Tuesday, April 21, 2015

قبر النبى صلى الله عليه وسلم روضة الشريفة وقبة الخضراء وتاريخها



1.            عن عبد الله بن زيد المازني ، رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال : ما بين بيتي ومنبري روضة من 
رياض الجنة. (بخارى-1195, سنن الكبرى للنسائ-776)

 2.         عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ ، عَنْ أَبِي بَكْرٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَا بَيْنَ بَيْتِي وَمُصَلاَّيَ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ. (مسند البزار-73

3.   عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه و سلم : ان ما بين منبري إلى حجرتي روضة من رياض الجنة وإن منبري على ترعة من ترع الجنة. (مسند احمد-15224)



4.  عن أبي هريرة ، رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال : ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي. (بخارى-1196, مسلم-3436, ترمذى-3915, نسائ-915, مسند احمد-7222, مؤطا-463, ابن حبان-3750, مسند البزار-8188, مسند ابى يعلى-118, سنن الكبرى للبيهقى-10581)

عَنْ عَمْرَةَ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ ثَلاَثَةَ أَقْمَارٍ سَقَطْنَ فِي حُجْرَتِي فَقَصَصْتُ رُؤْيَايَ عَلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، فَلَمَّا دُفِنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : هَذَا أَحَدُ أَقْمَارِكِ وَهُوَ خَيْرُهَا. (المستدرك-8192)

عَنْ عَائِشَةَ ، قَالَتْ : لَمَّا قُبِضَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَلَفُوا فِي دَفْنِهِ ، فَقَالَ أَبُو بَكْرٍ : سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا مَا نَسِيتُهُ ، قَالَ : مَا قَبَضَ اللَّهُ نَبِيًّا إِلاَّ فِي الْمَوْضِعِ الَّذِي يُحِبُّ أَنْ يُدْفَنَ فِيهِ ، ادْفِنُوهُ فِي مَوْضِعِ فِرَاشِهِ. (ترمذى-1018)

الحجرة الشريفة والقبور الطاهرة:
الحجرة الشريفة هى البيت الذى كان النبى صلى الله عليه وسلم يقيم فيه مع أم المؤمنين عائشة بنت أبى بكر الصديق رضى الله عنه, ويقع فى الجهة الشرقية الجنوبية من المسجد النبوى.

نبى هذا البيت مع بناء المسجد النبوى بالطين واللبن وجريد النحل, وغطى بمسوح الشعر, لا تزيد مساحته على 3050 م x 5 م, له باب من خشب العرعر أو الساج, يفتح على الروضة الشريفة فى المسجد.

توفى رسول الله صلى الله عليه وسلم فى هذه الحجرة,ودفن فيها من جهة القبلة, وظل الجزء الشمالى منها سكنا للسيدة عائشة رضى الله عنها.

وعندما توفى والدها الصديق رضى الله عنه, دفن خلف النبى صلى الله عليه وسلم ورأسه عند منكب النبى صلى الله عليه وسلم.

 ولما توفى عمر بن الخطاب رضى الله عنه دفن فيها ايضا خلف الصديق بذراع, ورأسه عند منكبه, وظلت الجهة الشمالية مسكنا للسيدة عائشة رضى الله عنها, بقية حياتها, وكان بينها وبين القبور ساتر يحجبها, وعندما توفيت عائشة رضى الله عنها, دفنت فى البقيع ولم تسكن الحجرة من بعدها.

وعلى مر التاريخ ظلت الحجرة الشريفة موضع عناية الخلفاء والسلاطين, ففى أمارة عمر بن عبد العزيز على المدينة (87-913 هـــ ⁄706-712 م) اعيد بناؤها وأحيطت القبور بجدار ذى خمسة أضلاع ليس له باب تشكل فى آخرها مثلثا على هذا النحو:

وفى عهد نور الدين زنكى (557هــ) أقيم حولها سور من الرصاص له أساس عميق.
وفى سنة 668 هــ (1269م) أقام السلطان المملوكى الظاهر بيبرس مقصورة حشبية بارتفاع 5, 3 م حول الحجرة الشريفة لها ثلاثة أبواب, تضم: الحجرة الشريفة (بيت السيدة عائشة رضى الله عنها), والجدار المخمس الذى بنى حولها وجزءا من الروضة الشريفة, وبيت السيدة فاطمة رضى الله عنها. وفى سنة 693 هــ (1294م) أوصل السلطان المملوكى زين الدين كتبغا المقصورة ألى السقف.

