Tuesday, March 24, 2015

குழந்தை பாக்கியம்



لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ. أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ (القرآن 42:4950)

அல்லாஹ் கூறுகிறான்: 'வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றை படைக்கிறான். (ஆகவே), அவன் நாடியவர்களுக்கு பெண்குழந்தைகளை அன்பளிப்பகாக் கொடுக்கிறான். இன்னும், அவன் நாடிவர்களுக்கு ஆண்குழந்தைகளை அன்பளிப்பாக கொடுக்கிறான். அல்லது ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் கலந்து கொடுக்கிறான். அவன் நாடிவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியபடி செய்ய) மிக்க ஆற்றலுடையவன்'. (அல்குர்ஆன் 42:49-50) 

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் வழங்குகின்ற அற்புதமான பரிசு ஆகும். அதை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. எத்தனையோ தம்பதிகள் அந்த பாக்கியத்தை பெறமுடியாமல் வாழ்க்கையே கசந்துபோனதுபோல் வாழ்கிறார்கள். தனக்கும் ஒரு வாரிசு கிடைக்காதா என்று ஏங்குவோர் எத்துனை பேர்? அழுவோர் எத்துனைபேர்? அதற்காக நேர்த்திக்கடன்தான் எவ்வளவு? எந்த குழந்தையையும் அவர்கள் கொஞ்சும்போது, இந்த குழந்தையைப்போல் நமக்கும்கென்று கொஞ்ச ஒரு வாரிசு எப்போது கிடைக்கும்? என்று மனதிற்குள் ஒரு சோகமான கேள்வி எழவே செய்கிறது. 

இன்னொரு கோணத்தில் சமுதாயத்தில் புரையோடிப்போன ஒரு குறை, குழந்தையில்லாத தம்பதிகளை குறை காண்வோர். பெண்மனிகளையே குறை காணும் ஒரு நிலையை பார்க்கிறோம். ஒரு பிள்ளையைக்கூட பெத்து தருவதர்க்கு தகுதியில்லாதவள். இவளைப்போய் என்னை பிள்ளைக்கு கட்டிவைத்தோமே! என்று நாகுசாமல் மருமகளையே குறை காணும் சமுதாயம். குறை இருபாலாரின் புறத்திலிருந்தும் இருக்கலாம் என்பதை இந்த சமுதாயம் ஏன் மறந்ததோ தெரியவில்லை. அப்படியே ஒரு தம்பதிகளுக்கு ஆண்குழந்தை அதிகமாக பிறந்தால் அவர்களைக் கண்டு பொறாமை படுகின்றது. பெண்பிள்ளைகளை பெற்றால், 'ஒரே பொம்பள புள்ளையா பெக்குறா' இந்த காலத்துல ஒரே பொம்பள புள்ளைங்களா பெத்தா கட்டி குடுக்குறது எவ்வளவு சிரமம்? என்றும் மருமகளை குத்திக் காட்டுகின்ற சமுதயாம். இவைகளுக்கு தெளிவான விளக்கத்தை இறைவன் இந்த வசனத்தில் கூறுகிறான். குழந்தையில்லாத தம்பதிகளை குறை கூறுவது இறைவனை குறை கூறுவதாகும் என்பதை குறை சொல்வோர் நினைவில் வைக்கவேண்டும்.

குழந்தை பாக்கியத்தை அல்லாஹ்விடம் வேண்டல்
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ. فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ (القرآن 37:100இ101) وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ. فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ (القرآن 21:8990

அல்லாஹ் கூறுகிறான்: 'என்னுi இறைவா! நல்லோர்களிலிருந்து எனக்கு (ஒரு சந்ததியை) அளித்திடுவாயாக (என நபி இப்ராஹீம் அலை) வேண்டினார். ஆதலால், மிகப்பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனை அவருக்கு நற்செய்தி நவின்றோம்'. (அல்குர்ஆன் 37: 100-101) 

நபி இப்ராஹீம் (அலை அவர்களுக்கு, தங்களின் 86-வது வயதில் அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் மூலம் இஸ்மாயீல் (அலை) என்னும் இறையச்சமிக்க, பொறுமையுடைய மகனை அல்லாஹ் வழங்கினான். 

