என்னைப் பற்றி

22.10.1976-ல் லால்பேட்டையில் பிறந்தேன். 07.12.1997ல் சென்னை மாநகரத்தில் சிறந்து விளங்குகின்ற ஜமாலியா அரபுக் கல்லூரியில் ஆலிம் ஸனது (பட்டம்) பெற்றேன். அதே தருணத்தில்  சென்னை பல்கலைகழகத்தில் அப்ளலுல் உலமாவும் படித்தேன். ஆகையால் 1998-ல் அப்ளலும் உலமா பட்டம் பெற்றேன். (Arabic B.A.) பெரம்பூருக்கு அருகிலேயே உள்ள. G.K.M. காலனியில் மஸ்ஜிதே நூரியாவில் நான்கு வருடம் (1998-2002) இமாமத் செய்தேன். அந்த தருணத்திலேயே பகல் நேரங்களில் சென்னை பல்கலைகழகத்தில் M.A. அரபிக் 2001- ல் பட்டம் பெற்றேன். வண்டலூர் கிரஸன் பள்ளிக்கூடத்தில் ஒரு வருடம் அரபிக் Resident Tutor (மாணவர்களை கண்கானிப்பாளராக) பணியாற்றினேன். அப்போது அதே சென்னை பல்கலைகழகத்தில் 2001-2002-ல் M.Phil அரபிக் முடித்தேன். அதற்கு பிறகு, எனது சிறிய தந்தை மலேஷியாவில் மக்தபிற்கு ஒர் உஸ்தாது தேவை என்று என்னை அழைத்தர்கள். 7.05.2003-ல் மலேஷியாவில் கால் பதித்தேன். இங்கே ஒரு டிராவல்ஸ் மூலம் உம்ரா வழிகாட்டியாக அல்லாவின் கிருபையால் ஒவ்வொரு வருடமும் உம்ரா சென்று வருகிறேன். தற்சமயம் மதரஸா ஃபிர்தவ்ஸியாவில் மக்தப் உஸ்தாதாக பணியாற்றி வருகிறேன். என்னைப் பற்றி தெறிந்துக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டு என் Profile லை படித்தவர்கள் என் சேவை சிறக்க எனக்காக துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

No comments:

Post a Comment