وفى عام 887 هـ (1482م) وبعد احتراق المسجد الشريف جعل السلطان قايتباي المقصورة من جهة القبلة من نحاس, وفى باقى الجهات من حديد مصبوغ باللون الأخضر’ وفى أعلاها أشرطة من نحاس, وما زالت هذه المقصورة على بنائها حتى الآن تلقى اهتمام وعناية حكومة المملكة العربية السعودية.
قبة خضراء فوق حجرة النبوية الشريفة

بنية أول قبة فى المسجد النبوى الشريف فوق الحجرة النبوية الشريفة سنة 687 هـ (1279م) بأمر السلطان المنصور قلاوون الصالحى, وهى التى عرفت مؤخرا بالقبة الخضراء, ثم تلتها قباب أخرى, وبلغت ذروتها فى العمارة المجيدية (1265-1277 هــ ⁄1828-1840م), حيث غطى سقف المسجد كله بقباب مختلفة الأحجام, بلغ عددها 170 قبة, ما زالت حتى الآن فى الرواق الجنوبى. (المدينة المنورة تاريخ ومعالم)

القبة الخضراء أو القبة الفيحاء، وعرفت قديمًا بالزرقاء والبيضاء، وهي القبّة المبنية على الحجرة النبوية الموجودة داخل المسجد النبوي في المدينة المنورة.

تاريخ بنائها:
بنيت القبة الخضراء في أيام الملك قلاوون الصالحي عام 678 هـ[1] وكانت مربعة من أسفلها مثمنة من أعلاها وكانت بالخشب على رؤوس الأساطين المحيطة بالحجرة وسمر فوق الخشب ألواح من الرصاص عن الأمطار وفوقها ثوب من المشمع. ثم جددت القبة في عهد السلطان حسن بن محمد بن قلاوون ثم اختلت ألواح الرصاص عن موضعها فجددت هذه الألواح وأحكمت مرة أخرى عام 765 هـ على عهد السلطان شعبان بن حسن بن محمد. ثم حصل بها خلل وأصلحت زمن السلطان قايتباي سنة 881 هـ.

وفي عهد السلطان قايتباي عام 886 هـ حدث الحريق الثاني للحرم فأمر بتجديد بناء الحرم ومن ضمنه القبة الخشبية عام 887 هـ فجددت القبة وأسست لها دعائم عظيمة في أرض المسجد النبوي، وبنيت بالآجر بارتفاع متناهٍ، وزخرف بأحجار منحوتة من الحجارة السوداء وجعل ارتفاعها 18 ذراع (8.88 متر) ثم بنى فوقها قبة أخرى تحويها وأحكمت الحجارة بالجبس الذي حمل من مصر ولم يكن معروفا في الحجاز في ذلك الوقت. وقد حصل بين الجدار الشرقي للمسجد وبين الدعائم ضيق، هدم جدار المسجد الشرقي وزحف به إلى البلاط ناحية "مصلى الجنائز" بمقدار ذراع ونصف (74 سم). ولم يسقط شيء من حريق القبة على الحجرة النبوية فقد كانت القبة الصغرى (الداخلية) التي بناها السلطان قايتباي مانعة لذلك. بعد ما تم بناء القبة تشققت من أعاليها، ولمل لم يجد الترميم فيها، أمر السلطان قايتباي بهدم أعاليها وأعيدت مُحكمة البناء بالجبس الأبيض، اعدت محكمة سنة 892 هـ.

وفي عهد السلطان الغازي محمود العثماني تشققت القبة العليا فأمر بهدم أعاليها وإعادة بناءها. وجعلوا أثناء العمل حاجزا خشبيا بين القبتين حتى لا يطلع العمال على قبر النبي محمد، ولا يسقط على القبة الأساسية شيء. ولم يشعر الناس بالمضايقة لأن البنائين اتخذوا سقالات من خارج الحرم. واشترك بالبناء معظم أهل المدينة تبركًا ولم يمانع السلطان وقتئذ. وفي نهاية العمل حضر السلطان إلى المدينة لمشاهدة الإنجاز.

بعد عدة قرون، ظهرت شقوق في أعلى القبة زمن السلطان عبد الحميد الثاني، فأصدر أمره بتجديدها، فهدموا أعاليها وأعادوها في غاية الإحكام والإتقان، وكان ذلك سنة 1233 هـ. وفي سنة 1253 هـ صدر أمر السلطان عبد الحميد الثاني بصبغ القبة باللون الأخضر بدلاً من الأزرق، فكان هو أول من صبغها بالأخضر، ثم لم يزل يجدد صبغها بالأخضر كلما احتاجت لذلك. وفي العهد السعودي في زمن عبد العزيز آل سعود أمر بإصلاح بعض القشور والتشققات من داخل الحجرة النبوية، وتم ذلك ليلاً. (www.wikipedia.org )

وفقنا الله تعالى زيارت حبيبنا صلى الله عليه وسلم, وزاد الله محتبه ومحبة حبيبه, واوردنا شفاعته يوم القيمة, وادخلنا الجنة معه 
يوم القيامة. آمين يارب العالمين.


நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீபின் கட்டிட வரலாறு
இமாம் காளி இயாள் (ரஹ்) அவர்கள் மற்றுமுள்ள மார்க்க அறிஞர்கள் பெரும்பாண்மையோர் '' நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு உடலை தாங்கி நிற்கும் புண்ணியமிகு கப்ரு உலகில் உள்ள எல்லா இடங்களைக் காட்டிலும் சிறந்தது என தீர்ப்பளித்துள்ளனர். (இத்திஹாப் 4: 416,417)
சில நல்லோர்கள், உலமாக்கள், இமாம்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கப்ரு, கஃபா பைத்துல் முகத்தஸைக்காட்டிலும் சிறந்தது எனத் தீர்ப்பளித்து விசுவாசத்தின் விளைநிலமான நபி (ஸல்) அவர்களை கண்ணியம் செய்வதே ஈமானைத் தக்கவைத்து கொள்ளும் உபாயம் என உபதேசம் செய்துள்ளார்ள். இவர்களில் முக்கியமானவர்கள் ஜர்கஸீ, அபதீ போன்ற பேரரிஞர்களாவர். (வஃபாவுல் வஃபா 1: 83)
நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீப் மிகவும் தரைமட்டமில்லாமலும் மிக உயரமில்லாமலும் கப்ரின் மேல்பகுதி அழகான சிவந்த பொடிக்கற்கலால் பதிக்கப்பட்டிருந்தது. ஆயிஷா (ரளி) அவர்கள் இருந்து அறையிலே நபி (ஸல்) அவர்கள் அடக்கப்பட்டார்கள். எனவே ஆயிஷா (ரளி) அவர்கள் அந்த அறையின் குறுக்கே மண்ணினால் ஒரு மதிலை எழுப்பி, நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீஃப் ஒரு புறமிருக்க ஆயிஷா (ரளி) மறுபுறம் இருந்து கொண்டார்கள். அடிக்கடி நபி (ஸல்) அவர்களை ஜியாரத்துக்கு வருவதற்கு அதே மதிலில் ஒரு வாசலை வைத்துக் கொண்டார்கள். அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் வீட்டின் மேற்கூறை பழுதுப்பட்டு இருந்தால் காலப்போக்கில் இந்த மண்மதில் மழையால் கரைந்துவிட்டது.
இதன் பின் உமர் (ரளி) அவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் (ஹிஜ்ரி 23 வரை) நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீஃபை சுற்றி முக்கோணவடிவில் அழகிய கருங்கற்கலாலும், சுண்ணாம்பாலும், மதில் எழுப்பினார்கள். எனினும் ஜியாரத் செய்பவர்களுக்கு தெறியும் அளவே மதில்களின் உயரம் இருந்தன. நபி (ஸல்) அவர்களின் கப்ரின் பரக்கத்தை நாடி கப்ருக்கு அருகில் இருக்கும் மண்ணை எடுச்துச் செல்ல ஆரம்பித்தனர். இவ்வாறு மண்ணை எல்லோரும் எடுத்தால் நாளடைவில் நபி (ஸல்) அவர்களின் கப்ரை சுற்றி பெரும் பள்ளம் ஏற்பட்டு, புனிதமிகு ரவ்ளாவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனப்பயந்த ஆயிஷ (ரளி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் ரவ்ளாவைச் சுற்றி சிறிது உயரமாக மதில் எழுப்பும்படி சொல்லி அவ்வாறே மதில்கள் கட்டப்பட்டன. இம்மதில்களில் நபி (ஸல்) அவர்களின் கப்ரு தெரியும்படி துவாரம் வைக்கப்பட்டது. இந்த ஜன்னல் போன்ற துவாரம் வழியாகவும் மக்கள் பரக்கத்தை வேண்டி மண்ணை எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் ஜன்னல் போன்ற துவாரமும் அடைக்கப்பட்டது. (வஃபாவுல் வஃபா 2: 544)
பின்னர், அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அவர்களின் ஆட்சி காலத்தில் மேற்கண்ட மதில்கள் மிகவும் உயரமாக இல்லாததால் அவற்றை நல்ல உயரமாக கட்டினார். அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) ஆகியோரின் புனிதமிகு கப்ருகளையும் அதைச்சுற்றி சுவர்கள் எழுப்பும் விஷயத்திலும் எடுத்துக் கொண்டார் என அனஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கப்ரு இருந்த இடத்தை சுற்றி முதன் முதலில் சுவர் எழுப்பியவர் உமர் (ரளி) ஆகும். இந்த சுவர்கள் உயரம் குறைவாய் இருந்ததால் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அம்மதில்கைள உயரமாகக் கட்டினார்கள். (ஐனீ 4:252, வஃபாவுல் வஃபா 2: 544)
உமையாக்கள் ஆட்சிகாலத்தில் உமர் பின் அப்துல் அஜீஜ் (ரளி) அவர்கள் மதீனாவின் கவர்னராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரு ஷரீஃபை சுற்றியிருந்து மதில்கள் பலமில்லாமல் போகவே அம்மதில்களிலிருந்து சற்று இடைவெளிவிட்டு, சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடானது. இவ்வாறு புணருதாரம் செய்ய, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களின் வீடுகளை வாங்கி விரிவாக்கம் நடந்தது. இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் மினிதமிகு ரவ்ளா ஷரீஃபின் வெளிச் சுவர்கள் கட்டப்பட்டபின்பு உட்சுவர்கள் இடிக்கப்பட்டன. அப்போது இதன் அதிர்வு தாங்காமல் நபி (ஸல்) அவர்கள், அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) அடக்கப்பட்டிருந்த கப்ருகளின் சுற்றுப்புறத்தின் ஒருபகுதி இடிந்து சரிந்து விட்டது.  