அல்லாஹ் கூறுகிறான்: 'ஜகரிய்யாவையும் (எண்ணிப்பார்ப்பீராக!) அவர் தம் இறைவனை அழைத்து, 'என் இறைவனே! என்னைத் தனியாளாக விட்டுவிடாதே.' வாரிசுகளில் நீயே மிகச் சிறந்தவன் (என்று பிரார்த்தித்தார்.) அப்போது நாம் அவரது அழைப்பை ஏற்று, அவருக்கு யஹ்யாவையும் பரிசளித்தோம். அவருக்காக அவருடைய மனைவியை (குழந்தை பேற்றுக்கு)த் தகுதியுடையவராக ஆக்கினோம். நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நற்பணிகளில் வேகம் காட்டுபவர்களாகவும் ஆவலோடும் அச்சத்தோடும் நம்மை அழைப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் நம்மையை அஞ்சுபவர்களாகவும் இருந்தனர்'. (அல்குர்அன் 21: 89-90) 

ஜகரிய்யா (அலை) - ஈஷாஉ தம்பதியருக்கு நீண்ட காலம் குழந்தை இல்லை. அவர்களுக்கு 120 வயதும், அவர்களின் துணைவியாருக்கு 98 வயதும் ஆனபோது அல்லாஹ்விடம் குழந்தைக்காகப் பிரார்த்தித்தார்கள். யஹ்யா எனும் ஆண் குழந்தை பிறந்தது. (அல்பிதாயா வந்நிஹாயா, தஃப்ஸீர் மாஜிதீ) 

பைபிள் புதிய ஏற்பாட்டில் காணப்படுவதாவது: 'அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியர் ஒருவர் இருந்தார். அவர் மனைவி, ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருவர். அவர் பெயர் எலிசபெத்து. எலிசபெத்து மலடியாயிருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது. இருவரும் வயது சென்றவர்களாகவும் இருந்தார்கள்'. (லூக்கா, 1:5,7) 

பைபிள் புதிய ஏற்பாடு கூறுகிறது: 'தூதன் அவரை நோக்கி சகரியாவே, பயப்படாதே! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உம் மனைவியாகிய எலிசபெத்து உமக்கு ஒரு குமாரரைப் பெறுவாள். அவருக்கு யோவான் என்று பேரிடுவாயாக'. (லூக்கா, 1:13) 

குழந்தைகள் அல்லாஹ்வின் அன்பளிப்பு
أخرج ابن أبي حاتم والحاكم وصححه وابن مردويه والبيهقي في سننه، عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: «إن أولادكم هبة الله يهب لمن 
يشاء إناثاً ويهب لمن يشاء الذكور فهم وأموالهم لكم إذا احتجتم إليها».

ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்: 'நிச்சயமாக, உங்களுடைய குழந்தைகள் அல்லாஹ்வின் அன்பளிப்பாகும். அவன் நாடியவர்களுக்கு பெண்குழந்தைகளை அன்பளிப்பகாக் கொடுக்கிறான். இன்னும், அவன் நாடிவர்களுக்கு ஆண்குழந்தைகளை அன்பளிப்பாக கொடுக்கிறான். அவர்களிடம் நீங்கள் அவர்களிடம் தேவையானால், அவர்களும் அவர்களுடையை பொருளாதாரமும் உங்களுக்கு உரியதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (இப்னு அபீ ஹாத்தம், ஹாகிம், பைஹகி)

பெண்குழந்தையே பரக்கத்
وأخرج ابن مردويه، عن ابن عمر رضي الله عنهما، إن رسول الله صلى الله عليه وسلم قال: «من بركة المرأة ابتكارها بالأنثى» 

இப்னு உமர் (ரளி) அறிவிக்கிறார்கள்: 'பெண் குழந்தையே பரக்கத் ஆனவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (இப்னு மர்தவைஹி) 

