الم, غُلِبَتِ الرُّومُ, فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ
غَلَبِهِمْ سَيَغْلِبُونَ, فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ
وَمِنْ بَعْدُ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ (القرآن 30: 1-4)
அல்லாஹ் கூறுகிறான்: 'அலிஃப் லாம் மீம், ரோம் (பாரசீகர்களால்) வெற்றிகொள்ளப்பட்டுவிட்டது. அருகிலுள்ள பூமியில் அவர்(ரோமர்)கள் தங்களுடைய தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். சில வருடங்களிலேயே அவர்கள் (வெற்றிகொள்வார்கள்) (வெற்றி-தோல்வி அளிக்கும்) அதிகாரம் (இதற்கு) முன்னரும், (இதற்குப்) பின்னரும் அல்லஹ்வுக்கே உரியது. (ரோமர்கள் வெற்றியடையும்) நாளில் முஃமீன்கள் மகிழ்ச்சியடைவார்கள்'. (அல்குர்ஆன் 30: 1-4)
யார் இந்த ரோமர்கள்?
'அர்ரூம்' என்பது ஹளரத் இப்ராஹீம் (அலை) அவர்களது புதல்வாரன ஹளரத் இஸ்ஹாக் (அலை) அவர்களது பேரரான ரூம் என்பவரது சந்ததியினர் யாவரையும் குறிக்கும். 'ரூம்' என்பவரது தந்தையின் பெயர் 'ஐஸ்' என்பதாகும். இவர் ஹளரத் யாகூப் (அலை) அவர்களது சகோதரர் ஆவார். இவருக்கு முன்னர் ஒருவர் 'ரூம்' என்ற பெயர் உள்ளவராக இருந்தார். இவர் ஹளரத் நூஹ் (அலை) அவர்களது புதல்வாரன 'யாபிது' என்பவரது பேரர் ஆவார். இவரது தந்தையின் பெயர் 'யூனான்' என்பதாகும். கிரீஸ் தேசத்துக்கு 'யூனான்' என்று பெயர். ஹளரத் நூஹ் (அலை) அவர்களது பேரரான 'யூனான்' என்பவர் இங்கு குடியேறி வாழ்ந்ததால் இவரது பெயர் இந்நாட்டுக்கு ஏற்பட்டது போலும். இந்நாட்டில் வாழ்கின்ற யாவருக்கும் 'உரோமர்' என்றும் 'யூனானியர்' என்றும் பொதுப்பெயர் உண்டு. (தஃப்ஸீருல் ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்)
மேலும், 'அர்ரூம்' என்பது கிழக்கு ரோமர்களான அன்றைய பைஸாந்தியரைக் குறிக்கிறது. அரபியரை ஒட்டி மத்திய கிழக்கு நாடுகளில் மாபெரும் பேரரசை நிறுவி ஆட்சி புரிந்துவந்த இவர்கள், வேதக்காரர்களான 'கிறித்தவர்கள்' ஆவர். இவர்களின் அண்டை நாட்டினரான பாரசீகர்கள் அக்னி வழிபாடு செய்யும் 'மஜூசிகளாக' இருந்தனர். கி.பி. 610-ஆம் ஆண்டில் கிழக்கு ரோமர்கள்மீது பாரசீகர்கள் போர் தொடுத்து அன்றைய கிழக்கு ரோம் (பைஸாந்திய) நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றிவிட்டனர். அப்போதெல்லாம், நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்டுவிட்டது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதையும், நபிகளார் இறைத்தூதர் என்பதையும் நிரூபிக்கும் வகையில் அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களில் ஓர் அறிவிப்பை வெளியிட்டான்.
கிழக்கு ரோமர்கள் தற்போதைக்கு பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டுவிட்டாலும், இன்னும் சில ஆண்டுகளில் ரோமர்கள் வெற்றிவாகை சூடுவார்கள் என்பதே அந்த அறிவிப்பாகும். அவ்வாறே கி.பி. 624-ல் கிழக்கு ரோமானியர் வெற்றியும் கண்டனர். அதே ஆண்டில் முஸ்லிம்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பத்ரு போரில் வெற்றிவாகை சூடினர். இதனால், இறைநம்பிக்கையாளர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி ஏற்பட்டது. பின்னர் முஸ்லிம் கலிஃபாக்கள் கிழக்கு ரோமர்களையும் பரசீகர்களையும் தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டியது பின்னாளில் நடந்த நிகழ்வாகும்.
