சிரியா, سورية)ஃ ( سوريا (இதன் பழைய பெயர் 'ஷாம்' என்பதாகும்) இதன் தலைநகரம் டமாஸ்கள் (دمشق) ஆகும். இது மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இஸ்ரேலையும் ஜொர்டானையும், கிழக்கில் இராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
இந்நாட்டின் வரலாறு பல நாகரிங்களை உள்ளடக்கியது. கி.மு 3000-ல் சிரியா, எப்ளா எனும் நாகரிகத்தின் முக்கியப் பிறப்பிடமாக இருந்தது. எகிப்தியர்கள், சுமேரியர்கள், அசிரியர்கள், பாபிலோனியர்கள் எனப் பலரும் எகிப்தைக் கைப்பற்றி ஆட்சி செய்திருக்கிறார்கள். பின்னர் பாரசீகர்களாலும் ஆளப்பட்டுள்ளது. கி. பி. 640-ல் இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்டு உமைய்யா (உமவிய்யூன்) வம்சா வழியினராலும் பின்னர் அப்பாஸிய (அப்பாஸிய்யூன்) வம்சா வழியினராலும் ஆளப்பட்டது. இறுதியாக, கி.பி. 750-ல் பிரெஞ்சுக்காரர்களாலும் ஆளப்பட்டது. 1936-ல் மக்கள் ஆணை மூலம் சுதந்திரம் பெற்று எகிப்தின் ஒரு பகுதியாக இருந்தது. 28 செப்டம்பர் 1961-ல் சுதந்திரத்தால் (الجمهورية العربية السورية) சிரியா சுதந்திர நாடாக உருவானது.
இந்நாட்டின் வரலாறு பல நாகரிங்களை உள்ளடக்கியது. கி.மு 3000-ல் சிரியா, எப்ளா எனும் நாகரிகத்தின் முக்கியப் பிறப்பிடமாக இருந்தது. எகிப்தியர்கள், சுமேரியர்கள், அசிரியர்கள், பாபிலோனியர்கள் எனப் பலரும் எகிப்தைக் கைப்பற்றி ஆட்சி செய்திருக்கிறார்கள். பின்னர் பாரசீகர்களாலும் ஆளப்பட்டுள்ளது. கி. பி. 640-ல் இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்டு உமைய்யா (உமவிய்யூன்) வம்சா வழியினராலும் பின்னர் அப்பாஸிய (அப்பாஸிய்யூன்) வம்சா வழியினராலும் ஆளப்பட்டது. இறுதியாக, கி.பி. 750-ல் பிரெஞ்சுக்காரர்களாலும் ஆளப்பட்டது. 1936-ல் மக்கள் ஆணை மூலம் சுதந்திரம் பெற்று எகிப்தின் ஒரு பகுதியாக இருந்தது. 28 செப்டம்பர் 1961-ல் சுதந்திரத்தால் (الجمهورية العربية السورية) சிரியா சுதந்திர நாடாக உருவானது.
சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சன்னி முஸ்லிம்கள் ஆவர். மேலும் 16 மூ ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10 மூ கிருத்தவர்களையும் கொண்டுள்ளது. 1963-ல் இருந்து 'பஷருல் அஸது' கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 1970 முதல் நாட்டின் தலைவர் அஸாது குடும்பத்தை சேர்ந்தவராக காணப்படுகிறார். 1970 முதல் 2000 வரை சரியாக 30 ஆண்டுகள் ஹாஃபிஸ் அல்அஸது ஆட்சி செய்தார். அவருடை மரணத்திற்கு பிறகு அவருடைய மகன் பஷருல் அஸது ஆட்சி பொருப்பேற்றார்.
வரலாற்றில், சிரியா இன்றைய லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்றவற்றையும்¢ ஜோர்தான் பகுதிகளையும் சிரியாவின் வடகிழக்கு மாநிலமான அல்-ஜஸீரா பகுதியை நவீன சிரியாவின் ஏனைய பகுதிகளையும் கொண்டதாக கருதப்பட்டது. இதன்படி, பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது. 1967-ல் இஸ்ரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர் இஸ்ரேல் சர்ச்சைக்குரிய 'கோகான்' மேடுகளை கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் பின்னர் துருக்கியுடன் 'அடேய்' மாநிலம் தொடர்பான சர்ச்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது.
