أَ
ألا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (القرآن 10:6263)
அல்லாஹ் கூறுகிறான்: அறிந்துக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு (எதிர் காலம் பற்றி) எந்த அச்சமும் இராது. (கடந்த காலம் குறித்து) அவர்கள் துயரப்படவுமாட்டாhக்ள். அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சுவோராக இருப்பார்கள். (அல்குர்ஆன் 10: 62,63)
வலிமார்கள் என்றால் யார்?
عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمْ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنْ اللَّهِ تَعَالَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ قَالَ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ وَقَرَأَ هَذِهِ الْآيَةَ: {أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ} (رواه ابوداود)
உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வின் அடியார்களில் இறைத்தூதர்களும் தியாகிகளும் பொறாமைப்படும் அடியார்கள் சிலர் இருக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரோ! அவர்கள் யார்? என்று கூறுங்களேன் என்றனர். அதற்கு, அவர்களுக்கிடையே உறவுமுறைகளோ கொடுக்கல் வாங்கலோ இல்லாதிருந்தும் அல்லாஹ்வுக்காகவே ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். (மறுமையில்) பிரகாசமான முகத்துடன் ஒளியிலான மேடைகளில் அவர்கள் இருப்பார்கள். மக்கள் அஞ்சும்போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் துயரப்படும்போது அவர்கள் துயரப்படவுமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அறிந்துக்கொள்! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த அச்சமும் இராது. அவர்கள் துயரப்படவுமாட்டார்கள்' என்ற இந்த வசனத்தை ஓதினார்கள்.' (அபூதாவூது)
عن ابن عباس رضي الله عنهما قال : قيل يا رسول الله من أولياء الله؟ قال الذين إذا رُؤُوا ذُكِرَ الله (رواه البزار)
இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! அவ்லியா என்போர் யார்? என வினவிபோது, அவர்களைக் கண்டால் அல்லாஹ்வின் நினைவு வரும் என விளக்கமளித்தார்கள்'. (பஜ்ஜார்)
விண்ணிலும் மண்ணிலும் அவ்லியாவிற்கு தடை என்பது கிடையாது. அவர்கள் விரும்பினால் மரணத்திற்கு பிறகும் பூத உடம்புடன் இப்பூமிக்கு அவர்களால் வர முடியும் - கௌஸுல் அஃளம் (ரளி)
பாதுஷா நாயகத்தின் மார்க்க பணியின் ஈடுபாடு
காரணக் கடல், கஞ்ஜேசவா, குத்புல் மஜீத், ஃபர்துல் வஹீது, நாகூர் ஆண்டகை மற்றும் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரளி) அவர்கள் ரபீவுல் அவ்வல் பிறை 10 (கி.