Monday, July 13, 2015

தக்பீர் முழக்கம்



அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து.
நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈதுப் பெருநாளில் ஈதுகாவிலும், பள்ளிவாசல்களிலும், தெருக்களிலும், தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும், அலைபேசிகளிலும், ஒலிக்கின்ற ஒரே சங்கநாத முழக்கம் தக்பீர் முழக்கமேஆகும். அந்த கண்கொள்ளா காட்சியை ஒவ்வொரு வருடமும் நாம் பார்ப்பதோடு நின்றுவிடாமல் அல்லாஹ்வின் கிருபையால் நாமும் அதில் பங்கெடுத்து அந்த சங்கநாத முழக்கத்தை முன்மொழிந்து அல்லாஹ்வை பெருமைப்படுத்துகிறபோது நமக்குள் ஒரு பூரிப்பும், இறையச்சத்தின் உணர்வும் காணமுடிகிறது. அன்றைய தினத்தில் அந்த தக்பீர் முழக்கத்தைத்தான் அல்லாஹ் விரும்புகிறான். எனவேதான் அதை செய்யும்படியாக தனது அடியார்களுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளான்.

وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (القرآن 2:185)
அல்லாஹ் கூறினான்: நீங்கள் (ரமளானின்) எண்ணிக்கையை நிறைவு செய்யுங்கள்; உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் (தக்பீர் முழக்கத்தினால்) பெருமைப்படுத்துங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக திகழலாம். (அல்குர்ஆன் 2:185)

ولهذا أخذ كثير من العلماء مشروعية التكبير في عيد الفطر من هذه الآية. (تفسير ابن كثير)
இந்த அடிப்படையிலேயே, நோன்புப் பெருநாளில்தக்பீர்சொல்வதற்கு ஆதரவாக இந்த வசனத்தைப் பல அறிஞர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ:"زَيِّنُوا أَعْيَادَكُمْ بِالتَّكْبِيرِ" (المعجم الكبير للطبرانى-160)  

அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: உங்களுடைய ஈதை தக்பீரைக்கொண்டு அலங்கறியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுல் கபீர்- 160)

حدثني المثني قال، حدثنا سويد بن نصر قال، أخبرنا ابن المبارك، عن داود بن قيس، قال: سمعت زيد بن أسلم يقول:"ولتكبروا الله على ما هداكم"، قال: إذا رأى الهلال، فالتكبيرُ من حين يَرى الهلال حتى ينصرف الإمام، في الطريق والمسجد، إلا أنه إذا حضر الإمامُ كفّ فلا يكبرِّ إلا بتكبيره.
தாவூது பின் கைஸ் (ரளி) அவர்கள், ‘’அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை பெருமைப்படுத்துங்கள்’’ (அல்குர்ஆன் 2:185) என்பது, (ஈகைத்திருநாளுக்கான ஷவ்வால்) பிறையை பார்த்தால், அப்போதிலிருந்து தக்பீரை துவங்கி, (தொழுகைக்காக செல்லும்போது) தெருவிலும், பள்ளிவாசலிலும் கூறிக்கொண்டே இருங்கள். இமாம் (ஈது தொழுகையை நடந்த வந்துவிட்டால்) தக்பீரை நிறுத்திவிடுங்கள். அப்போது இமாம் மட்டுமே தக்பீர் முழங்கவேண்டும் என ஜைது பின் அஸ்லமிடமிருந்து தான் கூறக்கேட்டதாக கூறினார்கள்.

حدثني المثني قال، حدثنا سويد قال، أخبرنا ابن المبارك قال: سمعت سفيان يقول:"ولتكبِّروا الله على ما هداكم"، قال: بلغنا أنه التكبير يوم الفطر.
இப்னுல் முபாரக் (ரளி) அவர்கள், ‘’அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை பெருமைப்படுத்துங்கள்’’ (அல்குர்ஆன் 2:185) என்பது, ஈகைத் திருநாளில் தக்பீர் முழங்குவதாகும் என சுஃப்யான் (ரளி) அவர்களிடமிருந்து தான் கூறக்கேட்டதாகக் கூறினார்கள்.