இதேபோல் கப்ரின் ஒருபுறமிருந்து மண்திட்டும் சரிந்ததால் கப்ரிலிருந்து முழங்கால் முதல் பாதம் வரை ஒருவரின் கால்பகுதி வெளியே தெரிந்தது. இது நபி (ஸல்) அவர்களின் கால்தான் என பதறித்துடித்து ஆச்சரியப்பட்டு துக்கத்துடன் அழுது கூக்குறலிட ஆரம்பித்தனர். கூட்டமும் வெகுவாக கூட ஆரம்பித்தது. அப்போது அங்கிருந்த உர்வா (ரளி) அவர்கள் இது நபி (ஸல்) அவர்கள் கால் அல்ல. இது நிச்சயமாக உமர் (ரளி) அவர்களின் கால்தான் எனத் தெரிவித்து மக்களின் துயரை துடைத்தார். இந்நிகழ்ச்சி உமர் பின் அப்துல் அஜீஜ் (ரளி) அவர்களின் முன்னிலையிலே நடந்தது. மீண்டும் உமர் (ரளி) அவர்களின் புனிதமான கால் கப்ரில் உள்புறம் வைக்கப்பட்டு கப்ருகள் கட்டப்பட்டன. (ஐனீ 4:251, பத்ஹுல் பாரி 3:165, ஹயாதுஸ் ஸஹாபா 22-23, தஹ்தீபுத் தஹ்தீப் 7: 475-477)
حدثنا فروة ، حدثنا علي ، عن هشام بن عروة ، عن أبيه لما سقط عليهم الحائط في زمان الوليد بن عبد الملك أخذوا في بنائه فبدت لهم قدم ففزعوا وظنوا أنها قدم النبي صلى الله عليه وسلم فما وجدوا أحدا يعلم ذلك حتى قال لهم عروة لا والله ما هي قدم النبي صلى الله عليه وسلم ما هي إلا قدم عمر ، رضي الله عنه. (بخارى-1390)
அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி(ஸல்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்) அவர்களின் பாதமே இல்லை; மாறாக, இது உமர்(ரலி) அவர்களின் பாதகமாகும் என்றேன்" என உர்வா கூறுகிறார். (புகாரி:1390)
அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அவர்களால் கட்டப்பட்ட மதில்கள் பலமானதாக நிர்மாணிக்கபட்டு, அதன் மேல் தளம் எழுப்பப்பட்டது. கப்ரின் மேற்பகுதி அழகான வேலைப்பாடுகள் உள்ள மரக்கட்டைகள், பலகைகளைக் கொண்டு வேயப்பட்டது. அதன் பின் கலீஃபா ஹாரூன் ரஷீதின் காலத்தில், நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் மரத்தால் கட்டப்பட்ட பகுதி திறக்கப்பட்டபோது அதில் 193 வேலைப்பாடு மிக்க மரக்கட்டைகள் இருந்தன. அவை 70 கட்டைகள், உத்திரங்கள் முறிந்து சிதிலமடைந்திருந்தன. அவைகளுக்கு பதிலாக 70 புதிய கட்டைகள் மாற்றப்பட்டன. புனிதமிகு கப்ரின் அறையின் மதில்கள் அழகான பாலிஷ் செய்யப்பட்ட கற்கலால் கட்டப்பட்டன.
பின்னர் ஹிஜ்ரி 232-ல் கலீஃபா முத்தவக்கில் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரை சுற்றியுள்ள மதில்களின் வெளிப்புறமும், உட்புறமும் வெள்ளை பளிங்கி கற்கள் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளால் ;;அல்ஹுஜரதுஷ் ஷரீஃபா'' அழகுப் படுத்தப்பட்டது.
பின்னர் கலீஃபா முக்தபீ பில்லாஹ் அவர்களின் ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி 548-ல் மேலும் பளிங்கிக் கற்கள் பதிக்கப்பட்டு சிதிலம் அடைந்தப் பகுதியை நீக்கப்பட்டு, செப்பனிடப்பட்டு நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரு, அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) ஆகியோர்கள் கப்ருகள் இருந்த அறை, அதை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் புணர்தானம் செய்யப்பட்டு பளிங்கிக் கற்கள் பதிக்கப்படடுள்ளன.
பின்னர் ஹிஜ்ரி 654-ல் வருடம் ரமலான் மாதம் முதல் நாள் அன்று, நபி (ஸல்) அவர்கள் அடங்கியிருக்கும் மஸ்ஜிதுன் நபவியின் மனாராவில் விளக்கு ஏற்றுவதற்காக சென்ற ஒருவர் தன்னுடன் கொண்டு சென்ற தீவட்டியை மறந்து மனாராவிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதன் தீ மனாராவில் சுற்றி வடிந்து காலாகாலம் தரையிலும் பரவியிருந்த எண்ணை வடுக்களில் பற்றி தீ பரவியது. புற்றி எறிந்த தீ, பள்ளிவாசல் மேல் தளத்தை இரையாக்கி, எங்கும் பரவிய தீ, மஸ்ஜிதுன் நபவியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு கரித்து துவசம் செய்தது. இத்தீ விபத்தில், நபி (ஸல்) அவர்களது புனிதமிகு கப்ர், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்கள் கப்ர், உதுமான் (ரளி) ஓதிய குர்ஆன் ஆகியை மட்டும் எரியவில்லை.
ஹிஜ்ரி 650-ஆம் ஆண்டு, எகிப்து மன்னர் நூருத்தீன் ஜன்கீ, யமன் நாட்டு மன்னர் ஷம்சுத்தீன் யூசுஃப் ஆகியோர் கட்டுமான பொருட்களை அனுப்பி ரவ்ளா, மற்றும் மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானப் பணியை தொய்வில்லாது நடைபெறும்படி செய்தனர். புpன்னர் ஹிஜ்ரி 658-ல் எகிப்தின் மன்னர் ருக்னுத்தீன் பைப்ரஸ் அவர்கள், ரவ்ளா மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் விடுபட்ட பகுதியின் கட்டுமானத்திற்காக பொருட்கள், 53 கட்டப் பொறியாளர்களையும் ஜமாலுத்தீன் ஸாலிஹ் என்பவரின் தலைமையில் மதீனாவிற்கு அனுப்பி அவைகைள அழகுடன் நிர்மாணிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் ஆக்கினார்கள்.