ரோமர்களுக்கும் பாரசீகர்களுக்கும், நபி (ஸல்) அவர்களது காலத்தில் யுத்தம் நிகழ்ந்தது. ரோமர்களும் பாரசீகர்களும் அரபு நாட்டின் எல்லைப் புறத்தில் ஆட்சி புரிந்துக்கொண்டிருந்தனர். அரபு நாட்டின் வடக்குப்பக்கத்திலுள்ள சிரியா, பாலஸ்தீனம், டிரான்ஸ் ஜோர்டான் முதலிய நாடுகள் பல அரபு சிற்றரசர்களது ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. இச்சிற்றரசர்கள் மீது ரோமச் சக்கரவர்த்திக்கு செல்வாக்கு இருந்தது. ரோமச் சக்கரவர்த்தியின் ஆதரவின் பேரில்தான் அவர்கள் ஆட்சி புரிந்து, சக்கரவர்த்திக்கு கப்பங் கட்டிக் கொண்டிருந்தனர். அரபு நாட்டின் வடகிழக்கு பிரதேசத்தில் பாரசீகர்களுக்கு ஆதிக்கம் இருந்தது. இவ்விருவரும் அக்காலத்தில் 'வல்லரசுகளாக' இருந்தனர். இவ்விருவருக்கும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் ரோமர்கள் தோல்வியுண்டனர். பாரசீகர்கள் வெற்றி பெற்றனர்.
முஷ்ரிகுகளிடம் அபூபக்கர் ரளி அவர்கள் பந்தயம்
فَلَمَّا أَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ خَرَجَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَصِيحُ فِي نَوَاحِي مَكَّةَ {الم غُلِبَتْ الرُّومُ فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ فِي بِضْعِ سِنِينَ} قَالَ نَاسٌ مِنْ قُرَيْشٍ لِأَبِي بَكْرٍ فَذَلِكَ بَيْنَنَا وَبَيْنَكُمْ زَعَمَ صَاحِبُكَ أَنَّ الرُّومَ سَتَغْلِبُ فَارِسَ فِي بِضْعِ سِنِينَ أَفَلَا نُرَاهِنُكَ عَلَى ذَلِكَ قَالَ بَلَى وَذَلِكَ قَبْلَ تَحْرِيمِ الرِّهَانِ فَارْتَهَنَ أَبُو بَكْرٍ وَالْمُشْرِكُونَ وَتَوَاضَعُوا الرِّهَانَ وَقَالُوا لِأَبِي بَكْرٍ كَمْ تَجْعَلُ الْبِضْعُ ثَلَاثُ سِنِينَ إِلَى تِسْعِ سِنِينَ فَسَمِّ بَيْنَنَا وَبَيْنَكَ وَسَطًا تَنْتَهِي إِلَيْهِ قَالَ فَسَمَّوْا بَيْنَهُمْ سِتَّ سِنِينَ قَالَ فَمَضَتْ السِّتُّ سِنِينَ قَبْلَ أَنْ يَظْهَرُوا فَأَخَذَ الْمُشْرِكُونَ رَهْنَ أَبِي بَكْرٍ فَلَمَّا دَخَلَتْ السَّنَةُ السَّابِعَةُ ظَهَرَتْ الرُّومُ عَلَى فَارِسَ فَعَابَ الْمُسْلِمُونَ عَلَى أَبِي بَكْرٍ تَسْمِيَةَ سِتِّ سِنِينَ لِأَنَّ اللَّهَ تَعَالَى قَالَ فِي بِضْعِ سِنِينَ وَأَسْلَمَ عِنْدَ ذَلِكَ نَاسٌ كَثِيرٌ (رواه الترمذى – 3194)
இந்த திருவசனத்தை அல்லாஹ் இறக்கியபோது, அபூபக்கர் ஸித்தீக் ரளி அவர்கள் வெளியே வந்து, மக்காவின் பகுதியில், (அலிஃப் லாம் மீம், குலிபதிர் ரூம் என்ற வசனத்தை) சப்தமிட்டு (ஓதிக்காட்டினார்கள்). குரைஷிகள் சிலர், அபூபக்கரே! உமது தோழர், நிச்சயமாக ரோம் பாரஸீகத்தை சில ஆண்டுகளில் வெற்றிக்கொள்ளும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இது விஷயத்தில் நமக்கு மத்தியில் ஒரு தவணையை ஏற்படுத்துவீராக! அதனை குறித்து நாம் ஒரு பந்தயம் வைத்துக்கொள்ளலாமே? என்றனர். அதற்கு அபூபக்கர் ரளி அவர்கள் சம்மதித்தார்(சரி என்றார்)கள். இந்த பந்தயம் கட்டுதல் ஹராமாக்கப்படுவதற்கு முன்பு நடந்ததாகும். அபூபக்கர் ரளி அவர்களும் முஷ்ரிகுகளும் பந்தயம் கட்டினார்கள். அபூபக்கர் ரளி அவர்களிடம் 'பில்வு' (சில