Sunday, November 23, 2014

இறுதிப் பயணம்

 

وما تدرى نفس بأى ارض تموت. (القرآن 31:34)
அல்லாஹ் கூறுகிறான்: 'எந்த ஆத்மாவும் (தான்) எந்த பூமியில் மரணிக்கும் என்பதை அறியமுடியாது' (அல்குர்ஆன் 31:34) 


عن مطر بن عكامس رضى الله عنه  قال: قال رسول الله صلى الله عليه وسلم:
 أذا قضى الله لعبد ان يموت بأرض جعل له أليها حاجة. (مسند احمد-5:227 ترمذى-2146)
மதர் பின் அகாமிஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: 'ஓர் அடியானை ஒரு பூமியில் (வைத்து) மரணமாக்க அல்லாஹ் முடிவு செய்துவிட்டால், அவருக்கு அந்த பூமிக்கு செல்வதற்கான ஒரு (பயணத்)தேவையை அல்லாஹ் ஏற்படுத்தி(மரணமாக்கி)விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (முஸ்னது அஹ்மது-5:227, திர்மிதி-2146) 

கடந்த மார்ச் மாதம் 8 தேதி, மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆர் 370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது. இதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எனினும் விமான தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

மாயமான விமானம் குறித்த தகவல்களை மலேஷியா அரசு மூடி மறைப்பதாகவும், சன்மானத் தொகை அறிவிப்பதன் மூலம் சிலர் தகவல்களை அளிக்க முன்வரக் கூடும் என்றும் பயணிகளின் உறவினர்கள் நம்புகிறார்கள். காணமல் போன விமானத்தைப் பற்றிய தகவலைக் கொடுப்போருக்கு 50 இலட்சம் அமெரிக்க டாலர் சன்மானமாக வழங்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்தனர். இந்த தொகையை இணையதளம் மூலமாக வசூலிப்பதற்கும், அதில் ஒரு தொகையை, விமானம் குறித்து விசாரணை நடத்தவுள்ள தனியார் புலனாய்வுக் குழுவுக்கு செலவிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.  இதுகுறித்து, இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் 'எத்தான் ஹண்ட்' கூறுiகியில், 'விமானத்தைப் பற்றிய தகவல்களை சிலர் தெரிந்து வைத்திருப்பார்கள். சன்மானம் அறிவிப்பதன் மூலம் தவல்களை கொடுக்க அவர்கள் முன்வருவார்கள் என்று நம்புகிறோம்' என்றார். 

அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, கடல் பகுதியில் 26 நாடுகள் மாதக்கணக்கில் தீவிரமாகத் தேடியபோதும் அதற்கான தடயம் எடுவும் கிடைக்கவில்லை. எனவே பல்வேறு கோணங்களில் புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது. 

உறவினர்கள் நெருக்குதல் காரணமாக மலேஷியா அரசு இரகசியமாக வைத்திருந்த அத்தகவல்களை வெளியிட்டது. 47 பக்கங்கள் அடங்கிய அத்தகவல் அறிக்கையில், மலேஷியா விமான நிலைய அதிகாரிகள் பறந்துக்கொண்டிருந்த ஆர் 370 விமானத்தை தொடர்புக்கொள்ள இருமுறை தொலைபேசியில் அழைத்ததும், அந்த அழைப்புகள் பதிலளிக்கப்படாததும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை 3 மாதங்கள் வரை மலேஷியா அரசு ஏன் வெளியிடவில்லை? இவ்வளவு தாமதமாக ஏன் வெளியிடவேண்டும் என பயணிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த சோகத்தை மறப்பதற்குள் இன்னொரு சோகம் நடந்தது. அது என்ன? இதோ! 

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானம் ஆர் 17
குடந்த ஜுலை 17 ஆம் தேதி மலேஷியா விமான போக்குவரத்து சேவையில் கண்ணீர் அத்தியாயத்தை  எழுதிவிட்டது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த இந்த ஆர் 17 விமானம் 1997 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் பயணத்தை தொடங்கியது. இவ்விமானம் சேவையில் ஈடுபட்டு 17 ஆம் ஆண்டு நிறைவு தினமான 17 ஜுலை 2014 அன்று மலேசியன் விமானம் ஆர் 17, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேஷியா தலைகநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது உக்ரைன் எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் 'டொனெஸ்க்' மாவட்டத்திலுள்ள 'ஹராபோவோ' வான் பரப்பில் ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதன்போது விமானத்தில் பயணித்த 283 பயணிகளும் 15 விமானப் பணியாளர்களும் உட்பட 298 பேரும் கொல்லப்பட்டனர். கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தரையில் இருந்து விமானம் தாக்கி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