1967-ல் எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் ஏற்பட்ட போரில் எகிப்துடன் இணைந்து சிரியாவும் தற்காப்பு யுத்தம் செய்தது. இப்போரின் தோல்வியால் சிரியா நாட்டிடமிருந்து 'கோலன் ஹைட்ஸ்' என்ற இடத்தை இஸ்ரேல் கைப்பற்றியது.
சமீபத்தில் அந்த நாட்டில் மதச்சாற்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று சன்னி இஸ்லாமியப் போராளிகள் இராணுவத்தினர்களோடு போராடி வருகின்றனர். இதன் பின்னணியில் சன்னிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்நாட்டு போரை ஆரம்பத்து ரகசிய முறையில் ஒரு சர்வதிகார நாடு இரட்டை வேடம் போட்டு வருகிறது. இங்குள்ள எண்ணை வளங்களையும் பிடிப்பதற்கு ரசாயனக் குண்டு தாக்குதலை கண்டித்து சிரியாவை விசாரணை செய்வோம் என்று கூறி சிரியாவின் மீது போர் பிரகடணம் அறிவித்து நீதி சொல்வதைப்போல, பிடிக்க சதி திட்டம் தீட்டியுள்ளது. அந்த செய்திகளை எல்லாம் அப்படியே உங்கள் பார்வைக்கு கீழே தந்துள்ளேன் பாருங்கள். முழுமையாக படித்துவிட்டு யார் என்ன செய்கிறர்கள். யார் மூலம் சிரியாவிற்கு ஆபத்து என்பதை நீங்களே தெரிந்துக் கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.
சிரியாவில் ரசாயனக் குண்டு தாக்குதல் - 1300 பேர் பலி!
டமாஸ்கஸ்: சிரியாவில் போராளிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் 1300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சிரியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் உள்நாட்டு போரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க அஞ்சப்படுகிறது. இந்நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராளிகள் வசமிருந்த பகுதிகளில் நேற்று அரசுப்படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த ரசாயனக்குண்டுகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 1300 க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டதாக போராளிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் மூச்சுத்திணறி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள்இ பெரியவர்கள் என பொதுமக்கள் மருத்துவமனைகளில் நிரம்பியிருப்பதாகவும் மேலும் இதுபோன்று பல இடங்களில் நடத்தப்பட்ட ரசாயனக்குண்டு தாக்குதலுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பஸ்ஸார் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சிரியா விவகாரம் தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்இ சம்பவ இடங்களுக்கு விசாரணையாளர்கள் செல்ல உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த தாக்குதல் குறித்து உண்மை நிலையை கண்டறிய உடனடியாக சம்பவப் பகுதிகளுக்கு ஐ.நா. குழுவினர் விரைய 'அரப் லீக்' வலியுறுத்தியுள்ளது.
சிரியா ரசாயனத் தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா?: அதிர்ச்சி தகவல்!
டமாஸ்கஸ்: சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா செயல்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் ரசாயனக் குண்டுகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 1300 க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களை நடத்தியதே அமெரிக்காவாகத்தான் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் 'டெய்லி மெயில்' பத்திரிகை கடந்த 6 மாதத்துக்கு முன்பு வெளியிட்ட ஒரு தகவல் இதை தெளிவுபடுத்தியுள்ளது. அதில் 'அமெரிக்காவின் மூத்த இரண்டு ராணுவ அதிகாரி மற்றும் பிரிட்டீஷ் ராணுவ ஒப்பந்தகாரருக்கிடையேயான மின்னஞ்சல் பரிமாற்றத்தை மேற்கோள்காட்டி சிரியாவில் ரசாயன தாக்குதலை நடத்தி விட்டு அதை சிரியா அரசு மீது பழிபோட்டு ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறதா?' என்ற தலைப்பில் அந்த செய்தி வெளியிட்டிருந்தது. இதை யாகூவின் இந்திய இணையதளமும் மறுபிரசுரம் செய்திருந்தது.
பொதுமக்கள் மீதான ரசாயன தாக்குதல்களை தாம் நடத்தவில்லை என்று சிரியா மறுத்துள்ள வேளையில் இச்சம்பவத்தை வைத்து சிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை மேற்க்கொள்ள அமெரிக்காவும்இ பிரிட்டனும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிரியா: மூன்று நாள்கள் குண்டு வீச அமெரிக்கா திட்டம்?!