பி.1490)ல் இந்தியாவில் மாணிக்கப்பூரில் 'ஸையது ஹசன் குத்தூஸ் - ஃபாத்திமா ஆகிய தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்கள். சிறுபிராயத்திலேயே அறிவானா குழந்தையாகத் திகழ்ந்தார்கள். ஞானத்தில் முத்து எடுத்து அதை பலருக்கும் ஊட்டினார்கன். அந்த அடிப்படையில் நாயகம் அவர்களின் மாணவர்கள் 404 ஆவர். நூயகம் அவர்கள் ஹிஜ்ரி 947 ஷவ்வால் பிறை-6 ல் உலகம் சுற்றும் வலியாகத் திகழ்ந்தார்கள். முதலில் மக்கா சென்று இஸ்லாத்தின் கடமையான ஹஜ்ஜை முடித்தார்கள். பிறகு மதீனாவிற்கு சென்று ஈருலக இரட்சகர் எம்பெருமானார் (ஸல்) அவர்களை ஜியாரத் செய்தார்கள. 6 ஆண்டுகள் அரபு நாடுகளில் மார்க்கப் பணி செய்தார்கள். பின்னர், இஸ்தம்பூல் சென்று 'முஹம்மது உஸ்மான் கான்' சுல்தானை சந்தித்தார்கள். பின்னர், இராக்-பக்தாது சென்று வலிகளின் கோமான் 'கௌஸுல் அஃளம்' அவர்களை ஜியாரத் செய்தார்கள். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு பொன்னானி, மஹல்லத் தீவு, இலங்கையிலுள்ள ஆதம் மலை போன்ற இடங்களுக்குச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து பாம்மன் வழியாக கிழக்கரை, காயல் பட்டிணம், மேளப்பாளயம் போன்ற ஊர்களுக்கு வந்து மார்க்கப்பணி செய்தர்கள். மேளப்பாளயத்தில் 40 நாட்கள் தங்கிருந்தார்கள். பின்னர், மதுரை-நத்தம், ஆயக்குடி, பொதிகை மலை போன்ற இடங்களில் தங்கி கடுமையான தவம் செய்தார்கள். இறுதியாக, திருச்சி வாழும் வலி 'நத்ஹர்ஷா' வலி (ரளி) அவர்களின் கபுருக்கு அருகில் 3 நாட்கள் கல்வத்தில் இருந்தார்கள். அப்போதுதான் அவர்களுக்கு விலாயத் கிடைத்தது. பிறகு தஞ்சை, கூத்தாநல்லூர், நாகூர் போன்ற ஊர்களில் மார்க்கப் பணி செய்தார்கள். இடையில் மார்க்கப் பணி நிமித்தம் தர்னாச்சோரி-பர்மா சென்று சில வருடஙக்ள் பணி செய்துவிட்டு மறுபடியும் தழிழகம் திரும்பி நாகூரில் தஞ்சம் அடைந்தார்கள். நாகூர் மக்களின் அன்பும் அறவணைப்பும் அவர்களை வெகுவாகவே கவர்ந்தது. எனவே இறுதி நாட்கள் வரை நாகூரிலியே வாழ ஆசைப்பட்டார்கள். அந்த அடிப்படையில் சில காலங்கள் மார்க்கப் பணி செய்துவிட்டு இறுதியாக, ஜமாதுல் ஆகிர் பிறை 10, ஹிஜ்ரி 978 (கி.பி. 1558)ல் இந்த மண்ணுலகத்தை விட்டும் மறைந்தார்கள்.
பாதுஷா நாயகத்தின் கராமாத்துகள்
அன்னை ஸையிதா ஃபாத்திமா (ரளி) கருத்தரித்து மூன்று மாதங்களுக்கு பின்னர் ஸையது ஹசன் குத்தூஸ் (ரளி) கடும் நோய் வயப்பட்டார்கள். மருத்துவர்களை வரவழைக்கப்பட்டு சிகிச்சைகள் செய்தும் குணமடையாததால் அன்னை பாத்திமா மிகவும் வேதனைப்பட்டு கண்கலங்கினார்கள். ஒவ்வொரு தொழுகை வேளையிலும் இறைவனிடம் கண்ணீர் விட்டு முறையிட்டார்கள். ஒரு நாள் இதே எண்ணத்துடன் படுக்கiயில் உறங்கி கொண்டிருந்தபோது, 'அம்மா' என்று ஒரு சத்தம். கண் விழித்து அன்னை பாத்திமா உற்றுநோக்கினார். ஒருவரும் காணோம். மீண்டும் அதே குரல் 'அம்மா' உற்றுநோக்கினார். என்ன விந்தை? தனது வயிற்றுக்குள் இருந்து அல்லவா வருகிறது அந்த மென்குரல். மீண்டும் தொடர்ந்தது அந்த மென்குரல். 'தாயே அஞ்சாதீர்கள் இறையருளால் என் தந்தை இன்றே சுகமடைவார்' சத்தம் நின்றதும் வியப்பும் ஆனந்தமாய் அன்னை ஸையது ஃபாத்திமா தனது கணவரை நாடி விரைந்தார். மறுநாள் பொழுது சாய்வதற்குள் ஸையது ஹசன் குத்தூஸ் (ரளி) நோய் நீங்கி சுகடைந்தார்.