ஆண்டு) என்பதற்கு எத்துணை ஆண்டு என்றார்கள். அதற்கு அபூபக்கர் (ரளி) மூன்றிலிருந்து ஒன்பது ஆண்டுகள் என்றார்கள். அதற்கவர்கள், நமக்கு மத்தியில் நடுநிலையான ஒரு ஆண்டை பந்தயமாக வைப்பீராக! என்றனர். அதற்கு அபூபக்கர் ரளி அவர்கள் (சரி) ஆறு ஆண்டை பந்தயமாக கணக்கு வைத்துக்கொள்ளலாம் என்றார்கள். ஆறு ஆண்டுகள் முடிந்தவுடன் முஷ்ரிகுகள் பந்தயமாக கட்டப்பட்டதை எடுத்துக்கொண்டார்கள். முஸ்லிகளில் சிலர் கூட, அல்லாஹ் 'பில்வு சினீன்'-சில ஆண்டுகள் என்றுதான் சொல்கிறான். ஏன் இவர் ஆறு ஆண்டு என்று நிரணயித்தார் என்று குறை பேசினார்கள். ஏழாம் ஆண்டு துவங்கியது, ரோமானியம் பாரசீகத்தை (கி.பி. 624-ல்) வெற்றிகொண்டுவிட்டது. (இந்த விஷயம் உண்மையானதால்) பலர் அப்போது இஸ்லாத்தை ஏற்றார்கள். (திர்மிதி – 3194)
فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَاتِ، فَخَرَجَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ إِلَى الْكُفَّارِ، فَقَالَ: فَرِحْتُمْ بِظُهُورِ إِخْوَانِكُمْ، فَلَا تَفْرَحُوا فَوَاللَّهِ لَيُظْهِرُنَّ عَلَى فَارِسَ عَلَى مَا أَخْبَرَنَا بِذَلِكَ نَبِيُّنَا، فَقَامَ إِلَيْهِ أُبَيُّ بْنُ خَلَفٍ الْجُمَحِيُّ فَقَالَ: كَذَبْتَ، فَقَالَ: أَنْتَ أَكْذَبُ يَا عَدُوَّ اللَّهِ، فَقَالَ: اجْعَلْ بَيْنَنَا أَجَلًا أُنَاحِبُكَ عَلَيْهِ -وَالْمُنَاحَبَةُ: الْمُرَاهَنَةُ-عَلَى عَشْرِ قَلَائِصَ مِنِّي وَعَشْرِ قَلَائِصَ مِنْكَ، فَإِنْ ظَهَرَتِ الرُّومُ عَلَى فَارِسَ غَرِمْتُ، وَإِنْ ظَهَرَتْ فَارِسُ غَرِمْتَ فَفَعَلُوا وَجَعَلُوا الْأَجَلَ ثَلَاثَ سِنِينَ فَجَاءَ أَبُو بَكْرٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِذَلِكَ، وَذَلِكَ قَبْلَ تَحْرِيمِ الْقِمَارِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: 'مَا هَكَذَا ذَكَرْتُ إِنَّمَا الْبِضْعُ مَا بَيْنَ الثَّلَاثَةِ إِلَى التِّسْعِ، فَزَايِدْهُ فِي الْخَطَرِ وَمَادِّهِ فِي الْأَجَلِ، فَخَرَجَ أَبُو بَكْرٍ وَلَقِيَ أُبَيًّا، فَقَالَ: لَعَلَّكَ نَدِمْتَ؟ قَالَ: لَا فَتَعَالَ أُزَايِدُكَ فِي الْخَطَرِ وَأُمَادُّكَ فِي الْأَجَلِ، فَاجْعَلْهَا مِائَةَ قَلُوصٍ وَمِائَةُ قَلُوصٍ إِلَى تِسْعِ سِنِينَ، وَقِيلَ إِلَى سَبْعِ سِنِينَ، قَالَ قَدْ فَعَلْتُ: فَلَمَّا خَشِيَ أُبَيُّ بْنُ خَلَفٍ أَنْ يَخْرُجَ أَبُو بَكْرٍ مِنْ مَكَّةَ أَتَاهُ فَلَزِمَهُ، وَقَالَ: إِنِّي أَخَافُ أَنْ تَخْرُجَ مِنْ مَكَّةَ فَأَقِمْ لِي كَفِيلًا فَكَفَلَ لَهُ ابْنَهُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرٍ، فَلَمَّا أَرَادَ أُبَيُّ بْنُ خَلَفٍ أَنْ يخرج إلى احد أَتَاهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ فَلَزِمَهُ، فَقَالَ: لَا وَاللَّهِ لَا أَدَعُكَ حَتَّى تُعْطِيَنِي كَفِيلًا فَأَعْطَاهُ كَفِيلًا. ثُمَّ خَرَجَ إِلَى أُحُدٍ ثُمَّ رَجَعَ أُبَيُّ بْنُ خَلَفٍ فَمَاتَ بِمَكَّةَ مِنْ جِرَاحَتِهِ الَّتِي جَرَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَارَزَهُ، وَظَهَرَتِ الرُّومُ عَلَى فَارِسَ يَوْمَ الْحُدَيْبِيَةِ، وَذَلِكَ عِنْدَ رَأْسِ سَبْعِ سِنِينَ مِنْ مُنَاحَبَتِهِمْ. (تفسير البغوى – للامام الطيبى)