வாஷிங்டன் : சிரியா மீதான இராணுவ நடவடிக்கையில் மூன்றே நாள்கள் வான்வழியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வீச அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் திட்டமிட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்க மக்களவை உளவுப்பிரிவு வல்லுநர் குழுவொன்று சிரியாவில் இரசாயனத் தாக்குதல் பற்றிய 13 காணொளிக் காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்கள்.
சிரியா மீதான தாக்குதலை எப்படி நடத்துவது? என்பது குறித்து அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்ட்டகனில் அதிகாரிகள் ஆலோசித்து இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாம். சிரியா மீது போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் 72 மணி நேரம் (3 நாட்கள்) குண்டு வீசப்படும் என்றும் முதலில் 50 இடங்களை இலக்கு வைத்து இருந்தாலும் தற்போது மேலும் சில இடங்களைச் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் இரு மூத்த அதிகாரிகள் இந்தத் தகவல்களை உறுதி செய்வதாக அமெரிக்க நாளேடு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கிடையில்இ சிரியாமீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் மக்கள் போராட்டம் வலுத்துவருகிறது. ஆங்காங்கே பல இடங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. எனினும் மக்கள் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல் சிரியாமீது தாக்குதல் நடத்துவதற்கான ஒப்புதலைப் பெற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது செனட்டில் சிரியா மீதான தாக்குதலுக்கு 25 உறுப்பினர்களின் ஒப்புதலே ஒபாமாவுக்குக் கிடைத்துள்ளது. 272 ஓட்டுகள் பெற்றாலேஇ சிரியா மீதான தாக்குதல் விசயத்தில் அடுத்த நிலைக்கு ஒபாமாவால் செல்ல முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவைத் தாக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் எனக்குத் தேவையில்லை : ஒபாமா
வாஷிங்கடன்: ரசயான ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கையில்இ ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் எனக்குத் தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார்.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரிஇ புரட்சிப் படையினர் அரசுக்கு எதிராக போராடி வருகின்றர். சிரிய அரசுஇ போராட்டக் காரர்களை இராணுவத்தைக் கொண்டு கடுமையாக தாக்கி வருகிறது. இந்நிலையில்இ கடந்த மாதம் 21ஆம் தியதி டமாஸ்கஸ் அருகே அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது ரசாயண குண்டுகள் வீசப்பட்டது. இத்தாக்குதலில் பெண்கள்இ குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா சிரியாவை தாக்கப் போவதாக அறிவித்து அதனுடைய நேச நாடுகளின் ஆதரவைக் கோரியது. ஆனால்இ இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைக்கு போதிய ஆதரவு கிடைக்காமல் தீர்மானம் தோல்வியடைந்தது. எனவே சிரியா மீதான தாக்குதலுக்கு தனது ஆதரவு இல்லை என்று இங்கிலாந்து அறிவித்து விட்டது.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் மட்டுமே அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ராணுவ உயரதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்திய பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசும் போது, ' ரசாயன ஆயுதங்களை சிரிய அரசு பயன்படுத்தியதால்இ அதற்கு அதிபர் பஷார் அல் ஆசாத் பதில் சொல்ல வேண்டும். உலகளவில் ரசாயன ஆயுதம் தடை செய்யப்பட்ட நிலையில், சிரியாவின் செயல் இவ்விசயத்தை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது.
எனவே, அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளது. இதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் எனக்குத் தேவையில்லை. எல்லா நாடுகளும் இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. நட்பு நாடுகளின் ஆதரவு இருந்தாலே போதுமானது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே தேவைப்படுகிறது' என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிரிய அரசு, 'ஒபாமா அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதே அவர் தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது' என்று கூறியிருக்கிறது.