அஜ்மீர் நாகத்தை சந்தித்த ஷாகுல் நாயகம்
பல ஊர்களுக்கு பயணம் சென்று கொண்டிருந்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்களுக்கு அஜ்மீர் சென்று காஜா முயீனுத்தீன் (ரளி) அவர்களை தரிசிக்க நாட்டம் உண்டாயிற்று. அதன்படி சில நாட்களில் அஜ்மீர் நகரை சென்றடைந்தார்கள். 'ஹிந்துல் வலியின்' ரவ்ளா ஷரீஃபில் நின்றபோது உணர்ச்சி பிழம்பினார்கள். ரவ்ளா ஷரீஃபில் நாகூர் ஆண்டகை நுழைந்ததும் வெளி கதவுகள் இருக மூடிவிட்டன. சுடருடன் கலந்த சுடர் பிரிய வெகு நேரமாயிற்று. காஜாவிடம் இருந்து உத்தரவு வாங்கி தம் கூட்டத்தாருடன் புறப்பட்டு ஒரு மலையடி வாரத்தில் முகாம் செய்தனர். பின்னர் அஜ்மீர் ஷரீஃபில் நாகூர் ஆண்டகை அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். அந்த சொற்பொழிவில் காலத்தின் மாற்றத்தையும் பூமியின் பிரிவாக்கத்தையும் வெகு இலகுவாக கூறி அல்லாஹ்வின் கோப பார்வைக்கு ஆளாவதை தவிர்க்குமாறு வேண்டினார்கள். மேலும் அன்றே எல்லாவற்றையும் அறிந்து நடக்க போகும் விபரீதங்களை எடுத்துரைத்தார்கள். இந்த இந்திய தேசத்தில் பாதுஷாக்களும் அரசர்களும் இந்து மத மன்னர்களும் மதத்தின் பெயரால் மனித இரத்தத்தை சிந்தாதீர்கள் என்றும், இந்த நாட்டை வெகு விரைவில் சாம்பல் நிற கண்களையும் முடியையும் (ஆங்கிலேயர்களால்) கொண்டோர் வியாபாரம் என்ற நோக்கில் வந்து அபகரிப்பர். எனவே, உங்களை நீங்கள் ஒத்துமையாக்கி கொள்ளுங்கள் என மாற்றுமத சகோதரனையும் அரவணைத்து, எச்சரித்து நாட்டிற்காக சொற்பொழிவு ஆற்றினார்கள். இத்தகைய சம்பவங்களை பல நூல்கள் தெளிவாக விளக்கியுள்ளது.
அரபுநாட்டில் ஷாகுல் ஹமீது நாயகம்
சீடர்களுடன் ஜித்தா நகரை அடைந்த ஹஜ்ரத் நாகூர் நாயகம் அவர்கள் ஆதித்தாய் 'ஹவ்வா' (அலை) அவர்களுது கப்ரு இருந்த இடம் சென்று ஜியாரத் செய்த பின் காலணியை கழற்றிவிட்டு தக்பீர், தஹ்லீல் முழக்கத்துடன் மக்கா நகரை நோக்கி நடக்க தொடங்கினார்கள். மக்காவில் கஃபதுல்லாவை வலம் வந்து ஹஜரதுல் அஸ்வத் கல்லை முத்தமிட்டு இப்ராஹீம் (அலை) அவர்களது மகாமில் நஃபில் தொழுது பின்பு ஜம்ஜம் கிணற்றில் நீரருந்தி பின் தனது பாட்டனார் கௌது நாயகம் தங்கியிருந்த திருத்தலத்தில் முகாமிட்டார்கள். மறுநாள் அங்கே அடக்கமாயிருந்த வலிமார்களின் தளங்களுக்கு சென்று ஜியாரத் செய்ய துவங்கினார்கள். பின்னர் நபி (ஸல்) உதயமான 'பத்கா' என்ற இல்லம் அடைந்து ஹஜ்ஜு காலம் வரை இஃதிகாப் 40 நாட்கள் இருந்தார்கள். ஹஜ்ஜு முடிந்தவுடன் மதினா நகர் சென்ற ஷாகுல் ஹமீது அவர்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் ஜியாரத் நின்று மணிகணக்கில் கண்ணீர் உகுத்தார்கள். தாத்துல்லாவின் ஜமாலை மனம் நிறைய கண்டு கழித்தார்கள். ஆத்மீகமாய் பெருமானார் (ஸல்) அவர்களோடு உரையாடி நல உபதேசம் பெற்று கொண்டு பின்பு அபூபக்கர்-உமர் (ரளி) அவர்களை ஜியாரத் செய்துவிட்டு மக்கா திரும்பினார்கள். இவ்வாறு 6 ஆண்டுகள் தீன் பணி செய்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
எனவே, வலிமார்களை வாசிக்கக்கூடியவர்களாக, நேசிக்கக்கூடியவர்களாக,சுவாசிக்கக்கூடியவர்களாக நம்மை அல்லாஹ் ஆக்கியருள் புறிவானாக! இந்த நேசத்தை கொண்டு நாளை மறுமையில் அவர்களோடு சுவர்க்கத்தில் இருக்கும் நற்பாக்கியத்தை நம்மவர்களுக்கு அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்!!
No comments:
Post a Comment