Saturday, May 23, 2015

மனிதனின் ஆரம்பமும் முடிவும்


تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ, الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ (القرآن 67: 1-2)
(மனிதர்களே! வானம் பூமி ஆகிய) அனைத்தின் ஆட்சி எவன் கையில் இருக்கின்றதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவைகளைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.  உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன். (அல்குர்ஆன் 67:1-2)

இந்த வசனத்தில் முதலில் மவ்தையும் பிறகு ஹயாத்தையும் படைத்தாக சொல்கிறான். அது ஆலமுல் அர்வாஹில் நாம் படைக்கப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டி கூறுகிறான். எனவேதான் 'அல்இன்ஸான் ஹாதிஸுன்' மனிதன் இல்லாமையிலிருந்து உண்டானவன். எனவே ஆலமுல் அர்வாஹ் (ஆத்ம உலகம்) ஆலமுத் துன்யா (மண்ணுலகத்திற்கு) முன்பே உள்ளது ஆகும்.

{تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} الملك، فالملك والملكوت واحد في المعنى، كرحمة ورَحَمُوت، ورَهْبَة ورَهَبُوت، وجَبْر وجَبَرُوت. ومن الناس من زعم أن المُلْك هو عالم الأجساد والملكوت هو عالم الأرواح، والأول هو الصحيح، وهو الذي عليه الجمهور من المفسرين وغيرهم. (ابن كثير)
'தபாலகல்லதி பியதிஹில் முல்க்' முல்க் மலகூத் என்ற இரண்டும் அர்த்த்தில் ஒன்றே. ரஹ்மத் ரஹுமத் என்பதையும், ரஹ்பத் ரஹுபத் என்பதையும், ஜப்ர் ஜபரூத் என்பதையும் போல. மனிதர் சிலர், முல்க் என்பது ஆலமுல் அஜ்ஸாது (சரீர உலகம்) என்றும், மலகூத் என்பது ஆலமுல் அர்வாஹ் (ஆத்ம உலகம்) என்றும் கூறுகின்றனர். (முல்க் என்பது ஆலமுல் அஜ்ஸாது (சரீர உலகம்) என்ற) முதல் கருத்தே சரியானது. பெருவாரியான விரிவுரையாளர்களும் மற்றவர்களும் இக்கருத்தையை ஏகோபித்து கூறியுள்ளனர். (இப்னு கஸீர்)


நான்கு வகை உலகம்
1.   ஆலமுல் அர்வாஹ் ( عالم الارواح) ஆத்ம உலகம் 2. ஆலமுத் துன்யா ( عالم الدنيا) மண்ணுலகம் 3. ஆலமுல் பர்ஜக் ( عالم البرزخ) கப்ருலகம் 4. ஆலமுல் ஆகிரா ( عالم الآخرة) மறுஉலகம் ஆகிய நான்கு உலகங்களை மனிதன் பயணிக்கவேண்டும்.

1.     ஆலமுல் அர்வாஹில் ரப்புல் ஆலமீனுக்கு உருதிமொழி
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ (القرآن 7:172)

(நபியே!) உங்களது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து (அவர்களை நோக்கி) "நான் உங்கள் இறைவனாக இல்லையா?" என்று கேட்டதற்கு, "ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்" என்று அவர்கள் கூறியதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ஏனென்றால் (இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்" என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், (அல்குர்ஆன் 7:172)
  
ஆலமுல் அர்வாஹின் ஒரு காட்சி
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : لما خلق الله آدم مسح ظهره فسقط من ظهره كل نسمة هو خالقها من ذريته إلى يوم القيامة وجعل بين عيني كل إنسان منهم وبيصا من نور ثم عرضهم على آدم فقال : أي رب من هؤلاء ؟ قال : هؤلاء ذريتك فرأى رجلا منهم فأعجبه وبيص ما بين عينيه فقال : أي رب من هذا ؟ فقال : هذا رجل من آخر الأمم من ذريتك يقال له داود فقال : رب كم جعلت عمره ؟ قال ستين سنة قال : أي رب زده من عمري أربعين سنة فلما قضى عمر آدم جاءه ملك الموت فقال : أو لم يبق من عمري أربعون سنة ؟ قال : أو لم تعطها ابنك داود ؟ قال : فجحد آدم فجحدت ذريته ونسي آدم فنسيت ذريته وخطئ آدم فخطئت ذريته. (ترمذى-3076)

அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தபோது அவரது முதுகைத் தடவினான். இறுதிநாள்வரை அவருடைய வழித்தோன்றல்களில் யாரையெல்லாம்   அவன் படைப்பானோ அந்த  உயிர்கள் அனைத்தும் அவரது முதுகிலிருந்து கீழே விழுந்தன. அவர்களில் ஒவ்வொரு மனிதரின் இரு கண்களுக்கு இடையில் ஒளியை அல்லாஹ் ஏற்படுத்தினான். பிறகு அவர்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களிடம் காட்டினான். இறைவா! யார் இவர்கள்? என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்டார்கள். இவர்கள் உம்முடைய வழித்தோன்றல்கள் என அல்லாஹ் பதிலளித்தான்.