அமெரிக்கா தாக்குதலுக்கு தயார் - பீதியில் சிரியா மக்கள் லெபனானில் தஞ்சம்
மஸ்னா: சிரியா மீது தாக்குதல் நடத்தப்போவதை அமெரிக்கா உறுதி செய்ததையடுத்து சிரியா மக்கள் தங்கள் அண்டை நாடான லெபனானுக்கு அகதிகளாக செல்ல ஆரமித்துள்ளனர்.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சிரியா நாட்டு அதிபர் ஆசாத் பஷ்ஷாருக்கு எதிராக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். இச்சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் போராளிகள் பகுதியில் சிரியா பாதுகாப்பு படையினர் இரசாயன விஷக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் குழந்தைகள் முதியோர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்ததை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் பொதுமக்களை கொன்றுகுவிக்கும் சிரியாவை அடக்க அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது உறுதி என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனையடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் சிரியா நாட்டை சூழ்ந்துள்ளன. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயாராகவுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
சிரியாவின் சிறப்புகள்
وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ آيَةً وَآوَيْنَاهُمَا إِلَى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ (القرآن 23:50)
மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்¢ அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுக்கள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம் (அல்குர்ஆன் 23:50)
عن سعيد بن المسيب في قوله تعالى: {وَآوَيْنَاهُمَا إِلَى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ} ، قال: هي دمشق. (رواه ابن ابى حاتم)
'வ ஆவ்னாஹுமா இலா ரப்வதின் தாதி கராரின் வமயீன்' என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிற இடமாவது, (சிரியாவின் தலைநகரான) 'டமாஸ்கஸ்' ஆகும் என ஸயீது பின் முஸய்யப் ரளி அவர்கள் (விளக்கம்) கூறுகிறார்கள். (இப்னு அபீ ஹாத்தம்)
حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ, فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ سَمِعْتُ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ فَقَالَ مُعَاوِيَةُ هَذَا مَالِكٌ يَزْعُمُ أَنَّهُ سَمِعَ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ. (صحيح البخارى – 7460)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கட்டளையை நிலை நிறுத்தும் ஒரு குழுவினர் என் சமுதயாத்தாரிடையே இருந்துகொண்டேயிருப்பர். அவர்களை நம்ப மறுப்பவர்களும் சரி, அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களும் சரி, அவர்களுக்கு தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருந்துக்கொண்டிருக்க அல்லாஹ்வின் கட்டளை (மறுமைநாள்) வந்துவிடும். இதை முஆவியா (ரளி) அவர்கள் அறிவித்தபோது அங்கிருந்த மாலிக் பின் யுகாமிர் (ரஹ்) அவர்கள், முஆத் பின் ஜபல் (ரளி) அவர்கள், இந்தக் குழுவினர் ஷாம் (சிரியா) நாட்டில் இருப்பார்கள் என்று சொல்ல நான் கேட்டேன் என்று கூற, முஆவியா (ரளி) அவர்கள் இதோ, இந்த மாலிக் இந்தக் குழுவினர் ஷாம் (சிரியா) நாட்டிலிருப்பார்கள் என்று முஆத் அவர்கள் சொன்னதாகக் கூறுகின்றார்கள் என்றார்கள். (புகாரி-7460
சிரியா, யமன் நாடுகளின் பரக்கத்திற்காக நபி ஸல் அவர்கள் செய்த துஆ
عن بن عمر قال: ذكرت النبى صلى الله عليه وسلم: 'اللهم بارك لنا فى شمامنا وفى يمننا'. (رواه البخارى – 7094)
இப்னு உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், இறைவா! எங்கள் 'சிரியா' நாட்டிற்கு பரக்கத் செய்வாயாக! எங்கள் 'யமன்' நாட்டிற்கு பரக்கத் செய்வாயாக என்று பிரார்த்தனைச் செய்தார்கள். (நூல்: புகாரி- 7094)
சிரியாவில் வசித்த சஹாபி அபுத்தர்தா ரளி