(மற்றொரு அறிவிப்பில்), இவ்வாயத்தை இறைவன் அருளிய பொழுது ஹளரத் அபூபக்கர் சித்தீக் (ரளி) அவர்கள் 'காஃபிர்களிடம் சென்று, உங்கள் சகோதரர்(பாரசீகர்)கள் (ரோமார்களை) வென்றுவிட்டார்கள் என்று சந்தோசப்படுகிறீர்கள். (எல்லைகடந்து) சந்தோசப்படாதீர்கள்! எங்கள் நபியவர்கள் சொன்னதுபோல இறைவனின் மீது ஆணையாக (விரைவில் ரோமர்கள்) பாரசீகர்களை வீழ்த்துவாhக்ள் என்று கூறினார்கள். அப்பொழுது, உபை பின் கலஃப் அல் ஜுஹமீ என்பவன் 'பொய்யுரைக்கிறீர் என்றான். அபூபக்கர் (ரளி) அவர்கள், 'அல்லாஹ்வின் விராதியே! நீதான் மகா பொய்யன் என்றார்கள். நமக்கிடையில் ஒரு தவணையை ஏற்படுத்துவீராக! அதனைக் குறித்து நான் உம்மிடம் பந்தயம் கட்டுகிறேன்' என்றான். அதன்படி நம் இருவருக்கு மத்தியில் பத்து வாலிபமான ஒட்டகைகளை, தோற்றவர் வென்றவருக்குக் கொடுக்க வேண்டும் என பந்தயம் வைத்து, மூன்று வருடம் என்பதாக தவணையையும் ஏற்படுத்தினார்கள்.
பின்னர், ஹளரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விஷயத்ததை அறிவித்த பொழுது, 'பிள்வுன்' என்பது, மூன்றுக்கும் ஒன்பதுக்கும் இடையில் உள்ளது. இத்தகைய சந்தேகமான சந்தர்ப்பங்களில் இவற்றில் நீளமானதை தவணையாக்க வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே, அபூபக்கர் (ரளி) அவர்கள் உபை பின் கலஃபை சந்தித்தபோது, என்ன தோற்றிவிடீர் போல் தெறிகிறதே என்றான். அதற்கு அபூபக்கர் (ரளி) அவர்கள் இல்லை, பந்தயத்தின் கால அவகாசத்ததையும் பரிசின் எண்ணிக்கையையும் சற்று அதிகமாக்க நாடுகிறேன் என்றார்கள். அதன்படி, ஒன்பது வருட தவணையும் நூறு ஒட்டகை பரிசும் என்பதாகப் பந்தயங் (மாற்றிக்) கட்டப்பட்டது. பின்னர், ஹளர் அபூபக்கர் (ரளி) அவர்கள் திருமக்காவை ஹிஜ்ரத் செய்து புறப்பட்ட பொழுது, இப்பந்தயம் வீணாகிவிடுமென உபை பின் கலஃப் பயந்தான். அப்பொழுது, ஹளரத் அபூபக்கர் (ரளி) அவர்களது புதல்வாரன அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் தங்களது தந்தைக்குப் பதிலாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பின்னர், உஹதுக் போருக்கு காஃபிர்கள் புறப்பட்டனர். அப்பொழுது, அபூபக்கர் (ரளி) அவர்களின் புதல்வாரன அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் அவனி(உபை பின் கலஃபி)டம் சென்று பந்தயத்தைக்கூறித் இறைமீது ஆணையாக உன்னை விடமாட்டேன் என தடுக்கவே, அப்பந்தயத்துக்கு வேறொருவனைப் பிணையேற்கச் செய்து விட்டு, உஹதுப் போருக்கு சென்றான். அந்தப் போரில் நபி (ஸல்) அவர்களால் அவன் காயம் அடைந்து திரும்ப வந்து மரணித்தான். பின்னர் இவ்வாயத்து அருளப்பட்டு, ஏழாமாண்டின் ஆரம்பத்தில் ரோமர்களுக்கும் பாரசீகர்களுக்கும் மீண்டும் யுத்தம் தொடங்கி ஹுதைபிய்யா நாளில் பாரசீகர்களை ரோமர்கள் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார்கள். (தஃப்ஸீருல் பகவீ - இமாம் தீபீ)
ஹளரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் உபை பின் கலஃபின் வாரிசுகளிடம் பந்தயத்தில் கூறப்பட்டபடி நூறு ஒட்டகைகளை வாங்கி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் குறித்து விசாரித்தார்கள். அவற்றை தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். இதற்குப் பிறகுதான் சூதாட்டத்தையும் மதுவையும் குறித்த விலக்கள்கள் அருளப்பட்டன. தவிர, இவ்வாயத்தில் 'ரோமர்கள்' வெற்றியடைவதைக் குறித்த முன்னறிக்கை இருப்பதாலும், இம்முன்னறிக்கையின்படி 'ரோமர்கள்' வெற்றி பெற்றதாலும் இவ்வயாத்து நபி (ஸல்) அவர்களது நபித்துவத்தை மெய்ப்பிக்கும் ஆதாரங்களில் ஒன்றென்றும் கூறப்படுகிறது. (தஃப்ஸீருல் ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்)
பதுருப்போர் அன்று ரோமர்கள் பாரசீகர்களை வென்றனர்
عن ابى سعيد قال: لما كان يوم بدر ظهرت الروم على فارس فأعجب ذلك المؤمنون. (ترمذى – 3192)
அபூ ஸயீது ரளி கூறினார்கள்: 'பதுருப்போர் அன்று ரோமர்கள் பாரசீகர்களை வென்றார்கள். இவ்விஷயம் முஸ்லிம்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. (திர்மிதி – 3192)
அரசர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கடிதம்
நபி ஸல் அவர்கள், ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்து மதீனா திரும்பியதும் கைபர் யுத்தத்திற்கு புறப்படுவதற்குமுன், பல நாட்டு அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இஸ்லாமிய அழைப்புக் கடிதம் எழுதினார்கள். அவ்வகையில், ஹபஷா நாட்டு மன்னர் நஜ்ஜாஷி, ரோம் நாட்டு மன்னர் ஹிர்கல் (ஹிரக்ளீயஸ் - ர்நசயஉடரைள கி.பி. 575 - 641), பாரசீக நாட்டு மன்னர் கைஸர்-கிஸ்ரா (ஊhழளசழநள), (இதன் மன்னர்களின் புனைப்பெயரே ஆகும். நபியவர்களின் காலத்தில் இருந்தவரின் பெயர், அப்ரோயஸ் பின் ஹுர்முஸ் - ஊhழளசழநள நுpயசறள கி.பி. 590 - 628) சிரியா நாட்டு மன்னர் ஹாரிஸ் பின் அபூஷமிர் அல்கஸ்ஸானி, எகிப்து நாட்டு மன்னர் முகவ்விஸ் மற்றும் யமாமா நாட்டு மன்னர் ஹவ்தா பின் அலி அல்ஹனஃபி ஆகியோர்களுக்கு கடிதம் எழுதி தூதுவர்கள் மூலம் கொடுத்தனுப்பினார்கள்.
நபித்துவத்தை நிலை நாட்ட பாடுபட்ட ஹிரக்ளீயஸ் மன்னர்
கிழக்கு ரோமபுரி பேரரசர் ஹிரக்ளீயஸ் (610-641), பாரசீகப் படைகளைத் தோற்கடித்துவிட்டு, இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக ஜெரூஸலமில் உள்ள 'பைத்துல் மக்திஸ்' புனித ஆலயத்திற்கு வந்திருந்தார். அங்கு நபி (ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்களது மார்க்கம் பற்றியும் மன்னர் கேள்விப்பட்டார். கிறித்தவராக இருந்த ஹிரக்ளீயஸ், இறுதி நபியின் வருகை பற்றி அறிந்துவைத்திருந்தார். எனவே அதை உறுதி செய்துகொள்வதற்காகவே மக்கா குறைபுயரைத் தமது மாளிகைக்கு வரச்சொல்லி அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இந்த மன்னர் 31 ஆண்டு காலம் கிழக்கு ரோமை ஆட்சி புரிந்தார்;. (ஃபத்ஹுல் பாரி, இர்ஷாதுஸ் ஸாரி)
நபி ஸல் அவர்கள் மன்னர் ஹிரக்ளீயஸுக்கு ஹிஜ்ரி 6-ம் ஆண்டு (கி.பி. 627) கடிதம் எழுதினார்கள். ஹுதைபியாவிலிருந்து திரும்பியபின் இக்கடிதத்தை அவரிடம் சேர்க்குமாறு திஹ்யா (ரளி) அவர்களை நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். அது ஹிஜ்ரீ 7-ம் ஆண்டு முஹர்ரம் மாதம் ஹிரக்ளீயஸிடம் சேர்க்கப்பட்டது. (ஃபத்ஹுல் பாரி)