அவர்களில் ஒரு மனிதரை அவர் நன்கு கவனித்தார். அந்த மனிதருடைய இரு கண்களுக்கிடையே உள்ள ஒளியானது, ஆதம் (அலை) அவர்களை வியப்பிலாழ்த்தியது. இவர் யார்? ஏன்று கேட்டார்கள். இவர் உம்முடைய வழித்தோன்றல்களில் இறுதிக் காலத்தசை; சேர்ந்தவர். அவர் தாவூது   எனப்படுவார் என்று அல்லாஹ் கூறினான். ஆதம் (அலை) அவர்கள் இறைவா! அவருக்கு எத்தனை வயதை வழங்கியிருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் அறுபது ஆண்டுகள் என்று பதிலளித்தான். ஆதம் (அலை) அவர்கள், இறைவா! என் வயதில் நாற்பது ஆண்டுகளை அவருக்குச் சேர்த்து வழங்குவாயாக என்றார்கள். ஆதம் (அலை) அவர்கள் ஆயுள் முடிவுற்றபோது, அவர்களிடம் மரணத்தின் வானவர் (உயிரைக் கைப்பற்ற) வந்தார். என் வயதில் நாற்பது ஆண்டுகள் மீதமில்லையா? என்று கேட்க, அதற்கு வானவர், உங்கள் மகன் தாவூதுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டீர்கள் அல்லவா? என்று கூறினார்.

ஆனால் ஆதம் (அலை) அவர்கள் அதை மறுத்தார்கள். (இதைத்தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ஆதம் (அலை) அவர்கள் மறுத்தார்கள்¢ அவருடைய வழித்தோன்றல்களும் (அவரைப் பின்பற்றி) மறுத்துவிடுகிறார்கள். ஆதம் (அலை) அவர்கள் மறந்தார்கள்¢ அவருடைய வழித்தோன்றல்களும் மறந்துவிடுகிறார்கள். ஆதம் (அலை) அவர்கள் தவறிழைத்தார்கள்¢ அவருடைய வழித்தோன்றல்களும் தவறிழைத்துவிடுகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-3076)

ஆலமுல் அர்வாஹில் ரஹ்மத்துல் ஆலமீனுக்கு உருதிமொழி
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ (القرآن 3:81)

நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்" (என்று கூறி) "இதனை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "நாங்கள் (அதனை) அங்கீகரித்துக் கொண்டோம்" என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் "இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்" என்று கூறினான். (அல்குர்ஆன் 3:81)

மேலே கூறப்பட்டுள்ள இரண்டுவசனங்கள் மற்றும் நபிமொழி ஆகியவற்றின்படி ஆலமுல் அர்வாஹ் என்பது முதல் உலகம். ஆதில் மனிதர்களின் ஆத்மாவை ஆதம் (அலை) அவர்களின் முதுகந்தண்டிலிருந்து வெளியாக்கி தனது உலூஹியத்திற்கும் அண்ணலாரின் ரிஸாலத்திற்கும் எடுக்கப்பட்ட உறுதிமொழியை அல்லாஹ் தெளிவுபடுத்திக் காட்டுகிறான். லாயிலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்பது உலூஹியத்¢ முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (நபி முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்) என்பது ரிஸாலத் ஆகும்.  எனவே, இதுவே முதல் உலகம் என்பது உறுதியாகிறது.

2. ஆலமுதுன் துன்யா-மண்ணுலகம்
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ (القرآن 2:30) وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ (القرآن 2:36)

(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்" எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் "(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். அதற்கவன் "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" எனக்கூறிவிட்டான். (அல்குர்ஆன் 2:30)

(ஆகவே) நாம், 'நீங்கள் (இங்கிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள். உங்கிளில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு (குறிப்பிட்ட) காலம்வரை உங்களுக்கு பூமியில் வசிப்பிடமும் (அனுபவிக்க) வாழ்வாதாரமும் உண்டு' என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:36)

மனித கால்தடையம் இந்தியாவில்
عن ابن عباس رضى الله عنه: ان اول ما اهبط آدم (عليه السلام) الى ارض الهند. (مستدك حاكم)
இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஆதம் (அலை) அவர்கள் (சுவர்க்கத்திலிருந்து) முதலாவதாக இந்திய பூமியில்தான் இறங்கினார்கள்.' (நூல்: முஸ்தத்ரக் ஹாகிம்)