عن علقمة قال: قدمت الشام, فصليت ركعتين, ثم قلت: اللهم يسرلى جليسا صالحا. فاتيت قوما فجلست اليهم, فاذا شيخ قد جاء حتى جلس الى جنبى, قلت: من هذا؟ قالوا: ابو الدرداء. فقلت: انى دعوت الله ان يسر لى جليسا صالحا, فيسرك لى. قال: ممن أنت؟ قلت: من اهل الكوفة. (بخارى – 3742)
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சிரியா நாட்டிற்குச் சென்றிருந்தேன். (அங்கு பள்ளிவாசலுக்குச் சென்று) இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். பிறகு, 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு' என்று பிரார்த்தித்தேன். பிறகு ஒரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது முதியவர் ஒருவர் வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். நான் 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள் (இவர்தான் நபித்தோழர்) அபுத்தர்தா' என்று பதிலளித்தார்கள். நான், அபுத்தர்தா ரளி அவர்களை நோக்கி, 'எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். ஆகவே, அவன் உங்களை எனக்குக் கொடுத்திருக்கிறான்' என்று சொன்னேன். அதற்கு, அபுத்தர்தா ரளி அவர்கள், 'நீங்கள் எந்த ஊர்க்காரர்? என்று கேட்டார்கள். நான் 'கூஃபாவாசி என்று பதிலளித்தேன். (புகாரி – 3742)
இறை ராணுவத்தைக்கொண்டு காக்கப்படும் பூமி
عن زيد بن ثابت قال: كنا عند رسول الله صلى الله عليه وسلم نؤلف القرآن من الرقاع فقال رسول الله صلى الله عليه وسلم: طوبى للشام, فقلنا لاى ذلك يارسول الله؟ قال: ان ملائكة الرحمة باسطة اجنحتها عليها. (ترمذى – 3954)
ஜைத் பின் ஸாஃபித் ரளி அவர்கள் கூறியதாவது: ஒரு சமயம், நபி ஸல் அவர்களின் சமூகத்தில் ஓலையிலிருந்து திருக்குர்ஆன் பிரதிகளை நாங்கள் கோர்வை செய்துக்கொண்டிருந்தோம். அப்போது, நபி ஸல் அவர்கள், 'சிரியாவிற்கு நற்செய்தி உண்டாகட்டும்! என்றார்கள். எதனால் யாரசூலல்லாஹ்? என நாங்கள் (விளக்கம்) கேட்டபோது, அந்நாட்டின் மீது ரஹ்மதுடைய மலக்குகள் தங்களது இறக்கைகளை விறித்த வண்ணம் உள்ளனர் என நபியவர்கள் விளக்கம் அளித்தார்கள்.' (நூல்: திர்மிரி – 3954)
عن ابى ذر الغفار قال: قال رسول الله صلى الله عليه وسلم: 'الشام ارض المحشر والمنشر'. (طبرانى – 14914)
அபூதர்ருல் கிஃப்பாரி ரளி அவர்கள் கூறியதாவது: 'சிரியா நாடு (மறுமைக்காக) மக்கள் ஒன்று திரட்டப்பட்டு எழுப்பப்படும் பூமியாகும் என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.' (நூல்: தப்ரானி – 14914)
قال رسول الله صلى الله عليه وسلم: ستخرخ نار من حضر موت او من نحو بحر حضر موت قبل يوم القيامة تحشر الناس قالوا يارسول الله فما تأمرنا؟ قال: عيلكم بالشام. (ترمذى – 2217)
'மறு உலகிற்கு மக்கள் எழுப்பப்படுவதற்கு முன்பு (உலக அழிவு நாளில்) 'ஹள்ர மவ்த்' என்ற நாட்டிலிருந்தோ அல்லது அந்த இடத்திலுள்ள கடல் பகுதியிலிருந்தோ ஒரு நெருப்பு புறப்படும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.' அப்போது, யாரசூலுல்லாஹ்! எங்களுக்கு என்ன ஆணையிடுகிறீர்கள்? எனத்தோழர்கள் கேட்டபோது, 'அந்நேரத்தில் சிரியாவில் இருந்துக்கொள்ளுங்கள் என விளக்கம் கூறினார்கள்.' (திர்மிதி – 2217)
உலக அழிவுநாளின் குழப்பபத்திலிருந்து பாதுகாப்பதில் சிறந்த நாடு சிரியா
عن ابى الدرداء ان رسول الله صلى الله عليه وسلم قال: ان فسطاطا المسلمين يوم الملحمة, بالغوطة الى جانب المدينة يقال لها: دمشق, من خير المدائن الشام. (ابوداود – 4298)
அபுத்தர்தா ரளி அவர்கள் கூறியதாவது: 'முஸ்லிம்கள் அடைக்களம் பெறும் நாளின் கோட்டையாவது, டாமஸ்கஸ் நகரை ஒட்டியிருக்கக்கூடிய 'கூத்தா' (புhழரவய) என்ற நகரமாகும். இதுவே சிரியாவின் நகரங்களில் சிறந்தாகும்' என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது – 4298)
சிரியாவின் கூத்தா நகரம்
இது சிரியாவின் தலைநகரான டாமஸ்கஸை ஒட்டியுள்ள பண்டைய நகரங்களில் பசுமையான, காய்கறிகளையும் கனிகளையும் வழங்கும் ஒரு நகரமாகும். தொழில் துறை வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் சமயத்தில் அந்நாட்டு மக்களின் ஜீவாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தேவையான விவசாய பூமியாக தொண்மையான காலத்திலிருந்தே இருந்து வருவதாக வரலாற்று குறிப்பு நமக்கு உணர்த்துகிறது. எனவேதான், அந்த நகரமே முஸ்லிகள் தஞ்சம் அடைவதற்கு சிறந்த நகரம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சிரியாவில் இறங்க இருக்கும் ஈஸா அலை