من ابتلي بشيء من هذه البنات فأحسن إليهن كن له ستراً من النار» (تفسير بحر المحيط) 
'ஒருவர் பெண்குழந்தைகளால் சோதனைக்குள்ளாக்கபடுகிறார். (அந்நேரத்தில்) அவர்களது விஷயத்தில் அவர் நல்லமுறையில் நடந்துகொண்டால், அப்பெண்குழந்தைகளே அவருக்கு நரகத்தைவிட்டும் (காக்கும்) திறையாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (தஃப்ஸீர் பஹ்ருல் முஹீத்) 

ஆண்குழந்தையா? பெண்குழந்தையா?
مَاءُ الرَّجُلِ أَبْيَضُ وَمَاءُ الْمَرْأَةِ أَصْفَرُ فَإِذَا اجْتَمَعَا فَعَلَا مَنِيُّ الرَّجُلِ مَنِيَّ الْمَرْأَةِ أَذْكَرَا بِإِذْنِ اللَّهِ وَإِذَا عَلَا مَنِيُّ الْمَرْأَةِ مَنِيَّ الرَّجُلِ آنَثَا بِإِذْنِ اللَّهِ (مسلم

'ஆணின் நீர் (விந்து உயிரணு) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்துவிட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை (விந்து உயிரணுவை) மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள';. (முஸ்லிம்) 

ஆணுடைய விந்தணு, பெண்ணுடைய கருமுட்டை ஆகிய இரு கேமெட்டுகளின் (Gamete) இணைவால் கருவுருதல் நடைபெறுகிறது. இவை இரண்டும் நீர்மங்கள் ஆகும். ஆகவேதான், இவற்றை 'நீர்' என ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டில் எதன் கை ஓங்குகிறதோ அதன் சாயலில் அமையும். ஆணுடைய குரோம்சம்கள் (இனக்கீற்று) ஒவ்வொன்றிலும் XY  தன்மைகளும், பெண்ணுடைய குரோம்சம்கள் ஒவ்வொன்றிலும் XX  தன்மைகளும் இருக்கும்.  என்பது பெண்பாலையும்  என்பது ஆண்பாலையும் குறிக்கும்) ஆணுடைய  உடன் பெண்ணுடைய  இணைந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்கும். ஆணுடைய  Y  உடன் பெண்ணுடைய  இணைந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பாகும். இதைத்தான் அன்றே அறிவியல் மாமேதை அண்ணலார் (ஸல்) அவர்கள் மேலுள்ள நபிமொழியில் தெளிவாகக் கூறினார்கள். 

هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (القرآن 3:6)
  அல்லாஹ் கூறுகிறான்: 'அவனே கருவறைகளில் உங்களைத் தான் விரும்பியவாறு வடிவமைக்கிறான். வல்லமை மிக்கவனும் ஞானம் நிறைந்தோனுமான அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை'. (அல்குர்ஆன் 3:6) 

أخرج ابن المنذر عن ابن مسعود في قوله {يصوركم في الأرحام كيف يشاء} قال: ذكوراً وإناثاً.(تفسير در المنثور)
இப்னு மஸ்வூது (ரளி) அறிவிக்கிறார்கள்: 'அவனே கருவறைகளில் உங்களைத் தான் விரும்பியவாறு வடிவமைக்கிறான் என அல்லாஹ் கூறுவது, ஆண் குழந்தையாகவும் பெண் குழந்தையாகவும் (வடிவமைக்கிறான்) என்பதாகும்'. (தஃப்ஸீர் துர்ருல் மன்ஸுர்) 

எனவே, கருணை நிறைந்த 'ரப்புல் ஆலமீன்' குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை தருவானாக! குழந்தையை பெற்றவர்களுக்கு அவர்களைக் கொண்டு பரக்கத் செய்வானாக! அவர்களை நம் கண்களுக்கு குளிர்ச்சியானவர்களாக ஆக்குவானாக!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!. 

No comments:

Post a Comment