இந்தியாவில் இறங்கிய ஆதம் (அலை)
ونزل آدم (عليه السلام) على جبل من جبال الهند. (الهداية الى بلوغ النهاية) اهبط آدم (عليه السلام) بالهند وحواء (عليها السلام) بجدة. (ابن عساكر)  لما نزل آدم (عليه السلام) بسرنديب من الهند. (تفسير بحر المحيط)
'ஆதம் (அலை) அவர்கள் இந்திய மலைகளில் ஒரு மலையின் மீது (சுவர்க்த்திலிருந்து முதலாவதாக) இறங்கினார்கள்.' (நூல்: அல்ஹிதாயா இலா புலூகின் நிஹாயா) 'அதம் (அலை) அவர்கள் இந்தியாவிலும்¢ ஹவ்வா (அலை) அவர்கள் ஜிந்தாவிலும் (முதலாவதாக) இறங்கினார்கள்.' (நூல்: இப்னு அஸாகிர்) 'ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவின் 'ஸரன்தீப்' என்ற பகுதியில் இறங்கினார்கள்.' (நூல்: தஃப்ஸீர் பஹ்ருல் முஹீத்)

உலக ஆரம்பத்தில் நாடுகள் கிடையாது. எனவே, ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பகுதி இந்தியாவாகும். இந்தியாவிலிருந்து இலங்கையை தனி நாடாக பிறிக்கப்பட்ட பிறகு, இன்று அப்பகுதி இலங்கை நாட்டிற்க்குள் சென்றுவிட்டது. எனவே இது இரண்டாவது உலகம் ஆகும். இரண்டாவது உலகம்  இந்தியாவிலிருந்து துவங்கியது என்ற தகவல் ஆச்சரியமான ஒன்றுதான்.

உலக வாழ்வின் நிலை
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ (القرآن 57:20)

(மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண்பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிக்குக் களிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதைக் காண்கின்றான். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 57:20)

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ (القرآن 95: 4)
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்  95:4)

கருவறையில் மனிதனின் வடிவம்
وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ, ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ, ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ (القرآن 23: 12-14)
நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதரை களிமண்ணின் மூலச் சத்திலிருந்து படைத்தோம். பின்னர், அதனை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம். பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதனை (முழுமையான மனிதப்) படைப்பாக உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன். (அல்குர்ஆன்  23:12)

கருவறையில் முடிவு செய்யப்படுபவை
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يُرْسَلُ الْمَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ وَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ بِكَتْبِ رِزْقِهِ وَأَجَلِهِ وَعَمَلِهِ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ (مسلم-4781)

அப்துல்லாஹ் (ரளி) அறிவிக்கிறார்கள்: உண்மையை பேசியவரும் உண்மையை அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாடகள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவானா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார். (முஸ்லிம்-4181)

உலகில் எட்டிப் பார்க்கும் மனிதன்
وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا (القرآن 22:5) مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ, ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ.  (القرآن 80: 19-20)
ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தினோம். (அல்குர்ஆன்  22:5) ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனை படைக்கின்றான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான். பின்னர், அவனுக்கு  வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான். (அல்குர்ஆன்  80:19-20)

இஸ்லாமியனாகவே பிறக்கும் குழந்தைகள்
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه (صحيح البخارى-6599)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்:  'எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள்தாம் அவர்களை (இயற்கை மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-6599)

ஷைத்தானின் ஆதிக்கம்
قَالَ أَبُو هُرَيْرَةَ - رضى الله عنه - سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ « مَا مِنْ بَنِى آدَمَ مَوْلُودٌ إِلاَّ يَمَسُّهُ الشَّيْطَانُ حِينَ يُولَدُ ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ ، غَيْرَ مَرْيَمَ وَابْنِهَا » . (بخارى-3431) 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: 'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-3431)

குழந்தைப் பருவத்தில் தவறில்லை
عَنْ عَلِىٍّ, عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ: رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلاَثَةٍ عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِىِّ حَتَّى يَحْتَلِمَ وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ. (ابوداود-4405)

அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: 'தூங்குபவன் விழிக்கின்றவரையும், சிறுவன் பருவமடையும் வரையும், பைத்தியக்காரன் சரியாகும் வரையும் இம்மூவர் செய்யும் பாவங்கள் எழுதப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (அபூதாவூது-4405)

பருவமடைந்தவர்கள் அனுமதி கேட்க வேண்டும்
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (القرآن 57:20)
உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிடும் பட்சத்தில், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோரவேண்டும். (அல்குர்ஆன்  23:12)

குடும்ப தலைவர் பருவம்
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ (القرآن 4:34)
(ஆண், பெண் இருபாலாரில்) ஆண்பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண்பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன்  4:34)
வயோதிகப் பருவம்
وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْئًا (القرآن 22:5)
அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (அல்குர்ஆன்  22:5)

கண் மூடும் வேளையிலே
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ, وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ (القرآن 56: 83-85) وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ (القرآن 50:16)
(உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால், அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கின்றீர்கள். ஆயினும், நாம் அவனுக்கு உங்களைவிட மிக சமீபமாக இருக்கின்றோம். எனினும், நீங்கள் (நம்மைப்) பார்ப்பதில்லை. (அல்குர்ஆன்  56:83-85) பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்  50:16)