عن النواس بن سمعان قال: ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال ذات غدات.... فبينما هو كذلك اذ بعث الله المسيح ابن مريم, فينزل عند المنارة البيضاء شرقى دمشق. (مسلم – 2937)
நாவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளி அவர்கள் கூறியதவாது: 'ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி குறிப்பிட்டார்கள். (அவனைப்பற்றி நீண்டதோரு விஷயங்களை கூறினார்கள்.) இதற்கிடையே, 'மர்யமின் மைந்தர் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) டமாஸ்கஸ் (திமஷ்க்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளை கோபுரத்தில் இறங்குவார்கள் என கூறினார்கள்.' (முஸ்லிம் - 2937)
மதீனாவில் சிரியா திசை நோக்கி கொள்ளப்படும் தஜ்ஜால்
عن ابى هريرة ان رسول الله صلى الله عليه وسلم قال: 'يأتى المسيح من قبل المشرق, همته المدينة, حتى ينزل دبر احد, ثم تصرف الملائكة وجهه قبل الشام, وهنالك يهلك. (مسلم – 1380)
அபூஹுரைரா ரளி அவர்கள் கூறினார்கள்: '(இறுதி நாள் நெருங்கும்போது) மஸீஹுத் தஜ்ஜால் கிழக்குத் திசையிலிருந்து மதீனாவைக் குறிவைத்து வந்து 'உஹத்' மலைக்குப் பின்னால் இறங்குவான். பின்னர், வானவர்கள் அவனது முகத்தை சிரியா திசை (வடக்கு) நோக்கித் திருப்பிவிடுவார்கள். அங்குதான் அவன் மடிவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்'. (முஸ்லிம் - 1380)
சிரியாவில் இரு ஷஃபாஅத்தை பெறு
عن عبد الله بن عمر, ان مولاة له اتته, فقالت: اشتد على الزمان, انى اريد ان اخرج الى العراق. قال: فهلا الى الشام؟ ارض المنشر واصبرى لكاع, فانى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: 'من صبر على شدتها ولأوائها كنت له شهيدا او شفيعا يوم القيمة'. (رواه الترمذى – 3918)
அப்துல்லாஹ் பின் உமர் ரளி அவர்கள் கூறியதவாது: 'அவர்களுடைய அடிமைப்பெண் ஒருவள், (எஜமானே!) எனக்கு இங்கு வாழ்வது மிகக்கடுமையாக இருக்கிறது. நான் இராக் நாட்டிற்கு செல்ல நாடுகிறேன் என்றாள். அதற்கு, அப்துல்லாஹ் பின் உமர் ரளி அவர்கள், நீர் ஏன் சிரியா செல்லக்கூடாது? ஏனெனில், அது மறுமைக்காக எழுப்பப்படும் பூமியாகும். மேலும், (அங்கு சென்று) வாய் பேசாமல் பொருத்திரு! 'எவர் சிரியாவின் கஷ்டத்தையும் நெருக்கடியையும் பொருத்துக்கொள்வாரோ அவருக்காக நாளை மறுமையில் நான் சாட்சியாக இருப்பேன் அல்லது பரிந்துரை செய்வேன் என நபி ஸல் அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் எனக்கூறினார்கள்.' (திர்மிதி – 3918)
சத்தியத்திற்காக இறுதிவரை போராடக்கூடிய போராளிகள் இருப்பார்கள்
عن سعد بن ابى وقاص قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يزال اهل الغرب ظاهرين على الحق حتى تقوم الساعة (مسلم-3890)
ஸஃது பின் அபீ வக்காஸ் ரளி அவர்கள் கூறியதாவது: ' மேற்கு(சிரியா)வாசிகள் யுக முடிவு நாள்வரை உண்மைக்கு ஆதரவாகவே இருந்துக்கொண்டிருப்பார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.' (நூல்: முஸ்லிம் - 3890)
عن قرة بن اياس المزنى, قال: قال رسول الله صلى الله عليه وسلم: اذا فسد اهل الشام فلا خير فيكم, لا تزال طائفة من امتى منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة. (ترمذى – 2192)
குர்ரத் பின் இயாஸுல் முஜ்னீ ரளி கூறியதாவது: 'சிரியாவாசிகள் கெட்டவர்களாக ஆகிவிட்டால் உங்களுக்கு நன்மை என்பது கிடையாது. எனவே, என் சமூகத்தில் ஒரு கூட்டத்தினர் இறுதிநாள் வரை (சத்தியத்திற்காக) போராடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு உதவியும் கிடைக்கும். அவர்களுக்கு பின்னுள்ளவர்கள் அவர்களை எந்த தீங்கும் செய்துவிட முடியாது என நபி ஸல் அவர்கள் கூறினர்கள்'. (திர்மிதி – 2192)
சிரியாவிற்கு பொருளாதாரத் தடையா?