ஹிரக்ளீயஸ் 'ஹிம்ஸ்' நகரிலிருந்த தமது கோட்டை ஒன்றுக்கு வருமாறு (கிழக்கு) ரோமின் பிரமுகர்கள் அனைவருக்கும் ஆணையிட்டார். (அவர்கள் அங்கு வந்து சேர்ந்ததும்) அந்தக் கோட்டையின் கதவுகளையெல்லாம் பூட்டிவிடும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை பூட்டப்பட்டன. பின்னர் ஹிரக்ளீயஸ் (அந்த அவையிலிருந்தவர்கள்) முன்தோன்றி, 'ரோமானிய சமுதாயத்தாரே! உங்களுக்கு வெற்றியும் நல்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும், உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? 'இந்த இறைத்தூதரை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று பேசினார். இதைக்கேட்ட மாத்திரத்தில் காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப்போன்று கோட்டைக் கதவுகளை நோக்கி அவர்கள் வெருண்டோடி, கதவுகளை நெருங்கியதும், அவை தாளிடப்பட்டிருக்கக் கண்டனர். அவர்கள் வெருண்டோடுவதைப் பார்த்த ஹிரக்ளீயஸ் (நபி ஸல் அவர்கள் மீது) இந்த மக்கள் விசுவாசம் கொள்ளமாட்டார்கள் என்று நிராசையானபோது, 'அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள்' என்று (காவல்களை நோக்கிச்) சொன்னார். (அவர்கள் திரும்பி வந்ததும்) 'நீங்கள் உங்கள் மதத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பைச் சோதிக்கவே நான் சற்று முன்னர் அவ்வாறு பேசினேன். இப்போது (உங்கள் உறுதியை) அறிந்துகொண்டேன்' என்று கூறினார். உடனே (ரோமர்களின் வழக்கப்படி) அனைவரும் அவருக்குச் சிரம்பணிந்தனர். அவரைக் குறித்துத் திருப்தியும் அடைந்தனர். இதுவே (மன்னர் ஹிரக்ளீயஸின் இறுதி நிலைப்பாடாக இருந்தது. (புகாரி – 7, 2941)
ரோமையும் பாரஸீகத்தையும் இஸ்லாமியர்கள் வெற்றிகொள்வார்கள்
عن نافع بن عتبة بن ابى وقاص انه سمع النبى صلى الله عليه وسلم يقول: تغزون جزيرة العرب فيفتح الله لكم وتغزون الروم فيفتح الله لكم وتغزون فارس فيفتح الله لكم وتغزون الدجال فيفتح الله لكم. (مسند احمد – 1544
நாஃபி பின் உத்பா பின் அபீ வக்காஸ் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் 'அரேபிய தீபகற்பத்தை' போரிடுவீர்கள்¢ அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான். பிறகு, 'ரோம்' நாட்டோடு போரிடுவீர்கள்¢ அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான். பிறகு, 'பாரசீகத்தோடு' போரிடுவீர்கள்¢ அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான் என நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்றார்கள்';. (முஸ்னது அஹ்மது – 1544)
கான்ஸ்டாண்டி நோபிள் வெற்றி கொள்ளப்படும்
عن ابى هريرة ان رسول الله صلى الله عليه وسلم قال: لا
تقوم الساعة حتى ينزل الروم بلاعماق, أو بدابق. فيخرج اليهم جيش من المدينة. من
خيار الارض يومئذ. فاذا تصافوا قالت الروم: خلوا بينا وبين الذين سبوا منا
نقاتلهم. فيقول المسلمون: لا. والله! لا نخلى بينكم وبين اخواننا. فيقاتلونهم.