சாந்தி பெற்ற மனமே! சந்தோஷத்தோடு வா!
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ, ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً, فَادْخُلِي فِي عِبَادِي, وَادْخُلِي جَنَّتِي (القرآن 89: 27-30)
(எனினும், அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்)  "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்). (அல்குர்ஆன்  89:27-30)

எல்லோரும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும்


كُلُّ نَفْسٍ ذائِقَةُ الْمَوْتِ (القرآن 3:184)


ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்.  (அல்குர்ஆன்  3.185)

عن قتادة قال: كان رسول الله صلى الله عليه وسلم يقول: ان الله اذل بنى آدم بالموت وجعل الدنيا دار حياة ثم دار موت وجعل الآخرة دار جزاء ثم دار بقاء. (ابن ابى حاتم)
கதாதா (ரளி) அறிவிக்கிறர்கள்: ஆதமின் மகனை மரணத்தைக் கொண்டு அல்லாஹ் இழிவு படுத்துகிறான். உலகத்தை வாழ்க்கையின் வீடாவும்¢ மரணத்தின் வீடாவவும் ஆக்குகிறான். மறுமையை நற்கூலி வீடாகவும்¢ நிரந்த வீடாகவும் ஆக்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (தப்ஸீர் இப்னு அபீ ஹாத்தம்)

எனவே மரணத்தைக் கொண்டு மனிதனின் இரண்டாவது வாழ்க்கைப் பயணம் முடிவடைகிறது. இதில் யாருக்கும் விதிவிளக்கு இல்லை. இறைவனே இல்லை என்று சொல்பவர்கள்கூட மரணத்தை மறுப்பதில்லை. எனவே இரண்டாவது பயணத்தோடு மனிதனின் பயணம் முடிவதில்லை. ஆலமுல் பர்ஜக்-கப்ருலகப் பயணத்தை நோக்கி மனிதன் சென்றுவிட்டான். தொடரும்..................

3.   ஆலமுல் பர்ஜக் (கபுறுலகம்)
حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ,  لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ. (القرآن 23: 99-100)
அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு.  நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்" என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (யன்றி வேறில்லை.) அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் அதில் தங்கிவிடுவார்கள். (அல்குர்ஆன்  23.99-1௦௦)

قال مجاهد : البرزخ الحاجز ما بين الدنيا والآخرة . وقال محمد بن كعب : البرزخ ما بين الدنيا والآخرة ليسوا مع أهل الدنيا يأكلون ويشربون ولا مع أهل الآخرة يجازون بأعمالهم ، وقال أبو صخر : البرزخ المقابر لا هم في الدنيا ولا هم في الآخرة فهم مقيمون إلى يوم يبعثون. (تفسيرابن كثير)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'தடுப்பு' என்பது இம்மைக்கும் மறுமைக்கும் இடையிலான தடை என்று பொருள்.  முஹம்மது பின் கஃப் (ரஹ்) கூறுகிறார்கள்: 'பர்ஜக்' என்பது இவ்வுலகிற்கும் மறுவுலகிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையாகும். ஆங்குள்ளோர், உண்ணவும் பருகவும் செய்யும் உலகவாசிகளைப் போன்றோரும் அல்லர்.  தம் செயல்களுக்கு பிரதிபலன் வழங்கப்பெறும் மறுமைவாசிகளும் அல்லர். அபூஸக்ர் ஹுமைத் பின் ஜியாத் (ரஹ்) கூறுகிறார்கள்: 'பர்ஜக்' என்பது மண்ணறை வாழ்க்கையைக் குறிக்கும் அங்கு வசிப்போர் இவ்வுலகிலும் இல்லை¢ மறுவுக,pலும் இல்லை. (யுகமுடிவின்போது) எழுப்பப்படும் நாள்வரை அங்கேயே அவர்கள் தங்கியிருப்பார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

பர்ஜக் என்பது, ஒரு மனிதன் இறந்தபின் உடனே சந்திக்கும் வாழ்க்கை ஆகும். மறுமை நாளில் எழுப்பபடும்வரை இது நீடிக்கும். இதையே கப்றுடைய வாழ்க்கை¢ அல்லது இடைப்பட்ட வாழ்க்கை என்பர். இது மறுமை வாழ்வுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும். ஒவ்வொருவரின் வினைகளுக்குக்கேற்ப இன்பமோ துன்பமோ அளிக்கப்படும். ஒன்று நரகப் படுகுழியாக கப்று இருக்கும். அல்லது சொர்க்கச் சோலைகளில் ஒன்றாக இருக்கும். ஆக இது காத்திருப்பு நிலையாகும்.