حدثني يونس قال، أخبرنا ابن وهب قال، قال ابن زيد: كان ابن عباس يقول: حقٌّ على المسلمين إذا نظروا إلى هلال شوال أن يكبرِّوا الله حتى يفرغوا من عيدهم، لأن الله تعالى ذكره يقول:"ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم". قال ابن زيد: يَنبغي لهم إذا غَدوا إلى المصلَّى كبروا، فإذا جلسوا كبروا، فإذا جاء الإمام صَمتوا، فإذا كبر الإمام كبروا، ولا يكبرون إذا جاء الإمام إلا بتكبيره، حتى إذا فرغ وانقضت الصلاة فقد انقضى العيد. (تفسير الطبرى) 

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள், (ஷவ்வால்) பிறையை பார்த்தால் அப்போதிலிருந்து பெருநாள் தொழுகை முடிகின்றவரை முஸ்லிம்கள் தக்பீர் முழங்குவது கடமையாகும். ஏனெனில், ‘’அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை பெருமைப்படுத்துங்கள்’’ (அல்குர்ஆன் 2:185) எனக்கூறியுள்ளதாக கூறினார்கள்.

இப்னு ஸைது (ரளி) கூறுகிறார்கள்: அவர்(முஸ்லிம்)கள் பெருநாள் தொழுகைக்கு செல்லுகிறபோதும், பள்ளிவாசலில் அமருகிறபோதும், தக்பீர் முழங்கிக்கொண்டு இருக்கவேண்டும். இமாம் வந்துவிட்டால் நிறுத்திக்கொள்ளவேண்டும். இமாம் தக்பீர் முழங்கினால் இவர்களும் தக்பீர் முழங்கவேண்டும். இமாம் வந்த பிறகு அவர் மட்டுமே தக்பீர் முழங்க உரிமையானவர். தொழுகை முடிந்துவிட்டால் பெருநாளும் நிறைவு பெற்றுவிடும். (தஃப்ஸீர் தப்ரீ)

ويستحب التكبير ليلتى العيدين, ويستحب فى عيد الفطر من غروب الشمس ألى أن يحرم الأمام بصلات العيد, ويستحب ذلك خلف الصلوات وغيرها من الاحوال. ويكثر منه عند ازدحام الناس, ويكبر ماشيا وجالسا ومضطجعا, وفى طريقه, وفى المسجد, وعلى فراشه. (كتاب: الاذكار المنتخبة من كلام سيد الابرار-للامام الحافظ شيخ الاسلام شرف النووى)

இரு பெருநாட்களின் இரவிலும் தக்பீர் முழங்குவது (முஸ்தஹப்) விரும்பத்தக்கதாகும். ஈதுல் ஃபித்ர் நாளில் சூரியன் மறைந்தது முதல் இமாம் ஈது தொழுகையை துவங்கும் வரையில் தக்பீர் முழங்குவது விரும்பத்தக்கதாகும். மேலும், (ஈதுல் அள்ஹா) தொழுகைக்குப் பிறகும் மற்ற நேரங்களிலும் தக்பீர் முழங்குவதும் விரும்பத்தக்கதாகும். இந்த தக்பீரை மக்கள் அதிகமான இடங்களில் அதிகமாக முழங்கவேண்டும். நடக்கும்போதும், அமரும்போதும், படுத்திருக்கும்போதும், தெருக்களிலும், பள்ளிவாசலிலும் மற்றும் படுக்கையிலும் தக்பீர் முழங்கவேண்டும். (கிதாபுல் அத்கார் அல்முன்தகபது மின் கலாமி சையிதில் அப்ரார்- இமாம் ஷரப் அந்நவவீ ரஹ்)

عن ابن عمر أنه كان يغدو إلى المصلى يوم الفطر إذا طلعت الشمس فيكبر حتى يأتي المصلى يوم العيد ثم يكبر بالمصلى حتى إذا جلس الإمام ترك التكبير. (معرفة السنن 
والآثار للبيهقى-1870)

இப்னு உமர் (ரளி) அவர்கள் ஈகைத்திருநாளன்று சூரியன் உதித்ததுமுதல் தக்பீரை முழங்கிக்கொண்டு தொழுகைக்கு வருவார்கள். தொழுகையின் இடத்திலும் தக்பீர் முழுங்குவார்கள். இமாம் (ஈது குத்பா ஓத மிம்பரில்) அமர்ந்துவிட்டால் தக்பீரை நிறுத்திக் கொள்வார்கள். (மஃரிபதுஸ் ஸுனனி வல்ஆஸார்-1870)