عن ابى النضرة قال: كنا عند جابر بن عبد الله, فقال: 'يوشك اهل العراق الا يجبى اليهم قفيزا ولا درهم. قلنا: من اين ذاك؟ قال: من قبل العجم. يمنعون ذاك. ثم قال: يوشك اهل الشام ان لا يجبى اليهم دينارا ولا مدى. فقلنا: من اين ذاك؟ قال: من قبل الروم. ثم اسكت هنية. ثم قال: قال رسول الله صلى الله عليه وسلم: يكون فى آخر الزمان خليفة يحثى المال حثيثا, لا يعده عددا. (مسلم - 2913)
அபூநள்ரா (ரஹ்) கூறியதவாது: நாங்கள் ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளி அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், 'இராக்வாசிகளிடம் (அவர்களின் அளவையான) கஃபீஸோ (அவர்களின் நாணயமான) திர்ஹமோ கொண்டுவரப்படாத நாள் விரைவில் வரப்போகிறது' என்று கூறினார்கள். நாங்கள், 'எங்கிருந்து கொண்டுவரப்படாது? என்று கேட்டோம். 'அரபியல்லாத பிறமொழி பேசுபவர்கள் அவற்றைத் தர மறுப்பார்கள்' என்று கூறிவிட்டு, பிறகு சிரியாவாசிகளிடம் தீனாரோ (அவர்களின் அளவையான) முத்யோ கொண்டுவரப்படாத நாள் விரைவில் வரப்போகிறது' என்று கூறினார்கள். நாங்கள், 'எங்கிருந்து கொண்டுவரப்படாது? என்று கேட்டோம். அதற்கு, ரோமர்களிடமிருந்து கொண்டுவரப்படாது' என்று கூறிவிட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் அவர்கள், 'என் இறுதிச் சமுதாயத்தில் ஓர் ஆட்சியாளார் (கலீஃபா) இருப்பார். அவர் எண்ணிப் பார்க்காமல் வாரி வழங்குவார் என்று கூறினார்கள்' என்றார்கள். (முஸ்லிம் - 2913)
சிரியாவை யாரும் வெற்றிகொள்ள முடியாது
عن عبد الرحمن بن سليمان قال: سياتى ملك من ملوك العجم, فيظهر على المدائن كلها الا دمشق. (ابوداود – 4639)
அப்துர் ரஹ்மான் பின் ஸுலைமான் ரளி அவர்கள் கூறினார்கள்: 'அரபு மொழி பேசத்தெரியாத அரசர்களில் ஒருவர் எல்லா (இஸ்லாமிய) நரகங்களை வெற்றிகொள்ள முற்பட்டாலும் டமாஸ்கஸை அவராள் வெற்றிகொள்ள இயலாது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது – 4639)
அவ்லிய்யாக்களைக் கொண்டு சிரியா பாதுகாக்கப்படும்
عن شريح بن عبيد قال: ذكر اهل الشام عند على وقيل: العنهم يا امير المؤمنين! قال: لا, أنى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: 'الابدال يكونون بالشام, وهم أربعون رجلا, كلما مات رجل ابدل الله مكانه رجلا, يسقى بهم الغيث, وينتصر بهم على الاعداء, ويصرف عن اهل الشام بهم العذاب. (مسند احمد)