ஆக, மனிதன் நான்கு உலகங்களை, மூன்று வாழ்க்கையை சந்திக்கிறான். 1.      ஆலமுல் அர்வாஹ் ( عالم الارواح) ஆத்ம உலகம் 2. ஆலமுத் துன்யா ( عالم الدنيا) மண்ணுலகம், இது செயல்படவேண்டிய, சம்பாதிக்க வேண்டிய உலகம். 3. ஆலமுல் பர்ஜக் ( عالم البرزخ) கப்றுலகம், இது இரு உலகங்களுக்கு இடையே வருகின்ற வாழ்க்கையாகும்.  4 ஆலமுல் ஆகிரா ( عالم الآخرة) மறுஉலகம் இதுதான், பிரதிபலன்- சொர்க்கம் அல்லது நரகம்- அளிக்கப்படும் உலகம் ஆகிய நான்காவது ஆகும்.

قال الجوهري: البرزخ الحاجز بين الشيئين. والبرزخ ما بين الدنيا والآخرة من وقت الموت إلى البعث، فمن مات فقد دخل في البرزخ (تفسير الطبرى)
ஜவ்ஹரி (ரஹ்) கூறுகிறார்கள்: ‘பர்ஜக்என்பது இரண்டு பொருட்களுக்கு மத்தியில் உள்ள ஒரு தடுப்பாகும். மேலும், பர்ஜக் என்பது, மரண நேரத்திலிருந்து எழுப்படும்வரை உலகிற்கும் மறுமைக்கும் இடைப்பட்டதாகும். எனவே, இறந்தவர் பர்ஜகில் நுழைந்துவிட்டர். (தஃப்ஸீர் தப்ரீ)  

கப்ரில் ரூஹு(உயிரு)ம், ஜிஸ்மு(உடலு)ம் வாழும்
وأعيدوه إلى الأرض ، فإني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى ، قال : فتعاد روحه في جسده. (تفسيرابن كثير)

கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் என்ன?
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ : اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ  مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا - زَادَ فِى حَدِيثِ جَرِيرٍ هَا هُنَا - وَقَالَ : وَإِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ حِينَ يُقَالُ لَهُ : يَا هَذَا مَنْ رَبُّكَ وَمَا دِينُكَ وَمَنْ نَبِيُّكَ. (صحيح مسلم-4755)
பர்ரா பின் ஆஜிப் (ரளி) அறிவிக்கிறார்கள்: கப்ருடைய வேதனையை விட்டும் (அல்லாஹ்விடம்) பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் இரணடு அல்லது மூன்று தடவை கூறினார்கள். மேலும், (அடக்கம் செய்தவர்கள்) திரும்புகின்ற காலடி சப்பத்தை மவ்தாக்கள் கேட்கின்றன. அப்போது அவர்களிடம், உன் இறைவன் யார்? உன் மார்க்கம் என்ன? உன் நபி யார்? (போன்ற கேள்விகள்) கேட்கப்படும் என்றும் கூறினார்கள். (முஸ்லிம்-4755)

கப்ரில் காட்சி தரும் கண்மனி நாயகம் (ஸல்)
عَنْ أَنَسٍ, عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَأَقْعَدَاهُ فَيَقُولَانِ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ (بخارى-1338, مسلم-2870,نسائى-2051, ابوداود-4752)
அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஓர் அடியாரின் உடலைக் கப்ர் (சவக்)குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையை நிச்சயமாக அவர் (மய்யித்) செவியுறுவார். அதற்குள் இரண்டு வானவர்கள் அவரிடம் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து, 'முஹம்மது (ஸல்) எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?' எனக் கேட்பார். அதற்கு 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என நான் உறுதிகூறுகிறேன்' என்பார். (புகாரி-1338, முஸ்லிம்-2870, நஸாயி-2051, அபூதாவூது-4752,)

عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَأَقْعَدَاهُ فَيَقُولَانِ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ (بخارى-1338مسلم-    2870نسائى-2051 ابوداود-4752)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: 'இறந்தவர் அல்லது உங்களில் (இறந்துவிட்ட) ஒருவர் மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டதும், அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையை நிச்சயமாக அவர் (மய்யித்) செவியுறுவார். அதற்குள், நீலநிறக் கண்கள் உடைய கறுப்புநிற வானவர்கள் இருவர் அவரிடம் வருகின்றனர். அவர்களில் ஒருவர் 'முன்கர்' என்றும் மற்றொருவர் 'நகீர்' என்றும் சொல்லப்படும். அப்போது அவர்கள் இருவரும், '(இதோ!) இந்த மனிதர் பற்றி நீ என்ன சொல்லிக்கொண்டிருந்தாய்?' என்று கேட்பார்கள். அதற்கு அவர், 'இவர்தான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள்' என்று கூறுவார்கள். (திர்மிதி-1071, அபுதாவூது-4752)
கப்ரே சுவர்க்கப் பூங்காவனம்
فَيُنَادِى مُنَادٍ مِنَ السَّمَاءِ : أَنْ قَدْ صَدَقَ عَبْدِى فَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ ». قَالَ : « فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا وَطِيبِهَا ». قَالَ : وَيُفْتَحُ لَهُ فِيهَا مَدَّ بَصَرِهِ. (ابوداود-4755)
என் அடியான் உண்மையைச் சொல்லிவிட்டான். எனவே, அவனுக்கு சுவர்க்கத்தின் விரிப்பை விரியுங்கள்; சுவர்க்கத்தின் கதவை திறந்து வையுங்கள்; மற்றும் சுவர்க்கத்தின் ஆடையை அனுவியுங்கள் என்று வானத்திலிருந்து அறிவிப்பவர் அறிவிப்பார். (அபூதாவூது-4755)
     