ஹிஜ்ரி 706-ல் ரவ்ளா ஷரீப் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மேற்கு, கிழக்குப் பகுதியில் மாடிகள் மேற்கூறைகள் கட்டப்பட்டு உறுதியாக்கப்பட்டது. நுபி (ஸல்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்களின் கப்ருகளையும் அழகு படுத்துவதிலும் மிக, மிக அக்கறை கொண்ட சுல்தான் கலாவூனும், ருக்னுத்தீன் பைப்ரஸ், சுல்தான் காய்த்தபாதயீ, மற்றும் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சரித்திரத்தில் இடம் பிடித்து நபியவர்களின் உள்ளத்திலும் இடம் பிடித்துள்ளனர்.
ஹிஜ்ரி 731-ல், மலிக்குல் அஷ்ரப் பர்ஷ்பாய் என்பவர், நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலை மேலும் ஒரு நீண்ட பெரிய மாடியை கட்டினார். இதன் பின்னர், ஹிஜ்ரி 777-ல் சுல்தான் கலாவூன் என்பவர் மஸ்ஜிதுன் நபவியை விரிவு படுத்தி, ரவ்ளா ஷரீபுக்கு செல்ல தனிப்பாதை அமைத்தார்.
ஹிஜ்ரி 779-ல் சுல்தான் காய்தபாய் என்பவர் பொருப்பேற்று, பள்ளிவாசலின் கிழக்குப் புறச் சுவர் இடிக்கப்பட்டு, மேலும் 27 முழங்கள் அகலப்படுத்தப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது. புpன்னர் ஹிஜ்ரி 781-ல், நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா புணர் நிர்மாணப் பணிக்கு ஹாஜா ஷம்ஜீ என்பவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரின் மேற்பார்வையில் ரவ்ளா ஷரீபின் மேல்தளமும் அதனுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் எழுப்பப்பட்ட நீலநிற குப்பாவைச்
சுற்றியுள்ள பகுதியும் உயர்த்தப்பட்டு, மின்பரின் கிழக்குபுறமுள்ள மேற்பகுதியில் முறிந்தும், உடைந்தும் போன கட்டைகள், உத்திரங்கள் பலவற்றை மாற்றி அமைக்கப்பட்டது.
ஹிஜ்ரி 853-ல் சுல்தான் லாஹிர் ஜக்மகின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவியின் மாடியின் தளத்தில், நபி (ஸல்) அவர்களின், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்களின் புனிதமிகு கப்ருகள் இருக்கும் கட்டிடத்தின் ரவ்ளா ஷரீபின் மேல்தளத்தில் பெரும் கீரல் (விரிசல்) ஏற்பட்டது. மிகுந்த பொருட் செலவில் அக்கறையுடன் அதை செப்பனிட்டு ரவ்ளா புதுப்பிக்கப்பட்டது.
பின்னர், ரவ்ளா ஷரீப் விரிவாக்கப்பட்டு மூன்று வாயில்கள் உள்ள அறையாக கட்டப்பட்டது. அதன் சுற்றுப் புறங்களில் பித்தளைக் கம்பிகாளல் ஆன ஜன்னல்கள் வைக்கப்பட்டன. புனிதமிகு கப்ருகளை நெருங்கி மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கப்ருகளைச் சுற்றி வேலி போன்ற இரும்புத் தடுப்பு அமைக்கப்பட்டது. இந்த தடுப்புக்கு பித்தளை முலாம் பூசப்பட்டது. ஜும்ஆ நாளன்று கூட்டம் அதிகமாக இருப்பதால் ரவ்ளா ஷரீபின் பணியாளர்கள் மட்டும் தடுப்புக்கு உள்ளே நின்று தொழ அனுமதிக்கப்பட்டனர். இந்த அறையே; ஹுஜ்ரத் ஷரீபா (கண்ணியமான அறை) என்று அழைக்கப்பட்டது.
ஹுஜ்ரத் முபாரக்காவில் நுழைவதற்கும் நபி (ஸல்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரளி) அகியோர்கள் அடக்கமாகியுள்ள அறைகளின் வாயில்களில் ஒரு வாயில் மட்டும் திறந்தே இருக்கும். (வஃபாவுல் வஃபா 2:616)
ஹஜ் உடைய காலங்களில் மட்டும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், அக்காலத்தில் மட்டும் ரவ்ளாவின் அறை பூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்) அவர்களின் அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதி ஹஜ் காலங்களில் பெண்கள் தங்கள் குழந்தையுடன் தங்கும் இடமாகும். சில சமயம் பிள்ளைகள் அப்பகுதியில் அசுத்தம் செய்துவிடும். எனவே, ஹிஜ்ரி 732-ல் சுல்தான் மலிக்கு நாஸிர் ஹஜ்ஜுக்கு வந்து, நபி (ஸல்) அவர்களின் இடத்திற்கு வந்து இவையெல்லாம் பார்த்து, நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியை மட்டும் ஹஜ்ஜுக் காலங்களில் மட்டும் பூட்டிவிட உத்தரவு இட்டார். அதன்பின் ஹஜ்ஜுக்காலங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்ய அந்த அறையில் நுழைவதால் பெரும் சிரமம் ஏற்பட்டு கட்டுப்பாடு இல்லாமல் போனது. எனவே, புனித அறையின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன. இவ்வாறு ஹுஜ்ரத் ஷரீபாவை அடைக்கப்பட்டதால் நபி (ஸல்) அவர்களின் ஜியாரத் மட்டும் தடைபடவில்லை. (தகவல்: மகான்களின் மண்ணறைகள்)
நாயகம் ஸல் அவர்களின் உடலையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