فينهزم ثلت لا يتوب الله عليهم ابدا. ويقتل ثلهم, أفضل الشهداء عند الله. ويفتح
الثلث, لا يفتنون ابدا. فيفتتحون قسطنطينية. (مسلم – 5553)
அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ரோம பைஸாந்தியர், அஃமாக் மற்றும் தாபித் ஆகிய இடங்களில் நிலைகொள்ளதவரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களை நோக்கி மதீனாவிலிருந்து ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாயிருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள், எங்களுக்கும் எங்களில் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டோருக்குமிடையே நாங்கள் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள் என்று கூறுவார்கள். அப்போது, முஸ்லிம்கள், இல்லை¢ அல்லாஹ்வின் மீது ஆணையாக! 'எங்கள் சகோதர்கள் மீது போர் தொடுக்க உங்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்' என்று சொல்வார்கள். ஆகவே, 'ரோமர்கள்' முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது, முஸ்லிம்களில் மூன்றிலொரு பகுதியினர் தோற்று வெருண்டோருவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவேமாட்டான். அவர்களில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த உயிர்த்தியாகிகளாவர். மூன்றிலொரு பகுதியினர் '(ரோமர்களை) வெற்றி கொள்வார்கள்' அவர்கள் (அதன் பின்னர்) ஒருபோதும் சோதனைக்குள்ளாக்கப்படமாட்டார்கள். இவ்வாறு, அவர்கள் 'கான்ஸ்டாண்டி நோபிளை வெற்றி கொள்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (முஸ்லிம் - 5553)
'கான்ஸாண்டி நோபிள்' (குஸ்தன்தீனியா) என்பது இன்றைய துருக்கி நாட்டின் தலைநகரமான இஸ்தான்பூல் (Istambul) தான் அன்று குஸ்தன்தீனியா என அழகை;கப்பட்டுவந்தது. ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடாக இந்நகரம் உள்ளது. அன்றைய 'ரோமப் பைஸாந்தியப்' பேரரசின் அரசியல், மத, கலாச்சார தலை நகரமாக இது விளங்கியது. இது முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்வரும் என நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவ்வாறே, ஹிஜ்ரி 857 ஆம் ஆண்டு (கி.பி.1453) உஸ்மானிய மன்னர்களில் ஒருவரான 'முஹம்மது அல்ஃபாத்திஹ்' இந்நகரத்தைக் கைப்பற்றினார். பின்னர், இது உஸ்மானியப் பேரரசின் தலைநகரமாக மாறியது. 'அஃமாக்' என்பது வட சிரியாவில் உள்ள 'ஹலப்' மற்றும் அன்றைய 'அன்தாக்கியா' ஆகிய நகரங்களுக்கிடையே உள்ள ஓர் இடமாகும். அவ்வாறே, 'தாபிக்' என்பது 'ஹலப்' எனும் நகரத்துக்கு அருகில் அமைந்த ஒரு கிராமத்தின் பெயராகும். இவையெல்லாம் ரோம பைஸாந்தியரான 'இத்தாலியரின்' ஆளுமைக்குக் கீழே இருந்த அன்றைய 'ஷாம்' நாட்டு எல்லைக்குள் அடங்கியவை ஆகும். (தக்மிலா)
தஜ்ஜால் வரும்போது ரோமர்கள் முஸ்லிம்களை தாக்கும்வர்
யுசைர் பின் ஜாபிர் (ரளி) அவர்கள் கூறியதாவது: '(ஒரு முறை இராக்கிலுள்ள) கூஃபாவில் அனல் காற்று வீசியது. அப்போது ஒரு மனிதர், 'அப்துல்லாஹ் பின் மஸ்வூது அவர்களே! யுக முடிவு வந்துவிட்டது' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வந்தார். உடனே சாய்ந்துக்கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரளி) அவர்கள் நேராக எழுந்து அமர்ந்து, 'சொத்துக்கள் பங்கு போடப்படாத நிலையும் போர்ச் செல்வத்தின் மூலம் மகிழ்ச்சியடையாத நிலையும் ஏற்படாத வரையில் யுக முடிவு நாள் ஏற்படாது' என்று கூறிவிட்டு, தமது கரத்தால் (ஷாம் நாட்டின் திசையை நோக்கி) சைகை செய்து, 'இஸ்லாமியரைத் தாக்குவதற்காக எதிரிகளின் படையொன்று ஒன்று திரளும். அவர்களை எதிர்கொள்வதற்காக இஸ்லாமியரும் ஒன்று திரளுவார்கள்' என்று கூறினார்கள். உடனே நான், 'ரோம (இத்தாலிய கிறிஸ்தவர்)களையா (எதிரிகள் என்று) கூறுகிறீர்?' என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரளி) அவர்கள் 'ஆம்' என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறினார்கள்:
அந்தப் போரின்போது கடுமையான பலப்பிரயோகம் இருக்கும். அப்போது முஸ்லிம்கள் முதலில் ஒரு படையை அனுப்புவார்கள். ஒன்று வீர மரணம், அல்லது வெற்றியை இலக்காகக் கொண்டு அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருக்கும்போது இரவு நேரம் குறுக்கிட்டுவிடும். ஆகவே, அவர்களில் எவரும் வெற்றி பெறாமல் இரு அணியினரும் (தாக்குதலை நிறுத்திவிட்டுத் தமது முகாமிற்கு) திரும்பிவிடுவர். ஆனால், முதலில் சென்ற படையினர் (போரில்) அழிந்துவிடுவர். பிறகு (மறுநாள்) முஸ்லிம்கள், ஒன்று வீர மரணம், அல்லது வெற்றி என்ற இலக்கில் மற்றொரு படையை முதலில் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருப்பார்கள். இரவு குறுக்கிடும்போது அவர்களில் எவருமே வெற்றி பெறாமல் திரும்பிவிடுவர். ஆனாலும், முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள்.