4.     ஆலமுல் ஆகிரத் மறுஉலக வாழ்க்கை
فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا (القرآن 17:104)  ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ (القرآن 23:16)
மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம். (அல்குர்ஆன்  17:104) அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள். (அல்குர்ஆன்  23:16)

கப்ரிலிருது மஹ்ஷாருக்கு எழுப்பப்படும்
عن سهل بن سعد قال قال رسول الله -صلى الله عليه وسلم-  يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة النقى ليس فيها علم لأحد. (بخارى-7233)
சஹ்ல் (ரலி) அறிவித்தார்:   (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (புகாரி-6521, முஸ்லிம் -2790)

விசாரணையின்றி சுவர்க்கம் செல்வோர்
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ الْعَبْسَمِيَّةِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ فِي صَعِيدٍ وَاحِدٍ ، فَيُسْمِعُهُمُ الدَّاعِي وَتُبْعِدُهُمُ الْبَصَرُ ، ثُمَّ يَقُومُ مُنَادِي فَيُنَادِي يَقُولُ : سَيُعْلَمُ أَهْلُ الْجَمْعِ الْيَوْمَ مَنْ أَوْلَى بِالْكَرَمِ ، فَيَقُولُ : أَيْنَ الَّذِينَ يَحْمَدُونَ اللَّهَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ ، فَيَقُومُونَ : وَهُمْ قَلِيلُونَ ، فَيُدْخَلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ ، ثُمَّ يَعُودُ فَيُنَادِي : أَيْنَ الَّذِينَ {لاَ تُلْهِيهِمُ تِجَارَةٌ وَلاَ بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ} [النور الْآيَةَ ، فَيَقُومُونَ وَهُمْ قَلِيلُونَ فَيُدْخَلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ ، ثُمَّ يَعُودُ فَيُنَادِي فَيَقُولُ : أَيْنَ الَّذِينَ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ , فَيَقُومُونَ وَهُمْ قَلِيلُونَ فَيُدْخَلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ ، ثُمَّ سَائِرَ النَّاسِ فَيُحَاسَبُونَ. (مسند اسحاق بن راهويه-2305)
அஸ்மா பின்தி யஜீதுல் (ரளி) அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் மனிதர்கள் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டப்படுவார்கள். அழைப்பாளரின் குரலை அவர்கள் கேட்பார்கள். அனைவரின் பார்வைக்கும் அவர்கள் தென்படுவார்கள். பின்னர் அழைப்பாளர் எழுந்து சென்று, 'பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் அல்லாஹ்வை புகழ்ந்தோர் எங்கே? என்று அழைப்பார். குறைவானவர்கள் எழுந்து வருவார்கள். அவர்கள் எவ்வித விசாணையும் இன்றி சுவர்க்கத்தில் நுழைவர். மறுபடியும், எவர்களுது வியாபாரமோ கொடுக்கல் வங்கலோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் திருப்பவில்லையோ அத்தகையோர் எங்கே? என்று அழைப்பார். குறைவானவர்கள் எழுந்து வருவார்கள். அவர்களும் எவ்வித விசாரணையும் இன்றி சுவர்க்கத்தில் நுழைவர். மறுபடியும், தங்களது படுக்கையிலிருந்து விளாவை உயர்த்தி(தஹஜ்ஜுது தொழுகையை நிறைவேற்றி)யோர் எங்கே? என்று அழைப்பார். குறைவானவர்கள் எழுந்து வருவார்கள். அவர்களும் எவ்விச விசாரணையும் இன்றி சுவர்க்கத்தில் நுழைவர். பிறகுதான் எனைய மனிதர்களுக்கு விசாரணை செய்யப்படும் என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள். (முஸ்னது இஸ்ஹாக் பின் ராஹவைஹி-2305)

மறுமை விசாரணை
عن سعيد بن عبد الله بن جريج عن ابي برزة الاسلمي قال : قال رسول الله صلى الله عليه و سلم لا تزول قدما عبد يوم القيامة حتى يسئل عن عمره فيم أفناه وعن علمه فيم فعل وعن ماله من أين اكتسبه وفيم أنفقه وعن جسمه فيم أبلا. (سنن الترمذى-2417)
 நாளை மறுமையில் கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது. அவைகள்: 1. வாழ்நாளை எப்படி கழித்தாய்? 2. கற்ற கல்வியைக் கொண்டு எவ்வாறு செயல்பட்டாய்? 3. பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டினாய்? 4. எப்படி செலவு செய்தாய்? 5. உடலை எதில் ஈடுபடுத்தினாய்? என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி- 2417)