செப்டம்பர் 2001-ல் யூதர்களால் அமெரிக்கா, பென்டகன் வர்த்தக கட்டிடத்தின் மீதான விமானத் தாக்குல்களுக்குப் பின்னர் மிகப் பாரதூரமாக உயிரிழப்புகளையும்¢ உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் விமானத் தாக்குதலாகவும் இது கருதப்படுவதுடன் இவ்வருடத்தின் மலேஷியன் ஏர்லைன்ஸ் 2-வது விமான விபத்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதற்கு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே காரணம் என்றும்¢ இது ஒரு சர்வதேச குற்றம் என்றும் உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ள வேளையில், இவ்விபத்துக்கு தாம் பொறுப்பானவர்கள் அல்ல என கிளர்ச்சியாளர்கள் மறுப்பும்  தெரிவித்துள்ளனர். இந்த பேரிடரைச் சூழ்ந்துள்ள மர்ம முடிச்சுகளும் அப்படியே உள்ளன. 

அந்த விமானத்தில் ஒருவர் விடியோ படம் எடுத்திருந்ததும் செய்தியில் வெளியாகியிருந்தது. அந்தோ பரிதாபம!; இன்னும் சில வினாடிகளில் தனக்கு மரணம் நிகழப்போகிறது என்பது அவருக்கு தெறியவில்லை. அவர்களுது தவணை வந்துவிட்டால் ஒரு வினாடி முற்படுத்தவும் பிற்படுத்தப்படவும் மாட்டாதே. 

அல்லாஹ் கூறுகிறான்: 'அவர்களின் (அந்த ஆயுள்) தவணை வந்துவிட்டால், அவர்கள் சிறிது நேரம்கூடப் பிந்தவுமாட்டார்கள்¢ முந்தவுமாட்டார்கள்' என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 10:49) மற்றொரு வசனத்தில், 'எந்தவோர் ஆன்மாவுக்கும் அதன் (ஆயுள்) தவணை வந்துவிட்டால், அதை அல்லாஹ் தாமதப்படுத்தமாட்டான்' (அல்குர்ஆன் 63:11) மற்றொரு வசனத்தில், 'அவர்களுக்கான (ஆயுள்) தவணை வந்துவிட்டால், அவர்கள் சிறிது நேரம்கூடப் பிந்தவுமாட்டார்கள்¢ முந்தவுமாட்டார்கள்'. (அல்குர்ஆன் 16:61) 

எந்த மண்ணால் படைக்கப்பட்டதோ அதே மண்ணில் மரணிக்கும்

منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى (القرآن 20:55)
அல்லாஹ் கூறுகிறான்: 'இதில் (மண்ணில்) இருந்தே உங்களை நாம் படைத்தோம். ;இதற்கே உங்களை நாம் திரும்பச்செய்வோம். இதிலிருந்தே இன்னொரு முறை உங்களை நாம் வெளியே கொண்டுவருவோம்'. (அல்குர்ஆன் 20:55) 
இந்த வசனத்திற்கு அல்லாமா இஸ்மாயீல் ஹக்கீ (ரஹ்) அவர்கள் விளக்கவுரை எழுதுகையில், எந்த பூமியின் மண்ணை எடுத்து மனிதன் படைக்கப்பட்டானோ அதே பூமியில்தான் அவன் (மய்யாதாக) திருப்பப்படுவான் என்கிறார்கள். (தஃப்ஸீர் ரூஹுல் பயான்) 

عن ابى هريرة رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من مولود الا وقد ذر عليه من تراب حفرته (أبو نعيم)

அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: 'பிறக்குகின்ற எல்லாக் குழந்தைகலும் அவர்களின் கப்ரு குழியின் மண்ணை (அவர்கள் படைக்கப்படயிருக்கின்ற இந்திரியத்துளியில்) போடாமல் (இவ்வுலகில்) பிறப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (நூல்: அபூ நூஐம்)
ஆகவே, இதிலிருந்து ஒரு செய்தி தெளிவாகிறது. ஆர் 17 விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் எறிந்து சாம்பலாகிவிட்டார்கள். அவர்கள் அந்த பூமியில் மரணித்துவிட்டார்கள் என்றால்? அவர்களுது உயிர்களும் அந்த நெதர்லாந்து நாட்டின் பூமியின் மண்ணைக் கொண்டே படைக்கப்பட்டருந்தார்கள். எனவே அதே மண்ணிலேயே மரணித்தார்கள் என்ற உண்மையை மேலே கூறப்பட்டுள்ள வசனத்தையும் நபிமொழியையும் வைத்து விளங்க முடிகிறது. எனவே, அவர்கள் அங்கே சென்றதால் மரணிக்கவில்லை¢ மரணம் அங்கே இருப்பதால் சென்றார்கள் என்பதுதான் உண்மை.
 அவர்களில் சிலரது உடம்மை ஒருமாத காலத்திற்கு பின்பும் அரச மறியாதையோடு 22.08.2014-ல் சிறப்பு விமானத்தின் மூலம் மலேஷியாவிற்கு எடுத்து வரப்பட்டு அரச மறியாதையோடு அந்த ஜனாஸாக்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது என்பதும் அந்த உயிர்களை இந்த மலேஷிய நாட்டின் மண்ணிலிருந்தே அல்லாஹ் படைத்திருக்க வேண்டும் என்றுச் சொல்லலாம். அன்றைய நிகழ்ச்சியை எல்லா தொலைகாட்சிகளிலும் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது. அன்றைய நாளை துக்க நாளாகவும் அரசாங்கம் அறிவித்து ஆழ்ந்த இரங்களை தெறிவித்தது. 