பிறகு (மூன்றாம் நாள்)ம், ஒன்று வீர மரணம், அல்லது வெற்றியை இலக்காக்கி மற்றொரு படையை முஸ்லிம்கள் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) மாலை நேரமாகும்வரை போரிட்டு எவருக்கும் வெற்றி கிட்டாமல் திரும்பிவிடுவர். அப்போதும் முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள். நான்காம் நாளாகும்போது முஸ்லிம் (படை)களில் எஞ்சியிருப்பவர்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு அல்லாஹ் தோல்வியையே தருவான். (இருந்தாலும்) அவர்கள் ஏராளமான பேரைக் கொன்றுவிட்டிருப்பார்கள். அதைப் போன்ற ஓர் உயிரிழப்பை உலகம் கண்டிராது. எந்த அளவுக்கென்றால், அவர்களைச் சுற்றி பறவைகள் பறக்கும். அவற்றில் ஒன்றுகூட அவர்களைக் கடந்து செல்ல முடியாமல் செத்து விழும். (அந்த அளவுக்குப் பெரிய பரப்பளவில் அவர்கள் மடிந்து கிடப்பார்கள்). நூறு போர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒரேயொருவர் மட்டுமே எஞ்சுவார்.
அப்போது எந்தப் போர்ச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சி ஏற்படும்? அல்லது எந்தச் சொத்து பங்கிடப்படும்? இவ்வாறே அவர்கள் இருந்துக்கொண்டிருக்கும்போது இதைவிட மிகப் பெரிய பேராபத்து ஒன்றைப் பற்றி அவர்கள் கேள்விப்படுவார்கள். அப்போது ஒருவர் (வந்து), 'உங்கள் குடும்பத்தாரிடையே 'தஜ்ஜால்' வந்துவிட்டான்' என்று கூவியறிவிப்பார். உடனே அவர்கள் தம் கைகளிலுள்ளவற்றை அப்படியே போட்டுவிட்டு (தம் குடுமபத்தாரை) முன்னோக்கி வருவார்கள்.
முன்னதாக (தஜ்ஜாலைப் பற்றி அறிவதற்காக) பத்துக் குதிரை வீரர்களை உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நான் அவர்களுடைய பெயர்களையும் அவர்களுடைய தந்தையின் பெயர்களையும் அவர்களுடைய குதிரைகளின் நிறங்களையும் நன்கறிவேன். அன்றைய நாளில் பூமியின் மீதுள்ள குதிரை வீரர்களில் அவர்களே சிறந்தவர்கள்¢ அல்லது அன்றைய நாளில் பூமியிலுள்ள சிறந்த வீரர்களில் அவர்களும் அடங்குவர். (முஸ்லிம் - 5556)
ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு ஏற்படும்
قال المستورد القرشى عند عمرو بن العاس: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: تقوم الساعة والروم أكثر الناس. (مسلم – 5554)
முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் அல்குறஷீ (ரளி) அவர்கள், அமர் பின் அல்ஆஸ் (ரளி) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு நாள் ஏற்படும்' என்று கூறியதை நான் கேட்டேன்' என்றார்கள். (முஸ்லிம் - 5554)
ரோமர்களின் எண்ணிக்கை என்பது, கிறித்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாக இருக்கலாம். உலகளவில் கிறித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு நாள் ஏற்படும் என இதற்குப் பொருள் கொள்ளலாம். (தக்மிலா)
காலங்கள் உருண்டோடின. உமர் பின் கத்தாப் (ரளி) அவர்களுது காலத்திலேயே ரோமப் பேரரசு வீழ்த்தப்பட்டு முஸ்லிம்களின் கையில் வந்தது. இவ்வாறே கலீஃபா உஸ்மான் (ரளி) அவர்களது காலத்திலேயே பாரசீகம் வீழ்த்தப்பட்டு முஸ்லிம்களின் கையில் வந்தது. முஸ்லிம் கலிஃபாக்கள் கிழக்கு 'ரோமர்களையும் பரசீகர்களையும்' தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டினார்கள். இவ்விரு நாடுகளிலும் இஸ்லாமிய அரசியல் நடைமுறைப்படுத்தப்பட்டன. கஃலிபாக்கள் ஆட்சி முறியடிக்கப்பட்ட பிறகு மறுபடியும் கிறித்தவ ஆதிக்கம் ஓங்கியது. இப்போது, அது கிறித்தவ நாடாகத் திகழ்ந்துக்கொண்டிருக்கிறது.
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக.,
ReplyDeleteஇந்த பதிவில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது மேலும், ரோம பைஸாந்தியர்களை பற்றி இன்னும் அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்., உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கான ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்தால் நலமாய் இருக்கும் சகோதரா.,
+918056362189
جزاك الله خيرا
ReplyDelete