வரலாற்றில் ஒரு நாள்:
بل وحتى بعد موته -صلى الله عليه وسلم-، أراد بعض الحاقدين أن ينالوا من عرضه وشخصه، وقام عدد من المفترين والمستشرقين بمحاولة تشويه سنته، بل هم بعض الصليبيين أن يعتدوا على جسده عدة مرات، ومن أشهر هذه الحوادث، ما تواتر عند المؤرخين والمحدثين في أحداث عام 557هـ، فبعد ضعف الدولة العباسية، وغزو النصارى، وتعدد الدول الإسلامية وتفككها، كحال الأمة اليوم، قام النصارى بإرسال رجلين خبيثين إلى المدينة المنورة، في زي أهل المغرب، ونزلا في دار قرب الحجرة الشريفة، وأظهرا التقوى والصلاح، والإنفاق على الفقراء والمساكين، وزيارة البقيع والقبر النبوي، حتى أمنهما الناس، بدءا يحفران سردابًا من الأسفل إلى الحجرة النبوية، وينقلان التراب، قليلاً قليلاً، في محافظ من جلد، ثم يلقيانه في مقابر البقيع، واستمرا على هذه الحالة فترة طويلة حتى اقتربا من القبر الشريف وأصبحا يفكران في نقل الجسد الشريف الطاهر, وهناك في الشام، يرى السلطان العادل والملك الصالح نور الدين محمود زنكي، يرى النبي -صلى الله عليه وسلم- في المنام، وهو يشير إلى رجلين أشقرين ويقول: أنجدني يا محمود، أنقذني من هذين، فاستيقظ فزعًا منزعجًا، ثم توضأ وصلى ونام، فرأى نفس الرؤيا،فلما استيقظ في الثالثة دعا وزيره الصالح جمال الدين الموصلي، وحدثه بما رأى، فقال: هذا أمر حدث بالمدينة المنورة، وما قعودك؟، اخرج فورًا إلى المدينة النبوية، واكتم ما رأيت، خرج السلطان في عشرين نفر من رجاله، ووصل المدينة ومعه مال كثير، فدخل المسجد النبوي الشريف، وصلى بالروضة الشريفة وسلم على النبي -صلى الله عليه وسلم-،وصاحبيه -رضي الله عنهما-، ثم جلس لا يدري ماذا يصنع؟ فقال له الوزير: أتعرف الشخصين إذا رأيتهما؟ قال: نعم, قال الوزير للناس: إن السلطان قد أحضر معه أموالاً كثيرة فليحضر الجميع ليأخذ نصيبه، وكان السلطان يتأمل الناس، فلم ير الرجلين، فقال: هل بقي أحد؟ قالوا: لا، فقال: تفكروا وتأملوا: فقالوا: لم يبق أحد إلا رجلان مغربيان من الصالحين، لا يأخذان من أحد شيئًا، ففرح في نفسه وقال: عليّ بهما فورًا، فلما أحضرا له فإذا هما الرجلان اللذان أشار النبي -صلى الله عليه وسلم- إليهما في نومه، فقال: من أين أنتما؟ فقالا: من بلاد المغرب جئنا حاجين فاخترنا المجاورة في هذا العام عند رسول الله -صلى الله عليه وسلم-، وشدد عليها فأصرا على قولهما، فقال: أين منزلهما؟ فأخبر بأنهما في رباط قرب الحجرة الشريفة، دخل المنزل فرأى فيه مالاً كثيرًا، ومصحفين، وكتابًا فوق الأرفف، ثم بدأ يطوف ويتجول في البيت، حتى ألهمه الله سبحانه فرفع حصيرًا في البيت، فإذا بلوح من الخشب فرفعه فرأى سردابًا محفورًا باتجاه الحجرة الشريفة، مخترقًا جدار المسجد، فارتاع الناس لذلك، فجيء بالرجلين فاعترفا أنهما نصرانيان بعثهما النصارى في زي حجاج مغاربة، وأعطوهما أموالاً كثيرة وعظيمة لسرقة الجسد الشريف، ونقله إلى بلادهم، عند ذلك بكى السلطان نور الدين بكاءًا شديدًا، ثم أمر بعد ذلك بضرب عنقهما فقتلا تحت الشباك بجوار الحجرة النبوية الشريفة، ثم أمر السلطان بإحضار رصاص عظيم، وأمر بحفر خندق عظيم حول الحجرة الشريفة كلها ثم أذاب الرصاص وملأ به هذا الخندق حماية للقبر الشريف.
ஹிஜ்ரி 557 ம் ஆண்டு.அப்பாஸிய கிலாபத் பலஹீனமடைந்திருந்த காலக்கட்டம்.உலகில் கிருஸ்துவ பலம் ஓங்கிருந்தது.இன்றைய காலம் போலவே அன்றும் இஸ்லாமிய நாடுகள் பிரிந்துகிடந்தது. அப்போது கிருஸ்துவர்கள்- மதீனாவுக்கு மேற்கத்தியர்களின் தோற்றத்தில் இரண்டு மனிதர்களை அனுப்பி வைத்தனர். இவர்களின் நோக்கம் பூமானின் உடலை தோண்டியெடுத்து அதை கிருஸ்துவர்களிடம் ஒப்படைப்பது.

