
மனித வாழ்க்கையில் கொடுக்கல்
வாங்கல் (المعاملات) முக்கிய இடத்தை வகிக்கிறது. பொருள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை என்று
சொல்வர். பொருளீட்டுவதற்கான துறைகளில் வணிகம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. வணகத்தை
அரபியில் 'அல்பைஉ' (البيع) என்று சொல்லப்படும். பல வகை வணிகங்கள் உண்டு என்பதல்
நபிமொழி மற்றும் பிக்ஹ் கிரந்;தங்களில் கிதாபுல் புயூஉ (كتاب البيوع) எனும் பன்மைச் சொல் ஆளப்பட்டிருக்கிறது.
எனவே, வணிகவியலில் இஸ்லாம் ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்குகிறது
என்றால் அது ஓர் மிகையான வார்த்தை இல்லை.
“பைஉ” என்பதற்கு “விற்றல்” என்பதே பொருளாகும்.
இருப்பினும், “வாங்குதல்” என்ற பொருளும் இதற்கு உண்டு. அவ்வாறே, 'ஷிரா' என்பதற்கு 'வாங்குதல்' என்பதே பொருளாகும். இருப்பினும்
'விற்றல்' என்ற பொருளிலும் இச்சொல் ஆளப்படுகிறது. கிரயத்தைப் பெற்றுக்கொண்டு
ஒரு பொருளின் உடைமையைப் பிறருக்கு மாற்றிக் கொடுப்பதே 'பைஉ'
(விற்றல்) ஆகும். அதை ஏற்பதே 'ஷிரா'
(வாங்குதல்) ஆகும். ஒருவருக்கு அடுத்தவர் வசம் உள்ள பொருள் தேவைப்படலாம்.
அவர் அதை இலவசமாகக் கொடுக்க மறுக்கலாம். அப்போது, விலையைக் கொடுத்துப் பொருளைப் பெற வணிக முறையே வகை செய்கிறது. இதனால் இருவருக்கும்
நன்மை. வாங்கியவருக்குத் தேவை நிறைவேறுகிறது. விற்றவருக்கு இலாபம் கிடைக்கிறது.
ஆக, வணிகத்தின் மூலம் சுமுகமான முறையிலும், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையிலும் பொருளும் பணமும் கைமாறுகின்றன. இந்த முறை
மட்டும் இல்லாவிட்டால் பொருளாதார நடவடிக்கைகளே முடங்கிவிடும். உலகத்தின் இயக்கமே நின்றுவிடும்.
இதனால்தான் இறைவன் வணிகத்தை அனுமதித்தான். அதே நேரத்தில் மனித குலத்திற்கு, குறிப்பாக விற்போர் அல்லது வாங்குவோருக்கு பாதிப்பை உண்டாக்கும் சில வணிக முறைகளுக்கு
இஸ்லாம் தடை விதிக்கிறது. வட்டி, சூதாட்டம், மது விற்பனை, பதுக்கல், மோசடி, கலப்படம் போன்ற நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
(ஃபத்ஹுல் பாரி, தக்மிலா)
قال الله تعالى: وَأَحَلَّ
اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا. (القرآن 2:275) لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ
بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ
(القرآن4:29)
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்
வணிகத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்துள்ளான். (அல்குர்ஆன் 2:275) உங்களின் பரஸ்பர திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்.
(அல்குர்ஆன் 4: 29)
வாணிகம் செய்வது அல்லாஹ்வின் அருளை
தேடுவது
قال الله تعالى: فَإِذَا
قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ
وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ (القرآن 62:11) لَيْسَ عَلَيْكُمْ
جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ (القرآن2:198 )
'(ஜூமுஆ)' தொழுகை நிறைவேற்றப்பட்டதும், பூமியில் பரவிச்சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வை அதிகமாக
நினைவுகூருங்கள்; நீங்கள் வாகை சூடலாம். (அல்குர்ஆன் 62:11) '(ஹஜ்ஜின்போது வணிகம் செய்து) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமன்று”.
(அல்குர்ஆன் 2:198)
அபூ உமாமா அத்தைமீ (ரஹ்)
அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரளி) அவர்களிடம், 'நாங்கள் (ஹஜ் பயணத்தில்) கூலிக்கு வேலை செய்யச் செல்வோம். எங்களுக்கு ஹஜ்(ஜின்
நன்மை) உண்டா?' என்று கேட்டேன். அதற்கு, 'நீங்கள் இறையில்லைத்தை (தவாஃப்) சுற்றி, அரஃபாவில் தங்கி, ஷைத்தானுக்குக் கல்லெறிந்து, உங்கள் தலைகளை மழிப்பதில்லையா?' என்று அவர்கள் கேட்டார்கள்.