தக்பீரின் சட்டங்கள்
لا خِلافَ بَيْنَ الْفُقَهَاء ِ فِي جَوَازِ التَّكْبِيرِ جَهْرًا فِي طَرِيقِ الْمُصَلَّى فِي عِيدِ الأَضْحَى ، أَمَّا التَّكْبِيرُ فِي عِيدِ الْفِطْرِ فَيَرَى جُمْهُورُ الْفُقَهَاءِ أَنَّهُ يُكَبَّرُ فِيهِ جَهْرًا وَاحْتَجُّوا بِقَوْلِهِ تَعَالَى : {وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ}. عن ابن عمر أنه كان إذا غدا إلى المصلى يوم العيد كبر ورفع صوته بالتكبير. (معرفة السنن والآثار للبيهقى-1869)

 وَذَهَبَ أَبُو حَنِيفَةَ إِلَى عَدَمِ الْجَهْرِ بِالتَّكْبِيرِ فِي عِيدِ الْفِطْرِ لأَنَّ الأَصْلَ فِي الثَّنَاءِ الإِخْفَاءُ لِقَوْلِهِ تَعَالَى {وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ} وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " خَيْرُ الذِّكْرِ الْخَفِيُّ ". وَلأَنَّهُ أَقْرَبُ مِنَ الأَدَبِ وَالْخُشُوعِ ، وَأَبْعَدُ مِنَ الرِّيَاء. (الموسوعة الفقهية)

ஈதுல் அள்ஹா (தியாகத்திருநாளில்) தொழுகைக்கு செல்லும் வழியில் சப்தமிட்டு தக்பீர் முழங்குவதில் அறிஞர்களுக்கு மத்தியில் எந்த கருத்து வேருபாடும் இல்லை. அவ்வாரே, ஈதுல் ஃபித்ர் (ஈகைத்திருநாளில்) ‘’அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை பெருமைப்படுத்துங்கள்’’ (அல்குர்ஆன் 2:185) என்ற வசனத்தை ஆதாரமக் கொண்டு பெரும்பாலான அறிஞர்கள் தக்பீரை சப்தமாகவே முழங்கவேண்டும் எனக்கூறுகின்றனர். இப்னு உமர் (ரளி) அவர்கள் ஈது தொழுகைக்கு செல்லும்போது சப்தமாக தக்பீரை முழங்கிக்கொண்டு செல்வார்கள். (மஃரிபதுஸ் ஸுனனி வல்ஆஸார்-1869)

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களிடம், ஈதுல் ஃபித்ர் (ஈகைத்திருநாளின்) தக்பீரை உரத்த குரலன்றி மெதுவாகவே கூறவேண்டும், ஏனெனில் புகழ்ச்சியின் அசல் பணிவாகும். அல்லாஹ்வும், (நபியே!) உம்முடைய மனதிற்குள் பணிவுடனும் பயத்துடனும் காலையிலும் மாலையிலும் உரத்த குரலன்றி (மெதுவாக) உம்முடைய இறைவனைத் தியானம் செய்வீராக! (அல்குர்ஆன் 7:205) என்றே கூறுகிறான். மேலும் நபி (ஸல்) அவர்கள், திக்ருகளில் சிறந்தது உரத்த குரலன்றி மெதுவாக செய்வதாகும் எனக்கூறியுள்ளார்கள் (அல்பினாயா ஷரஹுல் ஹிதாயா -இமாம் ஐனி (ரஹ்) 2:858) மெதுவாக திக்ரு செய்வது ஒழுக்கத்தையும் பணிவையும் நெருக்கமாக்கி முகஸ்துதியை தூரமாக்கி வைக்கிறது. (மவ்ஸுஅதுல் ஃபிக்ஹிய்யா)

அபூ மூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். நாங்கள் மேடான பகுதியில் ஏறும்போது 'அல்லாஹுஅக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீரை சப்தமிட்டுக்) கூறலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'மக்களே! உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்!) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, செவியுறுவோனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்' என்றார்கள். (புகாரி-6403, முஸ்லிம்-2704, திர்மிதி-3528)

ஆக, தக்பீரை தப்தமாகவோ, மெதுவாகவோ கூறவேண்டும் என்பதற்கு அவரவர் தத்தமது ஆதாரங்களை முன்வைத்துள்ளனர். எனவே, இதை இமாம்களின் ஆய்வாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர கருத்து மோதல்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எனெனில், அனைவரும் தக்பீர் சொல்லுவதில் ஒரே கருத்தைத்தான் கொண்டுள்ளனர். என்பது கவனிக்கத்தக்கது. சப்தமாகவா? மெதுவாகவா? என்ற ஆய்வுதான் வேறுபடுகிறது.