அவ்விருவரும் பெருமானின் முபாரக்கான அறைக்கு அருகே தங்கினர். இவர்கள் இறையச்சமுடையவராகவும், சீர்திருத்தவாதிகளாகவும், ஏழைகளுக்கு உதவி செய்பவர்களாகவும் தங்களை காட்டிக்கொள்வதுடன், தவறாமல் ஜன்னதுல் பகீஃயான முஸ்லிம்களின் பொது கப்ருஸ்தானுக்கும் பெருமானார் ஸல் அவர்களின் ரவ்லா ஷரீபுக்கும் ஸியாரத் செய்து வந்தனர். அதன் மூலம் தங்களின் திட்டத்தை நிறைவேற்ற நோட்டமிட்டனர். இவர்களின் வெளித்தோற்றத்தைப்பார்த்து மக்களும் இவர்களை நம்பினர். இவர்கள் தங்களின் திட்டத்தை செயல்படுத்தும் வேலையில் இறங்கினர், இவர்கள் தங்கிருந்த வீட்டில் பெரும் குழிதோண்டி அதன்வழியாக நாயகத்தின் ரவ்லாவை அடைய முயற்சித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகாலம் யாருக்கும் சந்தேகம் வராமல் தோண்டி-இறுதியில் நபி ஸல் அவர்களின் கப்ரை அடைந்து விட்டனர். இது ஒரு புறமிருக்க-

