமீன்!!

No comments:

Post a Comment