நாங்கள்,
'ஆம்' (செய்கிறோம்) என்றோம்.
அப்போது இப்னு உமர் (ரளி)
அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீர் என்னிடம் கேட்டதைப் போன்றே கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.
பின்னர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்த வசனத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள்.
உடனே அந்த மனிதரை அழைத்த நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் ஹஜ் செய்தவர்கள்தான்” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது)
வணிகர்களை வாழ்த்திய வள்ளல் நபி
(ஸல்)
حدثنا هناد حدثنا قبيصة
عن سفيان عن أبي حمزة عن الحسن عن أبي سعيد : عن النبي صلى الله عليه و سلم قال التاجر
الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء. (ترمذى-1130)
حدثنا أبو سلمة يحيى بن خلف حدثنا بشر بن المفضل عن عبد الله بن عثمان بن خثيم
عن إسماعيل بن عبيد بن رفاعة عن أبيه عن جده : أنه خرج مع النبي صلى الله عليه و سلم
إلى المصلى فرأى الناس يتبايعون فقال يا معشر التجار ! فاستجابوا لرسول الله صلى الله
عليه و سلم ورفعوا أعناقهم وأبصارهم إليه فقال إن التجار يبعثون يوم القيامة فجارا
إلا من اتقى الله وبر وصدق.
(ترمذى-1131)
அபூசயீதுல் குத்ரீ (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'வாய்மையோடும் நம்பகத் தன்மையோடும்
நடந்துகொள்ளும் வணிகர், (மறுமை நாளில்) இறைத்தூதர்களுடனும் வாய்மையாளர்களுடனும்
(ஸித்தீகீன்), உயிர்த் தியாகிகளுடனும் (ஷூஹதா) இருப்பர் என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.' (திர்மிதி-1130)
ரிஃபாஆ பின் ராஃபிஉ (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்களுடன் தொழும் திடலுக்கு
(முஸல்லா) சென்றேன். அங்கு மக்கள் வணிகத்தில் ஈடுபட்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்.
அப்போது, 'வணிகர்கள் (துஜ்ஜார்) சமுதாயமே!' என்று அழைத்தார்கள். உடனே
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அழைப்புக்குப் பதிலளித்து, தம் கழுத்துகளையும் பார்வைகளையும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி உயர்த்தினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், 'வணிகர்கள் மறுமை நாளில் பாவிகளாகவே எழுப்பப்படுவர். அல்லாஹ்வை
அஞ்சி, நேர்மையோடும் வாய்மையோடும் நடந்துகொண்டவர்களைத் தவிர' என்று கூறினார்கள். (திர்மிதி-1131)
حدثنا هناد حدثنا أبو بكر بن عياش
عن عاصم عن أبي وائل عن قيس بن أبي غرزة قال : خرج علينا رسول الله صلى الله عليه
و سلم ونحن نسمي السماسرة فقال يا معشر التجار ! إن الشيطان والإثم يحضران البيع
فشوبوا بيعكم بالصدقة (ترمذى-1129)
கைஸ் பின் அபீஃகரஸா (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தபோது, (வணிகர்களான) நாங்கள் 'சமாசிரா' (தரகர்கள்) என்றே அழைக்கப்பட்டு
வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான், 'வணிகர் (துஜ்ஜார்) சமுதாயமே! என அழைத்து, வணிகம் செய்யும்போது ஷைத்தானும் பாவங்களும் பங்கேற்றுவிடுகின்றன. எனவே, உங்கள் வணிகத்தை தர்மத்துடன் கலந்துவிடுங்கள் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி – 1129)
'சமாசிரா' என்பது 'சிம்சார்' என்பதன் பன்மையாகும். முகவர் (Agent), தரகர் (Broker) அல்லது நடுவர் (Middle Man) என்பன இதன் சொற்பொருள்களாகும். 'விற்றல் வாங்கல்' ஆகியவற்றுக்கு 'சம்சரா' என்பர். 'சமாசரா' எனும் இச்சொல் உண்மையில்
அரபிமொழிச் சொல் இல்லை. பெரும்பாலும் அரபியருடன் வெளிநாட்டு வணிகர்களே வணிகத் தொடர்பு
வைத்திருந்தனர். அவர்களிடமிருந்தே இச்சொல் வந்தது. அரபு வணிகர்களும் 'சமாசிரா' என்றே அழைக்கப்பட்டுவந்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள்
இதை மாற்றி, 'வணிகர்'கள் என்பதைக் குறிக்க 'துஜ்ஜார்' எனும் அரபுச் சொல்லை ஆண்டார்கள். இது 'தாஜிர்' என்பதன் பன்மையாகும். (அல்மவ்ரித், துஹ்ஃபதுல் அஹ்பதீ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْبَلْخِيُّ أَبُو بَكْرٍ ،
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ ، عَنْ