மறு பக்கத்தில்: சிரியாவில் இஸ்லாமிய அரசரான நூருத்தீன் சன்கிரஹ் அவர்கள் தங்களின் கனவில் நபி ஸல் அவர்களை கண்டார்கள். அதில் நபி ஸல் அவர்கள் அந்த இரு திருடர்களின் பக்கம் சுட்டிக் காட்டி இவர்களிட மிருந்து தன் உடலை பாதுகாக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

திடுக்கிட்டு விழித்த சுல்தான் அவர்கள்- ஒழுச்செய்து,தொழுதுவிட்டு மீண்டும் தூங்கினார்கள்.அப்போதும் அதே கனவை கண்டார்கள்.இப்படி மூன்று தடவை கண்டு இக்கனவில் ஏதோ உண்மை இருப்பதாக அறிந்து தன் அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்களிடம் தான் கனவை பற்றி கூறினார்கள். அதைக்கேட்ட அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்கள்-கலீபா அவர்களே! மதீனாவில் ஏதோ ஆபத்து சூழ்ந்திருப்பதாக தெரிகிறது,எனவே தாங்கள் இரகசியபயணமாக யாரிடமும் கூறாமல் உடனடியாக மதீனா புறப்படுங்கள்.என்றார்.

இருபது நபர்களுடன் நிறையபொருள்களுடன் சுல்தான் மதீனா வந்து சேர்ந்தார். மஸ்ஜித் நபவியில் நுழைந்து,ரவ்லாஷரீபில் தொழுது விட்டு,நபி ஸல் அவர்களுக்கும் அன்னாரின் அருமை தோழர்களான அபூபக்கர், உமர் ரலி ஆகியோருக்கும் சலாம் உரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்கள். இப்போது என்ன செய்வது? எப்படி அவ்விருவரை கண்டுபிடிப்பது? எதுவும் தெரியவில்லை-அப்போது அமைச்சர் சுல்தானிடம், கனவில் நீங்கள் கண்ட அவ்விருவரை நேரில் கண்டால் அடையாளம் கண்டு கொள்வீர்களா? என கேட்க-ஆம் என்று சுல்தான் பதில் கூறினார்.

உடனே, அரசர் தன்னுடன் நிறையபொருள்களை கொண்டுவந்துள்ளார் ஆகவே தாங்கள் வந்து அதை பெற்றுச்செல்லுங்கள் என மக்களுக்கு அமைச்சர் அறிவிப்புச்செய்தார். மக்கள் எல்லோரும் வந்தனர்,ஆனால் சுல்தான் எதிர்பார்த்த அவ்விருவர் வரவில்லை. வேறுயாரும் மீதமிருக்கிறார்களா?என கேட்க, மக்கள் இல்லை என்று கூறினர். நன்றாக யோசித்துச்சொல்லுங்கள் என சுல்தான் சொன்னபோது-மேற்குலகைச்சேர்ந்த இரு ஸாலிஹீன்கள் வரவில்லை. அவர்கள் யாரிடமும் எதுவும் தேவையாக மாட்டார்கள். என்றபோது, அரசர் சந்தோஷப்பட்டார்.

உடனே அவ்விருவரை தன்னிடம் அழைத்துவரும்படி உத்தரவிட்டார். அவ்விருவரும் வந்தபோது நபி ஸல் அவர்கள் கனவில் சுட்டிக்காட்டிய அதே இருவர்கள் தான். நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்? அரசர் கேட்டார். நாங்கள் மேற்குலக நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தோம், பின்னர் மதீனாவந்த நாங்கள் இவ்வாண்டு முழுவதும் நாயகத்தின் அருகில் தங்கிவிடலாம் என்று முடிவு செய்து தங்குகிறோம்.என்றனர்.

இவர்கள் இருவரின் வீடு எங்கே இருக்கிறது? என சுல்தான் அவர்கள் கேட்க மக்கள் அதைக்காட்டினர், வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது-உள்ளே நிறைய பொருட்கள், இரண்டு குர்ஆன், நிறையநூட்கள் இருந்தன. அங்கே ஒரு இடத்தில் பாய் விரிக்கப்பட்டிருந்தது, அதற்கு கீழே ஒரு பலகை போடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் சுல்தான் அவர்களுக்கு சந்தேகம் வரவே அதை எடுத்துப்பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.

காரணம், பலகைக்கு கீழே நபி ஸல் அவர்களின் அறையின் பக்கமாக ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதைக்கண்ட மக்களும் கடும் அதிர்ச்சியுற்றனர். பின்னர் அவ்விருவரையும் கொண்டு வந்து கடுமையாக விசாரிக்கப்பட்டபோது-

தாங்கள் கிருஸ்துவர்கள் என்றும், மேற்கத்திய ஹாஜிகளுடன் தங்களை கிருஸ்துவர்கள் அதிகமான பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர் எனவும், முஹம்மதின் உடலை திருடி அங்கு கொண்டு செல்லவேண்டும் என தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூறினர். அதை செவியுற்ற சுல்தான் நூருத்தீன் அவர்கள் கடுமையாக அழுதார்கள். பின்னர் அவ்விருவரின் தலையை நாயகத்தின் அறைக்கு அருகே துண்டிக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாரே நிறைவேற்றப்பட்டது.
பின்பு சுல்தானின் உத்தரவுக்கிணங்க-நபி ஸல் அவர்களின் புனித ரவ்லாவை சுற்றி பள்ளமாக தோண்டி சுற்றிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றி ஒரு பாதுகாப்புச்சுவர் அமைத்தனர். அல்லாஹுத்தஆலா சுல்தான் நூருத்தீன் ரஹ் அவர்களின் மண்ணரயை வெளிச்சமாக்கிவைப்பானாக!

நபி ஸல் அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் அவர்களை எதிர்த்த எதிரிகள் நாயகத்தை தவறான எண்ணத்துடன் நெருங்கிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்தான்.
وَاللَّـهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ (القرآن 5:67)

அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான் என்று அல்லாஹ் நபிக்கு வாக்களித்துள்ளான். (அல் குர்ஆன் 5:67)

No comments:

Post a Comment