தக்பீரை அனைவரும் முழங்குவோம்
عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ الْعِيدِ حَتَّى نُخْرِجَ الْبِكْرَ مِنْ خِدْرِهَا حَتَّى نُخْرِجَ الْحُيَّضَ فَيَكُنَّ خَلْفَ النَّاسِ فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ. (بخارى-971)

உம்மு அத்திய்யா (ரளி) அறிவிக்கிறார்கள்: பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச்செல்ல வேண்டுமெனவும் திரையினுள் இருக்கும் குமரிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக்கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்கு சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள். (புகாரி-971)

தக்பீர் சொல்வதால் கிடைக்கும் நன்மை என்ன?

مَنْ كَبَّرَ اللَّهَ مِائَةً بِالغَدَاةِ وَمِائَةً بِالعَشِيِّ لَمْ يَأْتِ فِي ذَلِكَ اليَوْمِ أَحَدٌ بِأَكْثَرَ مِمَّا أَتَى إِلاَّ مَنْ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَى مَا قَالَ. (سنن الترمذى-3538)

காலையிலும் மாலையிலும் நூறு தடவை தக்பீர் ஓதியவரைவிட அல்லது அதைவிட அதிகமாக ஓதியவரைவிட வேறு எவரும் (நாளை) மறுமைநாளில் அதிக நன்மையைக் கொண்டுவர முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-3538)

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَحَبُّ الْكَلاَمِ إِلَى اللَّهِ أَرْبَعٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ. لاَ يَضُرُّكَ بَأَيِّهِنَّ بَدَأْتَ. (صحيح مسلم-5724)
சும்ரத் பின் ஜுன்துப் (ரளி) அறிவிக்கிறாரகள்: சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் ஆகிய நான்கு வார்த்தைகள் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானவை ஆகும். அவைகளில் எதை (முதலில்) ஆரம்பித்தாலும் பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-5724)

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لأَنْ أَقُولَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ أَحَبُّ إِلَىَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ. (ترمذى-3597)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: சூரியன் உதிக்கும் நாளில் எனக்கு மிகவும் பிரியமானது ‘’சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்’’ எனச் சொல்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-3597)

عن أنس : أن رسول الله صلى الله عليه و سلم مر بشجرة يابسة الورق فضربها بعصاه فتناثر الورق فقال إن الحمد لله وسبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لتساقط من ذنوب العبد كما تساقط ورق هذه الشجرة. (ترمذى-3533)

அனஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு காய்ந்த இலைகளுடைய மரத்தை கடந்து செல்லுகிறபோது, தனது கைதடியால் அடித்தார்கள். இலைகள் உதிர்ந்தன. நிச்சயமாக, ‘’வல்ஹம்து லில்லாஹி, சுப்ஹானல்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்’’ என்பது இந்த மரத்திலிருந்து இலைகளை உதிர வைத்ததைப்போல் அடியானின் பாவங்களை உதிர வைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-3533)


எனவே, ரமளான் முழுவதும் நோற்ற நோன்பிற்கு அல்லாஹ்வின் சன்மானத்தைப் பெறும் நாளான ஈதுல் ஃபித்ரி(ஈகைத்திருநாளி)ல்,உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்!’ (அல்குர்ஆன் 74:3) என்ற இறைவசனத்திற்கு ஏற்ப அதிகமாக தக்பீர் முழங்கி அவனைப் பெருமைப்படுத்தி, ஈதுப் பெருநாளையும் தக்பீரால் அழங்கறித்து அவனது அருளுக்குச் சொந்தக்காரர்களாக ஆகுவதற்கு முழு முயற்ச்சி செய்வோமாக! வீடுகளிலும், பள்ளிகளிலும், வீதிகளிலும் ஒலிக்கட்டும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து’’ என்ற அவனது சங்கநாத தக்பீர் முழக்கம். (அல்லாஹ்வே மிகப் பெரியவன்

No comments:

Post a Comment