عَطَاءِ بْنِ فَرُّوخَ ، قَالَ : قَالَ عُثْمَانُ بْنُ عَفَّانَ : قَالَ رَسُولُ
اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : أَدْخَلَ اللَّهُ الْجَنَّةَ رَجُلاً كَانَ
سَهْلاً بَائِعًا وَمُشْتَرِيًا. (ابن ماجه-2202)
உஸ்மான் பின் அஃப்பான்
(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'விற்பதிலும் வாங்குவதிலும்
மெண்மையாக நடந்துகொண்ட மனிதரை சுவர்க்கத்தில்
அல்லாஹ் நுழைய வைப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (இப்னுமாஜா-2202)
حدثنا عبد الله
حدثني أبي ثنا يزيد ثنا المسعودي عن وائل أبي بكر عن عباية بن رفاعة بن رافع بن
خديج عن جده رافع بن خديج قال قيل : يا رسول الله أي الكسب اطيب قال عمل الرجل
بيده وكل بيع مبرور. (مسند احمد – 17304)
ராபிஉ பின் கதீஜ் (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வின் திருத்தூதரே! சம்பாத்தியத்தில் மிகச் சிறந்தது எது? என்று நான் கேட்டேன். அதற்கு, ஒருவர் தனது கையால் (உழைத்து) உண்பதும்;;;;;; அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு வணிகமும் ஆகும் எனக்கூறினார்கள்'. (முஸ்னது அஹ்மது – 17304)
முற்பகலில் வணிபம் செய்வது அருள்வளம் (பரக்கத்) உடையது
حَدَّثَنَا سَعِيدُ بْنُ
مَنْصُورٍ حَدَّثَنَا هُشَيْمٌ حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ حَدَّثَنَا عُمَارَةُ
بْنُ حَدِيدٍ عَنْ صَخْرٍ الْغَامِدِىِّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ
« اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِى فِى بُكُورِهَا ». (ترمذى-1133)
ஸக்ர் பின் வதாஆ அல்ஃகாமிதீ
(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இறைவா! என் சமதாயத்தாருக்கு, அவர்களின் முற்பகல் நேர(வணி)கத்தில்
நீ அருள்வளம் (பரக்கத்) வழங்குவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.
(திர்மிதி-1133)
عن
عائشة قالت قال رسول الله صلى الله عليه و سلم باكروا طلب الرزق والحوائج فإن
الغدو بركة ونجاح (معجم الاوسط – 7250) أذا صليتم الفجر فلا تناموا عن طلب
أرزاقكم. (طبرانى)
ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அதிகாலையில் ரிஜ்கையும் தேவையையும் தேடிக்கொள்ளுங்கள்ளூ
ஏனெனில் அதிகாலை நேரம் பரக்கத்தும் வெற்றியும் நிறைந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (முஃஜமுல் அவ்ஸத்-7250) நீங்கள் பஜ்ர் தொழுகை தொழுத பின்னால் உங்களது ரிஜ்கை தேடுவதை விட்டுவிட்டு உறங்காதீர்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானி)
வியாபாரத்தின் வகைகள்
• முன்பன வணிகம் (அஸ்ஸலம்) - كِتاَبُ السَّلَمِ
• விலைகோள் உரிமை (அஷ்ஷூஃப்ஆ)
- كِتاَبُ الشُّفْعَةِ
• வாடகை - كِتاَبُ الْاِجاَرَةِ
• கடனை மற்றி அமைத்தல் -
كِتاَبُ الْحَواَلَةِ
• பிணையேற்றல் - كِتاَبُ الْكَفاَلَةِ
• செயலுரிமை வழங்கல் - كِتاَبُ الْوَكاَلَةِ
• வேளாண்மையும் நிலக் குத்தகையும்
كِتاَبُ الْحَرْثِ وَالْمُزاَرَعَةِ
• தோப்புக் குத்தகை - كِتاَبُ الْمُساَقاَةِ
• கடன், பொருளாதாரத் தடை, திவால்- كِتاَبُ الْاِسْتِقْراَضِ
وَاَداَءِ الدُّيُوْنِ وَالْحَجْرِ وَالتَّفْلِيْسِ
• கூட்டுரிமை - كِتاَبُ الشَّرِكَةِ
• அடைமானாம் - كِتاَبُ الرَّهْنِ
ஹலாலான முறையில் பொருளீட்டல்
يَا
أَيُّهَا النَّاسُ كُلُواْ مِمَّا فِي الأَرْضِ حَلاَلاً طَيِّباً. (القرآن 2:168)
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில்
அனுமதிக்கப்பட்ட தூய்மையானதையே உண்ணுங்கள். (அல்குர்ஆன் 2:168)
இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள்
கூறியதாவது: ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் மேற்கண்ட (2:168) இந்த வசனம் ஓதிக்காட்டப்பட்டது. உடனே சஅத் பின் அபீவக்காஸ் (ரளி) அவர்கள் எழுந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என் வேண்டுதல்(துஆக்)கள் ஏற்கப்பட அல்லாஹ்விடம் பிரார்த்தனை
செய்யுங்கள்' என்றார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'சஅதே! தூய்மையா(ஹலாலா)ன உணவையே உண்ணுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் ஏற்கப்படும்.
முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அ(ந்த இறை)வனின்மீது சத்தியமாக! ஒரு மனிதர் தடை
செய்யப்பட்ட உணவில் ஒரு கவளத்தைத் தனது வயிற்றில் இடுகிறார், அதனால் நாற்பது நாட்கள் அவர் (புரியும் நற்செயல்கள்) ஏற்கப்படுவதில்லை. எந்த அடியாரின்
சதை முறைகேடான சம்பாத்தியத்தாலும் வட்டியாலும் வளர்ந்ததோ அந்தச் சதைக்கு நரகமே ஏற்ற
இடமாகும்'
என்று கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி)
ஹலால் ஹராம் பேணிப்படதா காலம்
வரும்
حدثنا آدم ، حدثنا ابن أبي ذئب ،
حدثنا سعيد المقبري ، عن أبي هريرة ، رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم
قال : يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام.
(بخارى-2059)
அபூஹுரைரா (ரளி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்: 'மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு மனிதர், தாம் சம்பாதித்தது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா, அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பதைப் பற்றிப் பொருட்படுத்தமாட்டர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-2059)
عن النعمان بن بشير ، رضي الله عنه ، قال : قال النبي
صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهة فمن ترك ما شبه
عليه من الإثم كان لما استبان أترك ومن اجترأ على ما يشك فيه من الإثم أوشك أن
يواقع ما استبان والمعاصي حمى الله من يرتع حول الحمى يوشك أن يواقعه.(بخارى-2051)
நுஅமான் பின் பஷீர் (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானதுளூ தடை செய்யப்பட்டதும்
(ஹராம்) தெளிவானது. இவை இரண்டுக்குமிடையே சந்தேகத்திற்கிடமான சில செயல்களும் உள்ளன.
யார் பாவம் எனச் சந்தேகப்படுபவற்றை கைவிடுகிறாரோ அவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை
நிச்சயம் கைவிடுவார்ளூ யார் பாவம் எனச் சந்தேகிக்கப்படுவற்றைச் செய்யத் துணிகிறாரோ
அவர் (பாவம் என்று) தெளிவாகத் தெரிகின்றவற்றிலும் சிக்கிக்கொள்ளக்கூடும். பாவங்கள்
அல்லாஹ்வின் வேலிகளாகும். யார் வேலியைச் சுற்றி மேய்கிறாரோ அவர் அதற்குள்ளேயே சென்றுவிடக்கூடும்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-2051)
حدثنا
محمد بن عبد الله بن نمير الهمدانى حدثنا أبى حدثنا زكرياء عن الشعبى عن النعمان
بن بشير قال سمعته يقول سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول وأهوى النعمان
بإصبعيه إلى أذنيه « إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير
من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع فى الشبهات وقع فى الحرام.
(مسلم-4178)
நுஅமான் பின் பஷீர் (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானதுளூ தடை செய்யப்பட்டதும்
(ஹராம்) தெளிவானது. இவை இரண்டுக்குமிடையே சந்தேகத்திற்கிடமான சில செயல்களும் உள்ளன. அவற்றை பெரும்பாலானவர்கள் அறிவதில்லை.