நியாயத் தராசு
وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ (القرآن21:47  )
மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் (நிறுக்க) அதனையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.) (அல்குர்ஆன்  21:47)

நியாயத் தராசிடமிருந்து கடுகளவும் மறைக்கப்பட முடியாது
يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ (القرآن 31:16)
(பின்னும் லுக்மான் தனது மகனை நோக்கி) "என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 31:16)

عن أبي الدرداء : أن النبي صلى الله عليه و سلم قال ما شيء أثقل من ميزان المؤمن يوم القيامة من خلق حسن وأن الله ليبغض الفاحش البذيء. (ترمذى-2002)
அபுத்தர்தா (ரளி) அறிவிக்கிறர்கள்: மறுமை நாளில் முஃமினின் நியாயத் தராசை கனக்கக்கூடயது அழகிய நற்குணத்தைவிட வேறொன்றும் இல்லை. ஏனெனில், துற்குணமுள்ள, தீயவனின் மீது அல்லாஹ் கோபம் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறிஜனார்கள். (திர்மிதி-2002)

حدثني عمران بن حصين عن النبي صلى الله عليه و سلم قال : يخرج من النار قوم بشفاعة محمد صلى الله عليه و سلم فيسمون الجهنميين (مسند احمد-19911)
இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். முஹம்மது (ஸல்) அவர்களின் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளியேறி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் 'ஜஹன்னமிய்யூன்' (நரக விடுதலை பெற்றோர்) என்று பெயரிட்டு அழைக்கப்படுவார்கள். என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (முஸ்னத் அஹ்மது- 19911)

ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் நீர் அருந்துதல்
عن ثوبان عن النبي صلى الله عليه و سلم قال حوضي من عدن إلى عمان البلقاء ماؤه أشد بياضا من اللبن وأحلى من العسل وأكاوبيه عدد نجوم السماء من شرب منه شربة لم يظمأ بعدها أبدا. (ترمذى-2444)
(அல்கவ்ஸர் எனும்) என் தடாக(த்தின் விசால)மானது, (யமன் நாட்டிலுள்ள) ‘அதன்நகரத்திற்கும் (ஜோர்தானிலுள்ள) அம்மான் (எனும்) ‘அல்பல்காநகரத்திற்கும் இடையேயான பரப்பளவைக் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது; தேனைவிட இனிமையானது. விண்மின்களின் எண்ணிக்கையில் அதன் கோப்பைகள் இருக்கும். (ந்த்த் தடாகத்)திலிருந்து யார் ஒரு மிடறு நீர் அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-2444)

அஸ்ஸிராத் பாலத்தை கடந்து செல்வது
عن المغيرة بن شعبة قال : قال رسول الله صلى الله عليه و سلم شعار المؤمن على الصراط رب سلم سلم. (ترمذى-2432)
முகைரா பின் ஷுஃபா (ரளி) அறிவிக்கிறார்கள்: (நரகத்திலன் பாலமான) அஸ்ஸிராத் மீது (நடக்கையில்) முஃமின்களின் அடையாளம் ‘’என் இறைவா! காப்பாற்று! காப்பாற்று!! என்பதாகவே இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-2432)


மறுமை வாழ்வே நிரந்தரமானது
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا (107) خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا. (القرآن 18: 108-107)
எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதிகளில் விருந்தாளிகளாகத் தங்குவார்கள். அதில், அவர்கள் என்றென்றும் நிலைத்து விடுவார்கள். அதிலிருந்து வெளிப்பட அவர்கள் விரும்பவே மாட்டார்கள். (அல்குர்ஆன் 18:107-108)

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا لَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا. (القرآن 4:57)
(அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அடர்ந்த (நீங்காத) நிழலிலும் அவர்களை நாம் அமர்த்துவோம். (அல்குர்ஆன் 4:57)

أُوْلَئِكَ جَزَآؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ. (القرآن 3:136)
இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே! (அல்குர்ஆன் 3:136)

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُوْلَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ,  جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ. (القرآن 98:7-8)
ஆயினும், எவர்கள் (அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின் றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள "அத்ன்" என்னும் நிலையான சுவனபதியாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகின்றாரோ, அவருக்குத்தான் இத்தகைய பாக்கியம் கிடைக்கும். (அல்குர்ஆன் 98:7-8)

சொர்க்கமும் அதிலுள்ள இன்பங்களும்
عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَعْدَدْتُ لِعِبَادِىَ الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ وَلاَ أُذُنٌ سَمِعَتْ وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ. (مسلم-5438)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-5438)