ஷுரைஹ் பின் உபைத் ரளி கூறினார்கள்: 'அலி ரளி அவர்களிடம், சிரியா வாசிகளைப்பற்றி நினைவு கூறப்பட்டு, கலீபா அவர்களே! (அவர்களில் கெட்டவர்களுக்கு) எதிராக சாபமிடுவீராக! என்று கூறப்பட்டபோது, (அலி ரளி அவர்கள், நான் அவர்களை) சாபமிடமாட்டேன். ஏனெனில், 'சிரியாவில் அப்தால்(அவ்லியாக்)கள் (அப்தால் என்பது வலிமார்களின் உயர்ந்த படித்தரம் ஆகும்) நாற்பது நபர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் ஒருவர் மரணித்தாலும் அவருக்குப் பகரமாக மற்ற ஒருவரை அவரிடத்தில் அல்லாஹ் ஏற்படுத்துவான்.' மேலும், 'அவர்களுது திருமுகத்திற்காகத்தான் மழை பொழியும், அவர்களுக்காதத்தான் எதிரிகளுக்கு பாதகமாக (சிரியாவாசிகளுக்கு) உதவி செய்யப்படும், அவர்களுக்காகத்தான் சிரியாவாசிகளின் மீது இறங்க இருக்கின்ற இறை வேதனைகள் அகற்றப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுறுக்கிறேன் என்றார்கள்.' (முஸ்னது அஹ்மது)
சிரியா வாசிகளே ஆட்சி அதிகாரத்திற்கு தகுதியானவர்கள்
عن ابى هرير قال: قال رسول الله صلى الله عليه وسلم: 'الخلافة بالمدينة, والملك بالشام. (بيهقى فى دلائل النبوة)
அபூஹுரைரா ரளி அவர்கள் கூறினார்கள்: 'கிலாஃபத்திற்(அரசாட்சி)கு மதீனா வாசிகளும்¢ முலூகக்கிற்க்(அரசர்களுக்)கு சிரியாவாசிகளும் (பொருத்தமானவர்) ஆவர் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்'. (பைஹகி-தலாயிலுன் நூபுவ்வத்)
சர்வதேச தீவிரவாதியான அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளோடு சண்டையிட்டு அங்குள்ள வளங்களை பிடித்ததோடு மட்டுமல்லாமல், அந்நாடுகளில் தன்னுடைய நாணயத்தை அந்நாட்டின் நாணயங்களாக மாற்றி வருவதை நிதர்சனமாகப் பார்த்து வருகிறோம். அந்த அடிப்படையில்தான் சமீபத்தில் இராக்கை பிடித்தது. கூடிய விரைவில் இராக்கின் நாணயத்தை முடிக்கி தனது டாலரை கொண்டுவரும் என்பதையும், சிரியாவை தாக்க திட்டம் தீட்டியிருக்கிறது. அந்த நாட்டின் நாணயத்தை தனது நேச கிருஸ்தவ நாடான ரோம் முடக்க முயற்சி செய்யும் என்பதையும் மிகத்தெளிவாகவே அண்ணலாரின் நபிமொழி தெளிவு படுத்துகிறது.
எனவே, எத்துணை சக்திவாந்த வள்ளரசுகள் சிரியாவை தாக்க நினைத்தாலும் முடியாது. அந்தப் புணித பூமியை வல்லான் அல்லாஹ் பாதுகாப்பான். சர்வ வல்லமை படைத்தவனே! சர்வதிகார நாட்டின் தாக்குதலிருந்து சிரியாவையும் ஏனைய இஸ்லாமிய நாடுகளையும் மற்றும் முஸ்லிம்களையும் நீயே பாதுகாத்தருள் புறிவாயாக! முஸ்லிம்களுக்கு மத்தியில் அன்பை ஏற்படுத்துவாயாக!! ஒற்றுமை நிலைக்கச் செய்வாயாக!!! இஸ்லாம் எனும் அருட்பெரும் ஜோதியை அணையாமல் சுடர்விட்டு எரியச் செய்வாயாக!! கலிமாவை உலகெங்கும் ஓங்கச் செய்வாயாக! எதிரிகளை புரமுதுகிட்டு ஓடச்செய்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!!
No comments:
Post a Comment