சந்தேகத்திற்கிடமானவற்றை யார் தவிர்த்துக்கொள்கிறாரோ, அவர் தனது மார்க்கத்தையும் சுயமரியாதையையும் காத்துக்கொண்டார்.
சந்தேகத்திற்கிடமானவற்றை செய்தாரோ அவர் ஹராமானதில் விழந்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-4178)
மார்க்கத்தில் மூன்று விதிகள்
உள்ளன. 1. அனுமதிக்கப்பட்டது (ஹலால்). ஆதில் எந்த குழப்பமும் இல்லை. உதாரணமாக, உணவுப் பொருட்களில் ரொட்டி, பழ வகைகள்,
தேன், நெய், அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சி,
அனுமதிக்கப்பட்டவற்றின் முட்டை உள்ளிட்டவை ஹலால் ஆகும். அவ்வறே பேச்சு, பார்வை, நடத்தை, வியாபாரம் போன்றவற்றிலும் ஹலால் உண்டு.
2. தடை செய்யப்ட்டது (ஹராம்). அதிலும் எந்தக் குழப்பமும் இல்லை. மது, பன்றி, செத்த பிராணி, இரத்தம் போன்றவற்றை உட்கொள்வது ஹராம் ஆகும். அவ்வாறே, மேசாடி வியாபாரம், விபசாரம்,
பொய், புறம் பேசுதல், கோள் சொல்லல், அந்நியப் பெண்களை பார்த்தல் போன்ற செயல்களும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
3. சந்தேகத்திற்கிடமானது (முஷ்தபிஹ்). இது ஹலால் என்பதிலும் தெளிவு இருக்காதுளூ ஹராம்
என்பதிலும் தெளிவு இருக்காது. இது தொடர்பாகப் பெரும்பாலான மக்கள் குழப்பத்தில் இருப்பார்கள்.
அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது.
(எடு;த்துக்கட்டாக, ஒருவருக்கு ஹலாலான
வருமானமும் உண்டுளூ ஹராமான வருமானமும் உண்டு. அவர் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கினார்.
அது அவரது ஹலாலான வருமானத்திலிருந்து வந்ததா? ஹரமான வருமானத்திலிருந்து வந்ததா? என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. உங்களுக்கு மட்டுமின்றி பலருக்கும்
தெரியவில்லை. சற்று ஆராய்ந்தால் சில பேர் வேண்டுமானால் அறிந்துகொள்ளலாம். அப்படி அறிவோர்கூட
ஒருகால் தவறான முடிவுக்கு வந்திருக்கக்கூடும். இந்த குழப்பமான நிலையில் அந்த அன்பளிப்பை
நீங்கள் தவிர்த்துவிடுவதே நல்லது) அது ஹராமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தத் துணிந்துவிட்டால், நாளை ஹராமையே துணிவோடு செய்கின்ற நிலை ஏற்படலாம்.
ஹராம் என்பது வேலி. வேலிக்கு
அருகில் கால்நடைகளை மேய்த்துப் பழகிவிட்டால், ஒரு நாள் அந்த வேலிக்கு உள்ளையே செல்கின்ற துணிச்சல்
பிறந்துவிடும். எனவேதான், சந்தேகத்திற்கிடமானவற்றை யார் தவிர்த்துக்கொள்கிறாரோ, அவர் தனது மார்க்கத்தையும் சுயமரியாதையையும் காத்துக்கொண்டார்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்மின்ஹாஜ், தக்மிலா)
قال عمر رضى الله عنه: ((لا يبيع فى سوقنا
ألا من يفقه))
உமர் (ரளி) அவர்கள் கூறினார்கள்: (வணிகத்தின்) சட்ட அறிவு இல்லாதோர் நமது கடைவீதியில்
வியாபாரம் செய்யக்கூடாது!.
எனவே, இஸ்லாம் கூறும் வணிக முறையை கையாண்டு சிறந்த பொருளாதாரத்தை ஈட்டு, வாழ்க்கையை மேம்படுத்தி உயர்ந்த வாழ்க்கையை வாழ வல்ல ரப்புல் ஆலமீன் அருள் புறிவானாக!
அமீன் யாரப்பல் ஆலமீன்!!
How to get to Lucky Lucky 777 Casino by Bus
ReplyDeleteThe cheapest way to get to Lucky 777 대구광역 출장안마 Casino by Bus 남원 출장마사지 is by 군포 출장샵 bus. The 영천 출장안마 quickest way takes just 6 mins. Find the bus stop closest to Lucky 목포 출장안마 777 Casino by Bus.