அதுமட்டுமல்ல, ஆர் 370 காணமல் போனதிலிருந்து இதுவரையிலும் அவர்கள் நலமாக நாடு திரும்பவேண்டும் என்று அரசாங்கமே பல 'ஸலாதுல் ஹாஜத்தை' நடத்தியது. அதிகமாக துஆக்களை செய்தது. ஜும்ஆவில் மிம்பரிலே துஆ கேட்கும்படியாக எல்லா பள்ளிகளுக்கும் அறிக்கையை அனுப்பியது. புறவழிச் சாலை(ஹைவே)களிலும் கூட ஆர் 370 நலமாக திரும்ப பிரார்த்திக்கிறோம் என்ற அறிவிப்பு பலகைகளை வைத்தது. 

அதுபோலவே ஆர் 17 சுட்டு வீழ்த்தப்பட்டு பயணிகள் மரணத்துவிட்டார்கள் என்ற செய்தி உறுதியானபோது அரசாங்கமே மனிதாமிபான அடிப்படையில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் என்ற வித்தியாசமின்றி அனைவர்களது பாவமன்னிப்புக்காகவும் 'காயிப் ஜனாஸா' தொழ வைத்ததோடு, எல்லாப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை அதே மிம்பரில் துஆ செய்யும்படி உத்தரவு பிறப்பித்தது. சாலைகளிலிலும் உறவினர்களுக்கு (ஸப்ரன் ஜமீலா) அழகியப் பொறுமையைத் தருவானாக! என்ற துஆ வாசகங்களை டிஜ்டல் (மின்னியல்) விளம்பரமாக ஓடவிட்டது. தொலைக்காட்சி விளம்பரங்களின் இடையே ஆர் 17 மரணித்தவர்களுக்காக 'ஃபாத்திஹா ஓதுங்கள்' என்ற மலாய் வாசகம் நினைவூட்டிக்கொண்டே இருந்தது. 

இரண்டு விமானங்களைப் பற்றிய தகவல்களை தனது இணையதளத்தில் தவறாமல் தெளிவாக வழங்கிக்கொண்டே இருக்கிறது. தற்சமயம், மரணித்தவர்களுக்கு அனுதாபம் தெறிவிக்கும் விதத்தில் தனது இணயதளத்தில், (Remembering MH17: In loving memory of our loved ones who left us on 17 July 2014. You will always remain in our thoughts and close to our hearts. We will never forget) என்ற இந்த வாசகம் போடப்பட்டுள்ளது. இவைகளை நினைத்துப் பார்க்கும்போது ஒரு இஸ்லாமிய நாட்டின் விமானமாக இருந்ததால்தான் இவ்வளவு துஆக்களை மவ்தாக்கள் பெற்றனர். இதே வேறு இஸ்லாம் அல்லாத நாட்டின் விமான விபத்தாக இருந்தால் இந்த விலை மதிப்பிட முடியாத துஆவை பெற்றிருப்பார்களா? என்பது கேள்விக்கூறிதான். 

எனவே, அல்லாஹ் நம் அனைவரது இறுதி முடிவையும் நல்லதாக்கி வைப்பானாக! மாரடைப்பால் மரணிப்பது, சாலைகளில் அடிபட்டு மரணிப்பது, நீரில் மூழ்கி மரணிப்பது, தீயில் கருகி மரணிப்பது, கட்டிட இடுபாடுகளில் சிக்கி மரணிப்பது, இயற்கை சீற்றங்களாகிய புயல்-சூறாவளி-சுனாமியினால் மரணிப்பது, பஞ்ஜம்-பட்டினியால் மரணிப்பது, மற்றும் விமான விபத்தில் மரணிப்பதை விட்டும் நம்மை காத்தருள் புறிவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!

No comments:

Post a Comment