சொர்கத்தின் சந்தையும் கூடும் சொர்க்கவாசிகளும்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ: إِنَّ فِى الْجَنَّةِ لَسُوقًا يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِى وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالاً فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا وَجَمَالاً فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ وَاللَّهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالاً. فَيَقُولُونَ وَأَنْتُمْ وَاللَّهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالاً. (مسلم-5448)
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!" என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்" என்று கூறுவர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-5448)

சொர்க்கவாசிகளின் அழகு
أَوَّلُ زُمْرَةٍ تَلِجُ الْجَنَّةَ صُوَرُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لاَ يَبْصُقُونَ فِيهَا وَلاَ يَمْتَخِطُونَ وَلاَ يَتَغَوَّطُونَ فِيهَا آنِيَتُهُمْ وَأَمْشَاطُهُمْ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَمَجَامِرُهُمْ مِنَ الأَلُوَّةِ وَرَشْحُهُمُ الْمِسْكُ وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ يُرَى مُخُّ سَاقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنَ الْحُسْنِ لاَ اخْتِلاَفَ بَيْنَهُمْ وَلاَ تَبَاغُضَ قُلُوبُهُمْ قَلْبٌ وَاحِدٌ يُسَبِّحُونَ اللَّهَ بُكْرَةً وَعَشِيًّا. (مسلم-5452)

சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினரின் முகங்கள் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிக்கும். சொர்க்கத்தில் அவர்கள் சளி உமிழமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். மலஜலம் கழிக்கவுமாட்டார்கள். அவர்களுடைய பாத்திரங்களும் (தலைவாரும்) சீப்புகளும் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களின் வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும்.
அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பர். அவர்களது காலின் எலும்பு மஜ்ஜைகூட (கால்) சதைக்கு அப்பாலிருந்து அவர்களது பேரழகின் காரணத்தால் வெளியே தெரியும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது. எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். (நன்றிக்காக) அவர்கள் காலையும் மாலையும் இறைவனை (தூயவன் என)த் துதிப்பார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-5452)

மவ்த்தை மவ்த்தாக்கப்படும்
عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "يؤتى بالموت يوم القيامة فيوقف على الصراط، المستقيم فيقال: يا أهل الجنة فينطلقون خائفين وجلين أن يخرجوا من مكانهم الذي هم فيه ثم يقال: يا أهل النار فينطلقون فرحين مستبشرين أن يخرجوا من مكانهم الذي هم فيه, فيقال: هل تعرفون هذا؟ فيقولون: نعم ربنا هذا الموت, فيأمر به فيذبح على الصراط ثم يقال للفريقين كلاهما: خلود ولا موت فيه أبدا" (صحيح ابن حبان-7450, بخارى-4730)
அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: மரணத்தை கொண்டு வந்து சிராதுல் முஸ்தகீம் என்ற பாலத்தில் நிறுத்தப்படும். பிறகு சுவர்க்கவாசிகளே! என்று அழைக்கப்படும். அவர்கள் இருக்கின்ற (சுவர்க்க) இடத்திலிருந்து வெளியேற பயந்துக்கொண்டே எட்டிப் பார்ப்பார்கள். பிறகு நரகவாசிகளே! ஏன்று அழைக்கப்படும். அவர்கள் இருக்கின்ற (நரக) இடத்திலிருந்து வெளியேற சந்தோஷமாக எட்டிப் பார்ப்பார்கள். (அவர்களிடம்) இது என்னவென்று உங்களுக்கு தெறியுமா? ஏன்று கேட்கப்படும். அதற்கவர்கள்ஆம் எங்கள் இறைவா! இதுதான் மரணம் என்பார்கள். அந்த மரணத்தை சிராதின் மீது வைத்து அறுக்க உத்தரவு போடப்படும். பிறகு இரு பிரிவினருக்கும் உங்கள் இடங்களிலேயே நிறந்தரமாக இருங்கள். இதற்கு பிறகு மரணம் என்பது கிடையாது என்று சொல்லப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னது இப்னு ஹிப்பான்-7450, புகாரி-4730)


எனவே, நாம் முதல் உலகமாகிய ஆலமுல் அர்வாஹை கடந்து இரண்டாம் உலகமாகிய ஆலமுத் துன்யாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆலமுத் துன்யா ஆலமுல் பர்ஜக் என்ற மூன்றாம் உலகிற்கும், ஆலமுல் ஆகிரா என்ற நான்காம் உலகிற்கும் ஒரு அமானிதமாக தரப்பட்ட வாய்ப்பாகும். எனவே இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு நல்லவர்களாக ஈமானோடும் இஸ்லாத்தோடும் மரணித்தால்தான் மற்ற இரண்டு உலகம் வெளிச்சமானதாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு நாம் பயணிக்க, இரண்டு உலகிற்கும் நம்மை நல்ல முறையில் தயார் படுத்திக்கொள்வோம். ஈருலகிலும் வெற்றியாளர்களாக சிறந்து விளங்க வல்ல ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் அருள் புறிவானாக!


No comments:

Post a Comment